நடிகைக்காகத்தான் இந்த சண்டையா?.. நடிகருக்கும், முக்கிய புள்ளிக்குமான போருக்கு காரணம் அதுதானாம்

By Staff

சென்னை: அந்த நடிகை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் கோலோச்சியிருக்கிறார். அதனைப் பார்த்து பலரும் தங்களது ஆச்சரியத்தையே கொடுத்திருக்கின்றனர். வயது 40ஐ தொட்டாலும் தனது அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இதில் பிரச்னை என்னவென்றால் ரசிகர்களை மட்டுமில்லாமல் நடிகர் ஒருவரையும் கட்டிப்போட்டு வைத்திருப்பதுதான் என கிசுகிசு சமீபகாலமாகவே எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் ஒரு நடிகை 5 வருடங்கள் தாக்குப்பிடிப்பதே பெரிய விஷயம். ஆனால் இந்த நடிகையோ அசால்ட்டாக பல வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கிறார். இடையில் அவருக்கு சின்ன சறுக்கல் வந்தாலும் சுதாரித்துக்கொண்ட அம்மணி தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கம்பேக் கொடுத்தார். இதன் காரணமாக இப்போது இருக்கும் இளம் நடிகைகளின் வயிற்றில் புளியை கரைத்தது. வெறும் அழகு மட்டுமில்லாமல் திறமையும் அந்த நடிகைக்கு இருந்ததால்தான் அவரால் இன்றளவும் நிற்க முடிகிறது.

gossip kollywood

சர்ச்சை: இப்போது அவர் டாப் 3 இடத்துக்குள்தான் இருக்கிறார். அவரது கைகளில் இப்போது பெரிய ஹீரோக்களின் படங்கள் சில உள்ளன. அதுமட்டுமின்றி கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் உள்ள படங்களும் வைத்திருக்கிறார். இப்படி தன்னை படுபிஸியாக வைத்திருக்கும் அவரை சுற்றி சில சர்ச்சைகளும் சமீபத்தில் எழுந்தன. ஆனால் அம்மணிக்கு சர்ச்சையை சந்திப்பது ஒன்றும் புதிது இல்லை என்றாலும் இந்த முறை வேறு மாதிரியான சர்ச்சை ஒன்று வந்திருக்கிறது.

நடிகையின் கட்டுப்பாட்டில்தான் எல்லாமே: அதாவது தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே குறிப்பிடத்தக்க நடிகர் ஒருவருடன் பல வருடங்களுக்கு முன்பே இணைத்து பேசப்பட்டார் நடிகை. நடிகைக்கு நடிகர் நகை, பணம் என அள்ளி கொடுத்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. பிறகு விஷயம் விபரீதம் ஆனதால் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று அப்போது பேசப்பட்டது. இருவரும் சேர்ந்தும் நடிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க மீண்டும் இணைந்து நடிக்க ஆரம்பித்ததிலிருந்து கிசுகிசு பரவ ஆரம்பித்திருக்கிறது.

முக்கிய புள்ளியும்: இதற்கிடையே நடிகை ஒரு முக்கிய புள்ளியையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாராம். ஆனால் புள்ளியுடன் இருக்கும் தொடர்பை நடிகருக்கு தெரியாமல் வைத்திருந்தாராம். நடிகரும், முக்கிய புள்ளியும் இணைந்த ஒரு படத்தில் நடிகைதான் ஹீரோயின். அந்த சமயத்தில்தான் நடிகையுடனான கெமிஸ்ட்ரி முக்கிய புள்ளிக்கும் பரவிவிட்டதாம். சூழல் இப்படி இருக்க புதிய கிசுகிசு ஒன்று கோலிவுட்டில் பரவ ஆரம்பித்திருக்கிறது.

இதுதான் காரணமா?: அதாவது நடிகர் இப்போது புது அவதாரம் எடுத்திருக்கிறார். அந்த அவதாரத்தில் சிலரை சகட்டு மேனிக்கு விமர்சிக்கிறார். அதற்கு முக்கிய காரணமே அந்த நடிகையை முக்கிய புள்ளி தன்னிடமிருந்து சில நாட்கள் பிரித்து வைத்திருந்தது என்று கூறுகிறார்கள். ஆனால் நடிகையோ இரண்டு பேரையும் சமமாக பேலன்ஸ் செய்துதான் ஓட்டிக்கொண்டிருந்தாராம். இப்போது இருவரது சண்டையும் வீதிக்கு வந்துவிட்டதால் இந்த விஷயத்திலிருந்து எப்படியாவது நழுவிவிட வேண்டுமென நடிகை மாஸ்டர் பிளானை போட்டுக்கொண்டிருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X