மகளின் வாழ்க்கை இப்படி போய்விட்டதே.. உச்சக்கட்ட சோகத்தில் உச்ச நடிகர்.. ரொம்ப புலம்புறாராம்

By Staff

சென்னை: கோலிவுட்டையே அதிரவிட்ட சம்பவங்களில் ஒன்று உச்ச நடிகரின் வீட்டில் நடந்த பிரச்னைதான். பல வருடங்களுக்கு முன்பு தனது மகள் ஆசைப்பட்டார் என்பதற்காக அவர் காதலித்தவருக்கே மணமுடித்து கொடுத்தார் இந்த நடிகர். மகளின் வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென அவர்களது வாழ்க்கையில் இடி விழுந்தது. இதனால் உச்ச நடிகர் கொஞ்சம் அப்செட்டானார். எப்படியாவது மீண்டும் மகளை மருமகனோடு சேர்த்து வைத்துவிட எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் அது முடியவில்லை.

தமிழ் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய திருமணங்கள் எத்தனையோ நிகழ்ந்திருக்கின்றன. அப்படி ஒரு திருமணம்தான் உச்ச நடிகரின் மகளுக்கு நடந்த திருமணம். ஏனெனில் நடிகரின் மகள் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர்; அப்போது பெரிய அளவில் எல்லாம் இல்லை. அவரது குடும்பம் லோயர் மிடில் கிளாஸ் என்ற நிலையில்தான் இருந்தது. ஆனாலும் மகளின் ஆசைக்காக அந்தத் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டாராம் காந்த நடிகர். அதனை பார்த்து பலரும் பொறாமைதான் பட்டார்கள்.

gossip tamil cinema

சுமூகமான வாழ்க்கை: திருமணம் முடிந்த கையோடு மகளும், மருமகனும் தனிக்குடித்தனம் சென்றார்கள். இரண்டு பேருமே தங்களது வாழ்க்கையை மிக அருமையாக நகர்த்திக்கொண்டிருந்தார்கள். அதனைக் கண்டு உச்ச நடிகருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். எப்படியோ இரண்டு பேரும் நல்லபடியாக வாழ்கிறார்களே என்று அடிக்கடி தனது மனைவியிடம் பூரித்துப்போவாராம். மேலும் தனக்கு இரண்டு பேரன்கள் பிறந்ததும் உச்சக்கட்ட நடிகர் அவ்வளவு நிம்மதியாக இருந்தாராம்.

வந்த புயல்: ஆனால் அந்த நிம்மதியை கெடுக்கும் விதமாக மகளின் வாழ்க்கையில் பெரும் புயல் அடித்தது. கணவரின் தவறான செயல்பாடுகள் கொஞ்சம் ஓவர் டோஸாகவே போய்க்கொண்டிருக்க; பொறுத்து பொறுத்து பார்த்த மகளோ பொங்கி எழுந்து பிரிய முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. அதனை தனது தந்தையிடம் சென்று சொல்ல; உச்ச நடிகருக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியாம். மகன்கள் வளர்ந்துவிட்டார்கள்; இப்போதைக்கு இந்த பிரிவு சரியாக இருக்காது என்று மகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

மருமகனிடமும் பேச்சுவார்த்தை: மகளுக்கு அறிவுரை வழங்கியதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தனது நிலையிலிருந்து இறங்கி வந்து தன்னுடைய மருமகனிடமும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தினாராம். மருமகனோ மாமனார் மீது இருக்கும் மரியாதை காரணமாக அந்த இடத்தில் ஆமாம் சாமி போட்டுவிட்டு மனைவியை பிரிந்தே தீர்வது என்ற முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார். உச்ச நடிகரின் மகளும் அதே மனநிலையில்தான் இருந்திருக்கிறார். முடிவில் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.

புலம்பும் நடிகர்: ஆனால் தன்னுடைய பேரன்களுக்காக எப்படியாவது மகளையும், மருமகனையும் சேர்த்து வைத்துவிடலாம் என்கிற நம்பிக்கை பொய்த்துப்போனதை உச்ச நடிகரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையாம். முக்கியமாக மகள் இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் வரப்போகும் கணவர்; மகளின் மகன்களை எப்படி அணுகுவார்; அதுமட்டுமின்றி தன்னுடைய பேரன்கள் வரப்போகிறவரிடம் எப்படி பழகுவார்கள்; அப்படியே பழகினாலும் அது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. இந்த விவகாரத்தில் வென்றது என்னவோ மகளும், மருமகனும்தான். ஆனால் தோற்றது தானும், தன்னுடைய பேர பிள்ளைகளும்தான் என கவலையில் இருக்கிறாராம். மேலும் தனக்கு நெருக்கமானவர்களிடம் இரண்டு மகள்களில் எப்போதும் மூத்த மகள் மீது எனக்கு கொஞ்சம் கூடுதல் பாசம் இருக்கிறது. எனக்கு வயதான காலத்தில் மகளின் வாழ்க்கை இப்படி போய்விட்டதே இதை எப்படி சரிக்கட்டுவது என்று புலம்பி தள்ளுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X