வீட்டுக்கு வந்த கணவரின் உறவினர்.. மயங்கிய நடிகையின் உல்லாசம்.. செம கூத்தாம்.. டைவர்ஸ் தயாரோ?

By Staff

சென்னை: கோலிவுட்டில் இப்போது லேட்டஸ்ட்டாக ஒரு கிசுகிசு ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது ஃபேமஸான நடிகையாக திகழ்ந்த அவர் சினிமாவை சேர்ந்தவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டார். செம லவ்வோடு நடந்தது அவர்களது திருமணம். ஆனால் இப்போது அவர்களது திருமண வாழ்க்கை பிரச்னைகளோடு நகர்ந்துகொண்டிருக்கிறதாம். அதற்கு காரணமே அந்த நடிகைதானாம்.

தமிழ் சினிமாவில் அந்த நடிகை கொடி கட்டி பறக்கவில்லை என்றாலும் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார். முதலில் வேறு பெயரோடு அறிமுகமான அவர் காலம் செல்ல செல்ல தனது பெயரை மாற்றினார். அதற்கு அந்தப் பெயர் ராசி இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொன்னதாக செய்திகள் வெளியானதும் நினைவுகூரத்தக்கது. அந்தப் பெயர் மாற்றிய பிறகு நடிகைக்கு பட வாய்ப்புகளும் ஓரளவுக்கு வர ஆரம்பித்தன என்பதும் உண்மைதான்.

Gossip Tamil Cinema

செம பெயர்: அப்படிப்பட்ட சமயத்தில்தான் சர்ச்சைக்கு பெயர் போன இயக்குநரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. அதேபோல் நடிகைக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இதன் காரணமாக கோலிவுட்டில் மிகப்பெரிய ரவுண்டு வரலாம் என்று கணக்கு போட்டிருந்தார் அம்மணி. ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக குறைந்த அளவிலான பட வாய்ப்புகளே கிடைத்தன.

சர்ச்சையான படம்: இந்தச் சூழலில் இன்னொரு சர்ச்சை இயக்குநர் இயக்கத்தில் நடித்தார் நடிகை. அந்தப் படம் கொஞ்சம் விவகாரமான உறவு முறையை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்தது. ஆனால் அதையெல்லாம் நினைத்து கவலைப்படாத நடிகை அப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அதேபோல் இன்னொரு படத்தில் கிளாமர் தூக்கலாகவே காட்டி நடித்திருந்தார் நடிகை. இப்படி பல முயற்சிகளை செய்து பார்த்தும் நடிகையால் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை.

திருமணம்: இனியும் சினிமாவை நம்பியிருந்தால் பிழைப்பு ஓடாது என்பதை உணர்ந்துகொண்ட நடிகை சினிமாவை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் அந்தத் திருமணம் ஜோராக நடந்தது. அவர்களது திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில காலமாகவே கணவருக்கும், மனைவிக்கும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுவருவதாக தெரிகிறது.

என்ன நடந்தது?: அதாவது நடிகை கொஞ்சம் மாடர்ன் கலாசாரத்தில் ஊறியவர். அதிகம் பார்ட்டிகளுக்கு சென்றுகொண்டிருந்தாராம். கணவரும் மனைவியின் மீது உள்ள காதலின் காரணமாக பெர்மிஷன் கொடுத்து வந்தாராம். ஒருமுறை நடிகை சென்ற பார்ட்டிக்கு கணவரும், அவரது உறவினரும் சென்றார்கள். மூவரும் நிறை போதையில் வீடு திரும்பியிருக்கிறார்கள். அன்றிலிருந்து நடிகைக்கும் கணவரின் உறவினருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.

டைவர்ஸுக்கு தயார்?: ஒருகட்டத்தில் அந்த உறவினருக்கும் நடிகைக்குமான பழக்கம் பல பார்ட்டிகள் வரை சென்றனவாம். வழக்கம்போல் ஒருமுறை உறவினரும், நடிகையும் பார்ட்டிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அப்படி இப்படி இருந்தார்களாம். அந்த சமயம் பார்த்து கணவர் வீட்டுக்கு வர அலங்கோலமாக இருந்த இருவரையும் பார்த்து உச்சக்கட்ட அதிர்ச்சியாகிவிட்டாராம். அதனை மறந்துவிடலாம் என்று நடிகை சொன்னாலும் மறக்க முடியாமல் தவித்துவரும் கணவர்; நடிகையை டைவர்ஸ் செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். எனவே இருவரது விவாகரத்து குறித்த விஷயம் விரைவில் வெளியே வரலாம் என்று கிசுகிசுக்கிறார்கள் கோலிவுட்டினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X