அந்த நடிகருடன் தொடர்பு உண்மையா?.. நெருக்கடி கொடுத்த காதலர்.. திருமணத்துக்கு ஓகே சொன்ன நடிகை?
சென்னை: நடிகைக்கு மிக விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக அம்மணி பீக்கில் இருக்கும்போது இப்படி திருமணம் செய்துகொள்கிறாரே என்று பலரும் கேள்வி கேட்டு வரும் சூழலில் அவரது திருமணம் குறித்து புதிய கிசுகிசு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதுதான் கோலிவுட்டில் இப்போது அதிகம் முணுமுணுக்கப்பட்டுவருகிறது.
சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்தில் பிறந்தாலும் இந்த நடிகைக்கு முதலில் நடிப்பதற்கு அவரது குடும்பத்தினர் அனுமதி கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஒரு மிடில் கிளாஸ் பெண்ணை தாய், தந்தை எப்படி வளர்ப்பார்களோ அப்படித்தான் அவர்களும் வளர்த்தார்கள். நடிகையும் அவ்வாறே வளர்ந்தார். இருந்தாலும் ஒருகட்டத்தில் நடிகைக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வளர்ந்துவிட; வேறு வழியின்றி குடும்பத்தினரும் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார்கள்.

நல்ல நடிகை: குடும்பத்தினர் பெர்மிஷன் கிடைத்த கையோடு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை திறம்பட வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில் முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடிப்போட்டு நடித்தார். ஆனால் அவர் கிளாமராக நடிக்கமாட்டேன் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
கிசுகிசு: கிளாமராக நடிக்காமல் ஹோம்லியாகவே நடித்து வந்ததால் என்னவோ பெரிதாக எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்தார் அம்மணி. சூழல் இப்படி இருக்க மிகப்பெரிய நட்சத்திர நடிகருடன் நடித்தார் வெளிச்ச நடிகை. அப்போதிருந்து அம்மணிக்கு ஏழரை பிடித்தது. அதாவது நடிகையை அந்த நடிகர் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவரை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக தனது வீட்டுக்கு அருகிலேயே குடி வைத்திருக்கிறார் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டது.
தொடர் கிசுகிசு: அவரோடு மட்டுமின்றி இன்னொருவருடனும் நடிகையை இணைத்து கிசுகிசு எழுந்தது. ஆனால் அவை அனைத்தும் பொய் என்றும்; தனது மகள் குறித்து இப்படியெல்லாம் பேச வேண்டாம் என்றும் நடிகையின் தந்தை உருக்கமாக பேசியிருந்தார். நிலவரம் இப்படி இருக்க கடந்த பல வருடங்களாகவே நடிகை ஒருவர் காதலித்துவந்ததாகவும் அவர்கள் இரண்டு பேருக்கும் மிக விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கடந்த சில நாட்களாகவே திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.
காரணம் என்ன?: நடிகை இப்போது தனது கரியரின் உச்சத்தில் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க எதற்காக நடிகை இப்போது திருமணம் செய்துகொள்கிறார் என்ற கேள்விகள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அதற்கு காரணம் அவரது காதலர்தான் என்று பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதாவது நடிகரோடு நடிகையை இணைத்து எழுந்த கிசுகிசுவை ஆரம்பத்தில் காதலர் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டாராம். ஆனால் அந்த கிசுகிசு நாளடைவில் பூதாகரமாக வெடித்ததை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையாம்.
அதுமட்டுமின்றி கிசுகிசு எழுந்தபோதெல்லாம் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று காதலர் கேட்க; நடிகையோ தட்டி கழித்துவந்தாராம். இதனால் வந்த கிசுகிசு ஒருவேளை உண்மைதானோ என்று எண்ணிய காதலர்; உடனடியாக திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் இப்போதே விலகிவிடலாம் என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். இதனால் அச்சமடைந்த நடிகையின் குடும்பத்தினர் உடனே அவரை திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும் என்று ஆர்டர் போட்டதன் பேரில் நடிகை இந்தத் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டுவிட்டாராம். ஆகமொத்தம் நடிகையின் திடீர் திருமணத்துக்கு அந்த நடிகர்தான் காரணம் என்று கிசுகிசு கிளம்பிவிட்டது.


Click it and Unblock the Notifications











