ஐடியா கொடுத்த மாஸ் நடிகர்.. வேண்டுமென்றே ஒதுக்கிய உச்ச நடிகர்.. அதுதான் காரணமாம்
சென்னை: தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் அந்த நடிகர். கடந்த 50 வருடங்களாக அந்த வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போடு வான்டட் இயக்குநருடன் அவர் இணைந்திருக்கிறார். இரண்டு பேரும் சேர்ந்திருக்கும் படம் பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க திரைத்துறையில் கிசுகிசு ஒன்று எழுந்திருக்கிறது.
கோலிவுட்டில் எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே திறமையை வைத்து வந்தவர்கள்தான். அப்படித்தான் இந்த உச்ச நடிகரும். அவர் சினிமாவுக்குள் வந்தபோது கண்டிப்பாக சீக்கிரமே காணாமல் போய்விடுவார் என்றுதான் பலரும் சொன்னார்கள். ஆனால் இவரோ அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தனது திறமையை வளர்ப்பதில் மும்முரமாக இருந்தார்.
அசைக்க முடியாத இடம்: படிப்படியாக முன்னேறிய அவர்; ஒருகட்டத்தில் சோதனை நடிகரைவிடவும் இவரது மார்க்கெட் உயரத்துக்கு சென்றது. சம்பளமும் ஏறியது. படத்துக்கு படம் ஹிட்டாக கொடுத்துக்கொண்டிருந்த அவர் இந்திய அளவில் உச்ச இடத்துக்கு சென்றார். கிட்டத்தட்ட அந்த இடத்துக்கு அவர் சென்று 20 வருடங்களுக்கும் மேல்தான் இருக்கும். இன்றுவரை அந்த இடம் அவருக்கென்றுதான் இருக்கிறது.

பலர் முட்டி மோதினார்கள்: எப்படியாவது அந்த இடத்தை அடைந்துவிட வேண்டும் என்று பலரும் முட்டி மோதினார்கள். அவர்களில் ஒருவர்தான் மாஸ் நடிகர். உச்ச நடிகரின் படங்கள் ஃப்ளாப் ஆனால் பார்ட்டி வைத்து கொண்டாடுவார். சமீபத்தில் உச்சத்தின் படங்கள் சரியாக போகாமல் இருக்க; உடனே மாஸ் நடிகரின் ரசிகர்கள் எல்லாம் இனி அடுத்த உச்ச நடிகர் இவர்தான் என்று சொன்னார்கள். ஆனால் உச்ச நடிகரோ அசால்ட்டாக அந்தப் பேச்சை சிறை படத்திலேயே உடைத்துவிட்டார்.
மாஸ் vs உச்சம்: அப்போதிருந்தே இரண்டு பேருக்கும் இடையே மறைமுகமாக போர் தொடங்கியது. கதைகள் மூலம் அவர்கள் சாடிக்கொண்டார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் இப்போது மாஸ் நடிகரின் ஃபேவரைட் இயக்குநருடன் உச்ச நடிகர் சேர்ந்திருக்கிறார். சொல்லப்போனால் ஆசிரியர் படத்தின்போது அந்த இயக்குநரிடம் நீ உச்ச நடிகருக்கு ஒரு படம் செய்தால் என்னவென்று கேட்டதே அவர்தான். இப்போதோ இரண்டு பேரும் எதிரெதிர் துருவத்தில் நிற்கிறார்கள்.
அவரது ரசிகர்கள் தொடர்ந்து உச்ச நடிகரை தாக்குவதால் மாஸ் நடிகர் மீது உச்ச நடிகர் கோபத்தில் இருக்கிறாராம். முக்கியமாக அவரது தூண்டுதல் பேரில்தான் இதெல்லாம் நடக்கிறது என நினைத்த அவர்; இப்போது நடித்திருக்கும் படத்தின் விழாவில் வேண்டுமென்றே மாஸ் நடிகரை வெறுப்பேற்றுவதற்காகத்தான் மாஸ் நடிகருக்கு போட்டி நடிகராக கருதப்படும் ஒரு நடிகரின் வசனத்தை பேசினார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











