தோழிக்கு அடிமையான நடிகர்.. அம்மணி இந்த வசியம்தான் வைத்தாராம்.. குடும்பம் மயங்கவும் இதான் காரணமா?

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் சர்ச்சையே சந்திக்காத நடிகர்களில் ஒருவராக இருந்தவர் அந்த நடிகர். ஆனால் கடந்த சில காலமாகவே அவரை சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது மனைவியை பிரிந்ததுதான். மனைவியை பிரிந்து இன்னொரு பெண்ணுடன் நெருக்கம் காட்டும் அவர் குறித்து கோலிவுட்டில் புதிய கிசுகிசு எழுந்திருக்கிறது.

சினிமா பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்து முதல் படத்தையே மெகா ப்ளாக் பஸ்டராக கொடுத்தவர் அந்த நடிகர். சாக்லேட் பாயாக கரியரின் ஆரம்பத்தில் வலம் வந்துகொண்டிருந்தவர் ஒருகட்டத்துக்கு மேல் ஆக்‌ஷன் பாதையிலும் கவனம் செலுத்தினார். அதுவும் அவருக்கு கைகொடுக்க ஒரேநேரத்தில் இரட்டை குதிரையில் சவாரி செய்தார். இது ஒருபக்கம் இருக்க பிரபல நடிகையின் மூலம் ஒரு பெண்ணுடன் பழகி காதலில் விழுந்து திருமணமும் செய்துகொண்டார்.

பிரிந்த நடிகர்: பத்து வருடங்களுக்கும் மேலாக நிம்மதியாக குடும்பம் நடத்தி நல்ல பெயரோடு வந்தார். ஆனால் நடிகரின் மனைவியும், மாமியாரும் நடிகரை ரொம்பவே கன்ட்ரோலில் எடுக்க ஆரம்பித்தார்கள். அவர் சம்பாதிக்கும் பணத்தைக்கூட அவருக்கு கொடுக்காமல் வைத்திருந்ததாக பேச்சு உண்டு. இதனால் காண்டான நடிகர் இனியும் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார்.

Gossip in Kollywood about how the woman convinced the family of an actor who separated from his wife

இன்னொரு பெண்ணுடன் நெருக்கம்: மனைவியை பிரியலாம் என்று நடிகர் எடுத்த தைரியமான முடிவுக்கு பின்னால் இன்னொரு பெண் இருக்கிறார். அவருக்கும், நடிகருக்கும் ஏற்பட்ட பழக்கத்தில் மதி மயங்கிவிட்டாராம் நடிகர். முக்கியமாக இத்தனை வருடங்களில் ஒரு பெண்ணுடைய கட்டுப்பாட்டில் இருந்த அவருக்கு; இன்னொரு பெண் வந்து கொடுத்த நிம்மதியும், சுதந்திரமும் நடிகரை ரொம்பவே ஈர்த்துவிட்டதாம்.

வீட்டையும் கன்வின்ஸ் செய்த அம்மணி: இவருடனான காதலை நடிகர் தனது வீட்டில் சொன்னபோது பலத்த எதிர்ப்பாம். நடிகர் எவ்வளவு முயன்றும் கன்வின்ஸ் செய்ய முடியவில்லையாம். அப்படிப்பட்ட நிலைமையில்தான் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் நடிகரின் தோழி, நடிகரின் குடும்பத்தினர் எல்லோரும் கலந்துகொண்டார்கள். அந்நிகழ்ச்சியில் அம்மணிதான் ஓடியாடி முன்னாடி நின்று அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறார். முதல் சந்திப்பிலேயே மெல்ல மெல்ல குடும்பத்தினரின் மனதில் இடம்பிடித்தாராம் அவர்.

ஓபனாக பேசிய தோழி: மேலும் நிகழ்ச்சி மேடையிலும் அந்த நடிகர், தன்னுடைய புதிய பரிமாணத்துக்கு தோழிதான் காரணம் என்று உருக்கமாக தெரிவித்தார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் நடிகரின் குடும்பத்திடம் பேசிய அந்தத் தோழி, 'உங்கள் மகனை எப்போதும் கைவிடமாட்டேன். அவருக்குள் ஏகப்பட்ட திறமைகள் இருக்கின்றன. அவை அனைத்துக்கும் நான் துணையாக இருப்பேன். அவரது மகன்களை சந்திப்பதற்கோ உறவாடுவதற்கோ நான் தடையும் போடமாட்டேன்' என ஏகப்பட்ட விஷயங்களை பேசினாராம். அதையெல்லாம் கேட்ட குடும்பத்தினர் நடிகருக்கு பொருத்தமான ஜோடி என்று சொல்லி அந்த ரிலேஷன்ஷிப்புக்கு ஓகே சொல்லிவிட்டார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X