இரண்டு மனைவிகளும் வேண்டும்.. டீல் பேசிய நடிகர்.. இந்த பூனை பால் மட்டுமில்லை பீரே குடிக்குதே!

By Staff

சென்னை: பலரது வயிறையும் நிறைய வைத்த பிரபலம் நடிகராக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் நல்ல வரவேற்பைதான் பெற்றது. அவருக்கும் இன்டஸ்ட்ரியில் நல்ல பெயர் இருந்தது. இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதற்கேற்ப அவர் ஒரு விஷயத்தை செய்தது பெரிய பஞ்சாயத்தை கூட்டியது. அதாவது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இன்னொரு திருமணம் செய்திருக்கிறார்.

சில்லென்ற மாவட்டத்தை சேர்ந்த இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பிருந்தே பிரபலமாகிவிட்டார். பல செலிபிரிட்டிகளின் ஆஸ்தான சமையல் கலைஞராக விளங்கியவருக்கு ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் நடித்த படம் வணிக ரீதியான வெற்றியை பெறவில்லைதான்; அதேசமயம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. நன்றாக நடிக்கிறாரே என்றுதான் பலரும் பேசினார்கள்.

நடிக்கவில்லை ஆனால் நடித்திருக்கிறார்: அதற்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதேசமயம் அனைத்து பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கும் முதல் ஆளாக நின்றார். அதனால் அவர் மீது விழுந்த வெளிச்சம் கொஞ்சம்கூட குறையவில்லை. நடிகரும் அதற்கேற்றவாறு செயல்பட்டார். அவ்வப்போது அவரை க்ரஷ் மெட்டீரியலிலும் பெண்கள் சேர்த்துவந்தார்கள். அதுமட்டுமின்றி பார்ப்பதற்கு சாதுவாகவே தெரிந்தார். ஆனால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதற்கேற்ப போல இப்போது அவர் செய்திருப்பதை பார்த்தால் நன்றாக நடித்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

Gossip in Kollywood actor Deal talked to his second wife about wanting to live with his first wife

முதல் திருமணம்: அதாவது இந்த பூனை முதலில் இசையை திருமணம் செய்துகொண்டது. அந்தத் தம்பதிக்கு குழந்தைகளும் இருக்கிறார்கள். பூனையின் மனைவி பெரிய கட்சி ஒன்றில் முக்கியமான பொறுப்பை வகுத்துவருகிறார். அதுமட்டுமின்றி அவர் பார்க்கும் வேலையும் மிகச்சிறந்த வேலைதான். சந்தோஷமாக இசையுடன் குடும்பம் நடத்தி வந்த பூனையின் பார்வை இன்னொரு பெண் மீது விழுந்தது.

இரண்டாவது திருமணம்: உடனடியாக இந்த பூனை அந்தப் பெண்ணையும் காதலிக்க தொடங்கி இரண்டாவது திருமணமும் செய்துகொண்டது. அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட பெண் ஆறு மாதம் கர்ப்பம் வேறு. இப்படி அந்தப் பூனையின் தில்லாலங்கடி வேலைகளை பார்த்த மற்றவர்கள் ஷாக்காகியிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க தன்னுடைய முதல் மனைவியை விடவும் மனதில்லையாம்.

அப்படி விட்டால் முதல் மனைவி பார்க்கும் வேலையை வைத்து தனக்கு வாழ்நாள் முழுவதும் குடைச்சல் வரும் என கணக்கு போட்ட பூனை; இரண்டாவது மனைவியின் கை, கால்களில் விழுந்து முதல் மனைவியுடனும் வாழ்வதற்கு பெர்மிஷன் கேட்டுவருகிறதாம். அதற்கு அந்த பெண்ணோ கட் அண்ட் ரைட்டாக நோ சொல்லிவிட்டாராம். இருந்தாலும் மனம் தளராத பூனை கொஞ்சம் கொஞ்சமாக 2வது மனைவியின் மனதை மாற்ற ஆரம்பித்துவிட்டதாம். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேள்வி கேட்டால் இந்தப் பூனை இரண்டு பீரே அடிக்கிறதே என்று திரைத்துறையில் பேச்சுக்கள் சத்தமாக கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X