ஜில் நடிகையிடம் விழுந்த மன்னர் நடிகர்.. டைவர்ஸ் கேட்கும் மனைவி.. பிரித்து வைத்த மகன்
சென்னை: சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்தவர் இந்த நடிகர். எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று பெரிய தவம் இருந்து கடுமையாக உழைத்து இன்று மிகப்பெரிய நிலையை அடைந்திருக்கிறார். சிறந்த நடிகர் என்ற பெயரை அவர் பெற்றிருந்தாலும் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக் என்ற பேச்சும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் நடிகையுடன் அவருக்கு இருந்த சகவாசம் சிக்கலில் வந்து நிற்கிறதாம்.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் அவர். இந்த நிலையை அவர் அடைவதற்கு ஏராளமான கஷ்டங்கள், அவமானங்களை சந்தித்திருக்கிறார். சினிமாவில் என்ன வேலை கிடைத்தாலும் அதை அர்ப்பணிப்போடு செய்துவந்த அவருக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்ட அந்த நடிகர் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்துக்கொண்டே இருந்தார்.
வேற்று மொழிகளிலும்: இரண்டே வருடங்களில் அவரது கரியர் உச்சத்துக்கு சென்று அவரை டாப் நடிகர்களின் வரிசையில் கொண்டு வந்து நிறுத்தியது. தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளுக்கும் நடிக்க சென்ற அவர்; அங்கும் தனக்கான தனி மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். கோலிவுட்டில் நடிகராகவே அரும்பாடு பட்ட அவர்; இன்று மற்ற மொழிகளிலும் கலக்கிவருவதை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் பட்டிருக்கிறார்கள்.

பெண்கள் விஷயத்தில்: நடிகருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இன்டஸ்ட்ரியை பொறுத்தவரை மிகச்சிறந்த மனிதர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி ஈகோவே பார்க்கமாட்டார். யாராக இருந்தாலும் வாஞ்சையோடும், இயல்போடும் பேசுவார் என்றுதான் பலரும் சொல்வார்கள். அதேசமயம் பெண்கள் விஷயத்தில் அவர் கொஞ்சம் வீக் என்ற பெயரும் இருக்கிறது.
ஜில் நடிகையுடன்: தன்னுடைய கரியரின் ஆரம்பத்திலிருந்தே ஜில் நடிகையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாராம் மன்னர் நடிகர். அதனால்தான் இரண்டு பேரும் சேர்ந்து தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார்களாம். முக்கியமாக தனது சம்பளத்தில் ஒரு பங்கை அந்த நடிகைக்காக செலவு செய்வதையும் வாடிக்கையாக்கியிருக்கிறார். இது ஆரம்பத்தில் நடிகரின் மனைவிக்கு தெரியாமல் இருந்திருக்கிறது.
டைவர்ஸ் கேட்ட மனைவி; பஞ்சாயத்து செய்த மகன்: ஒருகட்டத்தில் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து பேய் ஆட்டம் ஆடிவிட்டாராம். தொடர்ந்து நடிப்பதோடு சரி; வேறு எந்த உறவும் இல்லை என நடிகர் சமாளித்தாலும்; மனைவியார் கேட்கும் மன நிலைமையில் இல்லையாம். இப்போதே அந்த நடிகையுடன் இருக்கும் தொடர்பை அறுத்தெறிய வேண்டும் இல்லையென்றால் டைவர்ஸ்தான் என கம்பி நீட்ட; உள்ளே வந்த மகனோ தந்தையிடம் பக்குவமாக பேசி புரியவைத்து நடிகையிடமிருந்து நடிகரை ஒருவழியாக பிரித்துவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











