திருமணம் மட்டும் செஞ்ச.. நீயும் நானும் அந்த மாதிரி இருந்த வீடியோ லீக்காகும்..நடிகரை மிரட்டும் நடிகை?
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அம்மணி. அவரிடம் அழகு, திறமை, கவர்ச்சி என அத்தனையும் இருந்தது. இதன் காரணமாக மிகப்பெரிய ரவுண்டு வந்துகொண்டிருந்தார். அப்போது நடிகர் ஒருவரை காதலிக்கவும் செய்தார். இரண்டு பேரும் ஒரே வீட்டில் குடித்தனமும் நடத்தினார்கள். ஆனால் சில காலங்களிலேயே இரண்டு பேருக்கும் பிரிவு ஏற்பட்டது. நடிகையை கழற்றிவிட்ட நடிகர் இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போகிறாராம்.
பக்கத்து மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அந்த நடிகை. காரமான சினிமா துறையில் காலடி எடுத்து வைத்த அவர் தமிழில் நம்பர் படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் தாராள கவர்ச்சி காண்பித்து நடித்தார். பிறகு பெரிய ஹீரோவுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்திலும் பாடல் ஒன்றிலும் கவர்ச்சி மழையை தூவினார். இதனால் நடிகையை ஒட்டுமொத்த கோலிவுட்டும் கவனிக்க ஆரம்பித்தது. அவருக்கு வாய்ப்புகளும் கொட்டிக்கொடுக்கப்பட்டன.

முன்னணி நடிகை: வெறும் கவர்ச்சியை மட்டும் காண்பித்தால் சினிமாவில் நிலைக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்ட நடிகை; தனது நடிப்பு திறமையையும் காண்பிக்க தவறவில்லை. இதன் காரணமாக அவ்வப்போது தமிழில் தனது நடிப்புக்கு தீனி போடும் கதைகளிலும் கமிட்டானார். அதில் மிகச்சிறப்பாக தனது திறமையை காண்பித்ததால் கவர்ச்சி நடிகை என்று அவருக்கு இருந்த பெயர் நல்ல நடிகை என்கிற நிலைக்கு நகர்ந்தது. அதனை அம்மணியும் சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
சரிந்த வாய்ப்புகள்: தொடர்ச்சியாக இங்கும் பக்கத்து மாநிலத்திலும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இதனால் கண்டிப்பாக இன்னும் பல வருடங்களுக்கு அம்மணியின் கால்ஷீட் டைரி ஃபுல்தான் என்ற நிலை இருந்தது. அப்போதுதான் ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒரு சாக்லேட் பாய்தான் ஹீரோவாக நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே சரியான கனெக்ஷன் வந்ததால் ஆஃப் கேமராவிலும் ஒன்றாக ஜோடி போட்டு சுற்றினார்கள். ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு நடிகைக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
நடிகருடன் காதல்: இதற்கிடையே இன்னொரு நடிகருடன் காதலில் விழுந்தார் நடிகை. இரண்டு பேரும் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்கள். காதலில் விழுந்த இரண்டு பேரும் ஒரே வீட்டில் குடுத்தனமும் நடத்தினார்கள். அந்த சமயத்தில் நடிகை கர்ப்பமானதாகவும்; நடிகரின் வற்புறுத்தலால் அதை கலைத்துவிட்டதாகவும்கூட சொல்வார்கள். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இரண்டு பேருமே பிரிந்துவிட்டார்கள். தொடர்ந்து அம்மணி இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
நடுக்கத்தில் குடும்பம்: சூழல் இப்படி இருக்க நடிகையிடமிருந்து பிரிந்த நடிகருக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்களாம். இந்த செய்தி நடிகையின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. உடனடியாக நடிகருக்கு ஃபோன் போட்ட நடிகை, நீ மட்டும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் நான் உனது பெயரை எழுதி வைத்துவிட்டு சூசைட் செய்வேன். அதுமட்டுமின்றி நீயும், நானும் நெருக்கமாக இருந்த அத்தனை புகைப்படங்கள், வீடியோக்களை வெளியே கசியவிட்டு உனது நிம்மதியை இழக்க வைத்துவிட்டுத்தான் செல்வேன் என்று கூறிவிட்டாராம். இதனால் திருமண ஏற்பாடுகள் இப்போதைக்கு வேண்டாம் என்று குடும்பத்தினரிடம் நடிகர் சொல்லிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











