ஒரே நேரத்தில் இரண்டு நடிகைகளுடன் தொடர்பு..இடியாப்ப சிக்கலில் நல்ல நடிகர்..மனைவிக்கும் தெரிஞ்சிடுச்சாம்
சென்னை: சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்தவர் இந்த நடிகர். பல ஆடிஷன்களுக்கு சென்று ரிஜெக்ட் ஆன இவர்; பிறகு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்தவர். அதனையடுத்து கடவுள் இயக்குநரால் நடிகராக அறிமுகமான இவர் தற்போது கோலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகருக்கு லேடீஸ் விஷயத்தில் பயங்கர வீக்னெஸ் இருக்கிறதாம். இந்தச் சூழலில் அவர் ஒரே நேரத்தில் இரண்டு நடிகைகளை மெயின்டெயின் செய்துவருவது மனைவிக்கு தெரிந்துவிட்டதாம்.
சினிமாவில் வென்றுவிட வேண்டும் என்று தான் பார்த்த நல்ல உத்தியோகத்தை விட்டவர்தான் இந்த நடிகர். தென் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட அந்த நடிகர் எப்படியாவது நடிகராகிவிட வேண்டும் என முழு மூச்சாக உழைத்தவர். ஆனால் அவருக்கு எடுத்ததுமே வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே சினிமா சம்பந்தமான ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்து அங்கு அனைத்தையும் கற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பல ஆடிஷன்களுக்கு சென்ற அவரை பலரும் நிராகரித்திருக்கிறார்கள்.

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்: ஒருவழியாக சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டானார். அப்போது தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பையும் இவர் விட்டதே இல்லை. ரொம்பவே பொறுமையாகவும், எளிமையாகவும் இருந்த அவர் ஏகப்பட்ட படங்களில் துணை நடிகராக வந்திருக்கிறார். ஏன், சில நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய கேரக்டராக இருந்தாலும் அதனை எந்தவித தயக்கமுமின்றி செய்தார். இதனால் ஒருகட்டத்தில் ஹீரோவாகவும் ஆனார். முதல் படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் நடிகருக்கு நல்ல பெயர் கிடைத்தது.
வரிசையாக ஹிட்டுகள்: முதல் படத்துக்கு பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையுமே சரியாக பயன்படுத்திக்கொண்டு வரிசையாக ஹிட்டுகள் கொடுத்தார். அதேபோல் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதைக்கு தேவையென்றால் எப்படியும் நடிப்பேன் என்று கெத்து காண்பித்துவரும் அவர்; தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் படு பிஸியாக நடித்துவருகிறார். இதனால் இந்திய அளவில் அவர் அறியப்படும் நடிகராக மாறிவிட்டார்.
அந்தப் பழக்கம்: நடிப்பிலும் குணத்திலும் அவர் நல்ல பெயரை பெற்றாலும் சில விஷயங்களில் அவருக்கு கெட்ட பெயரே இருக்கிறது. அதாவது ஓவராக குடிக்கிறார் என்று முதலில் பேசப்பட்டது. மது பழக்கம்தான் அப்படி என்று சொல்லப்பட்ட சூழலில்; மாது விஷயத்திலும் அவர் அப்படித்தான் என்று சொல்கிறார்கள். அந்தவகையில் அவர் தன்னுடன் படங்களில் நடித்த நம்பர் நடிகையையும், கூல் நடிகையையும் தனது வலையில் வீழ்த்திவிட்டாராம் அந்த நடிகர்.
மனைவிக்கு தெரிந்தது: அதிலும் கில்லாடித்தனமாக ஒன்று செய்தாராம். அதாவது நம்பர் நடிகையுடன் இருக்கும் தொடர்பை கூல் நடிகைக்கும், கூல் நடிகையுடன் இருக்கும் தொடர்பை நம்பர் நடிகைக்கும் தெரியாமல் மெயின்டெயின் செய்துவந்தாராம். ஒருமுறை தனது மனைவி, குழந்தைகள் வீட்டில் இல்லாதபோது நம்பர் நடிகையுடன் வீட்டில் இருந்தாராம். அதை அக்கம்பக்கத்தினர் பார்த்து ஊருக்கு வந்தவுடன் நடிகரின் மனைவியிடம் போட்டுக்கொடுத்துவிட்டார்களாம்.
ஆனால் எதையுமே நடிகரிடம் ஓபனாக கேட்கவில்லையாம் மனைவியார். பிறகு நடிகருக்கே தெரியாமல் அவரை ஃபாலோ செய்தும், அவரது மொபைலில் இருக்கும் சில விஷயங்களை வைத்தும் ஒரே நேரத்தில் இரண்டு நடிகைகளுடன் அவர் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்துவிட்டாராம் மனைவி. இதனால் வீட்டில் சரியான சண்டை போய்க்கொண்டிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் இந்த விஷயம் அந்த நடிகைகளுக்கும் தெரிந்துவிட்டதால் சரியான இடியாப்ப சிக்கலில் மாட்டியிருப்பதாகவும் சொல்கிறார்கள் திரைத்துறையினர்.


Click it and Unblock the Notifications











