உச்ச நடிகரின் குடும்பத்தில் நடிகரின் திருவிளையாடல்.. சொத்தை அபகரிக்க மனைவியின் தங்கைக்கும் ரூட்?
சென்னை: கோலிவுட்டில் கடந்த சில காலமாகவே பரபரப்பாக பேசப்படுவது என்னவென்றால் உச்ச நடிகரின் குடும்பத்துக்குள் நடக்கும் குழப்பம்தான். மகளுக்கு நேர்ந்த பிரச்னை எப்போது தீரும் என்று தவம் இருந்தவருக்கு; வரம் கிடைத்ததுபோல் மகளும், மருமகனும் மீண்டும் இணையப்போவதாக சில தகவல்கள் வெளியாகி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம். சூழல் இப்படி இருக்க நடிகரின் மருமகன் பற்றி புதிய கிசுகிசு ஒன்று கோடம்பாக்கத்தில் பரவிவருகிறது.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் அந்த நடிகர். ரொம்பவே கஷ்டப்பட்டு உழைத்து இந்த உச்ச இடத்துக்கு அவர் வந்திருக்கிறார். சொத்தும் பல்லாயிரம் கோடி ரூபாய் சேர்ந்துவிட்டது. சூழல் இப்படி இருக்க தனது மகள் ஒரு மிடில் கிளாஸ் பையனை காதலிப்பதை தெரிந்துகொண்டார் நடிகர். முதலில் கடுமையான எதிர்ப்பு வலுத்தது. ஆனால் போகப்போக மகளின் பிடிவாதத்துக்கு முன்பு தன்னுடைய கௌரவம் தோற்றுப்போனதை உணர்ந்து திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார்.

மகிழ்ச்சியான வாழ்க்கை: ஒருவழியாக மகளுக்கு திருமணத்தை ஜாம் ஜாம் என்று நடத்திவைத்தார். பிறகு மருமகனும் தனது கரியரில் பீக்கிற்கு சென்றார். வரிசையாக படங்கள் ஹிட்டடித்தன. முக்கியமாக இவரும் இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை பெற ஆரம்பித்தார். சம்பளமும் மெல்ல மெல்ல உயர்ந்தது. மேலும் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக இயக்குநராகவும் ஆக்கினார். இப்படி இரண்டு பேரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியோடு வாழ்ந்துவந்தனர்.
பிரிவு: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை; தாங்கள் பிரிகிறோம் என்று இருவரும் சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தனர். அந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியாக்கியது. முக்கியமாக உச்ச நடிகரை கொஞ்சம் பாடுபடுத்திவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே தனது இரண்டாவது மகளும் விவாகரத்து ஆகி இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். இப்போது மூத்த மகளுமா என்று ரொம்பவே அவர் அப்செட்டாகிவிட்டாராம். சூழல் இப்படி இருக்க இப்போது மூத்த மகளும் தனது பழைய திருமண வாழ்க்கையையே ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருப்பதை சமீபத்தில்தான் தெரிந்துகொண்டார் அவர்.
பிரச்னை: நிலைமை இப்படி இருக்க நடிகரின் மருமகன் பற்றி புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது. அதாவது தனது மனைவியுடன் இருந்தபோதே தன் மனைவியின் தங்கையிடம் நெருக்கமாகத்தான் பழகினாராம் நடிகர். இருவரும் சேர்ந்து அடிக்கடி பார்ட்டிகளையும் செய்தார்களாம். ஒருகட்டத்தில் அந்தப் பெண் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். அதற்கு காரணமே நடிகரும், அந்தப் பெண்ணும் செய்த பார்ட்டி கலாசாரம்தான் என்ற பேச்சும் உண்டு.
நடிகரின் திருவிளையாடல்: இந்நிலையில் தனது மனைவியின் தங்கையையும் நாமே திருமணம் செய்துகொண்டால் உச்ச நடிகரின் சொத்து அனைத்தும் நமக்குதான் என்று நடிகர் பிளான் போட்டாராம். இது நடிகரின் மாமியாருக்கு அரசல் புரசலாக தெரிந்துவிட; உடனடியாக இரண்டாவது மகளுக்கு அவர் காதலிக்கும் நபரையே இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என தனது கணவரை வலியுறுத்தி சம்மதிக்க வைத்தாராம். விஷயத்தை தெரிந்துகொண்ட உச்ச நடிகர்; மருமகன் நமது குடும்பத்திலேயே திருவிளையாடல் செய்ய பார்த்திருக்கிறாரே என்று உச்சக்கட்ட அதிர்ச்சி நிலைக்கு சென்றாராம்.


Click it and Unblock the Notifications











