நடிகையுடன் கோவாவில் கூத்து?.. தனி விமானத்தில் வேறு பயணம்.. மழை நேரத்தில் சூட்டை கிளப்பிய மாஸ் நடிகர்

By Staff

சென்னை: கோலிவுட்டின் மாஸ் நடிகர் என்று பெயர் அடுத்த அவர் தனது வாழ்க்கையில் தற்போது அடுத்தக்கட்டத்தில் இருக்கிறார். அதற்காக அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும்; நடிகரை சுற்றி வரும் சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லையே என்று கவலையும் அடைந்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட நடிகையுடன் கோவாவுக்கு தனி விமானத்தில் சென்றதால் மேற்கொண்டு அவருக்கு அவப்பெயர் கிடைத்திருக்கிறது. இந்த விஷயம்தான் கோடம்பாக்கத்தில் இந்த மழை நாளிலும் சூடாக பறந்துகொண்டிருக்கிறது.

வாரிசு நடிகர் என்று பெயர் பெற்ற அவர் தனது திறமையால் மட்டுமே மிகப்பெரிய இடத்துக்கு வந்திருக்கிறார். அவருக்கென்று இந்தியா முழுவதும் ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக அவரது ஒவ்வொரு படமும் அசால்ட்டாக நூறு கோடி ரூபாய் க்ளப்பில் சேர்வதால் தயாரிப்பாளர்கள் அவரை நம்பி பணம் போடுவதற்கு கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. அப்படி அவர் கடைசியாக நடித்த நான்கு படங்களுமே சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூலில் சாதனையை நிகழ்த்திவிட்டன.

Gossip Tamil Cinema

அடுத்தக்கட்டம்: நடிகரின் ஃபார்மை பார்க்கும்போது கண்டிப்பாக மூத்த நடிகரின் இடத்தை இவர் விரைவில் தனது கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் பல வருட திட்டத்தை செயல்படுத்தும் விதமாக இன்னொரு களத்தில் அவர் குதித்திருக்கிறார். யாரும் அவரது எண்ட்ரியை நிச்சயம் எதிர்பார்க்கவில்லைதான். திடீரென்று நடந்த அவரது எண்ட்ரி அவரது ரசிகர்களை உச்சக்கட்ட உற்சாகத்தில் கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது.

இருந்தாலும் சோகம்தான்: அவரது எண்ட்ரி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் இன்னொரு சோகத்தை கொடுத்திருக்கிறது. அதாவது வந்ததும் வராததுமாக அதிகாரத்தில் இருப்பவர்களை போட்டு பார்க்கிறார் அவர். அது அவருக்கு பலமாக இருந்தாலும்; தமிழ்நாட்டுக்கு ஒவ்வாத ஆட்களோடு அவர் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகத்தை சீனியர்கள் பலர் முன்வைத்து வருவதால் இன்னும் இரண்டு வருடங்களில் நடக்கவிருக்கும் மிகப்பெரிய யுத்தத்தில் நடிகரின் இருப்பு காணாமல் போய்விடுமோ என்ற அச்சமும் அவரது தொண்டர்களாகிய ரசிகர்களுக்கு எழுந்திருப்பதுதான் எதார்த்தம்.

நடிகையுடன் சகவாசம்: இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே நடிகருடன் ஒரு நடிகையையும் சேர்த்து வைத்து கிசுகிசுத்தார்கள். அதற்கு நடிகரும், நடிகையும் அமைதியாக இருந்தாலும்; கிசுகிசு அடங்கியபாடில்லை. அதுமட்டுமின்றி இந்த நடிகைக்காக தனது மனைவியையே ஒதுக்கி வைத்துவிட்டார் என்ற பேச்சுக்களும் எழுந்திருப்பதால்; அந்தப் பேச்செல்லாம் பொய் என்று நிரூபிக்கும்படி தங்கள் தலைவரின் செயல்பாடு இருக்க வேண்டும்; இல்லையென்றால் யுத்தத்தில் பேரிழப்பு நிச்சயம் என்றும் அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

ஓயாத நடிகர்: ஆனால் அதெல்லாம் அவருக்கு கேட்டபாடில்லை. சமீபத்தில் கோவாவில் ஒரு பிரபலத்தின் விசேஷம் நடந்தது. அதில் யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகர் கலந்துகொண்டார். சரி உடன் நடித்தவரின் விசேஷத்துக்குத்தானே சென்றிருக்கிறார் என்று அதை கடந்து போகும் நேரத்தில்; பூதாகரமாக ஒரு விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது அந்த விசேஷத்துக்கு தானும் தன்னுடைய உதவியாளர்கள் மட்டும் செல்லாமல் ஏற்கனவே கிசுகிசுக்கப்படும் நடிகையையும் தனி விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறாராம் அவர்.

இதனைப் பார்த்த ரசிகர்களோ இவ்வளவு பெரிய யுத்தத்தில் நாம் அவருக்காக நின்றுகொண்டிருக்கிறோம். இவர் என்னவென்றால் அந்த நடிகையுடன் தனி விமானத்தில் ஊர் சுற்றி கூத்தடிக்கிறாரே. இதெல்லாம் அவர் தெரிந்துதான் செய்கிறாரா?.. இந்த ஒரு விஷயத்தை வைத்து யுத்த களத்தில் அவரை வீழ்த்த நினைப்பவர்கள் எளிதாக வாள் சுழற்றுவார்களே.. அது ஏன் அவருக்கு புரியவில்லை என்று தங்களுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முக்கியமாக மழை நேரத்தில் களத்தில் இல்லாமல் ஏதேதோ செய்துகொண்டிருக்கிறாரே இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ என்றும் கவலையடைந்திருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X