பிள்ளைகள் பாவம்.. அடக்கி வாசி என்ற கணவர்.. அடிமையா இரு போதும் என்ற நடிகை?.. சண்டை முத்துதாம்
சென்னை: இந்த நடிகைக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சினிமாவில் அறிமுகமான சில காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த அம்மணி சர்ச்சைகளையும் அதிகளவு சந்தித்தவர். சில காதல் தோல்விகளுக்கு பிறகு தன்னுடன் வயதில் இளையவரை கரம் பிடித்து செட்டிலாகியிருக்கிறார். திருமணம் ஆன புதிதில் எந்த சர்ச்சைகளிலும் சிக்காத இவர்கள் சமீபமாக சர்ச்சைகளில் சிக்குவதை மட்டுமே வேலையாக வைத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவர்களுக்குள் சண்டை முற்றிவருகிறதாம்.
கடவுளின் தேசத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை. மதிப்புக்குரிய படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான அவர் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்தார். தாராளமான கவர்ச்சி அவரை லைம் லைட்டில் வைத்தது. மேலும் அவ்வப்போது சில படங்களில் தனது திறமையை காண்பிக்கவும் அவர் தவறவில்லை. இதனால் குறுகிய காலத்திலேயே கோலிவுட்டின் டாப் 3 ஹீரோயின்களில் ஒருவராக அம்மணி மாறிவிட்டார். அதனால் அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன.

காதல் தோல்விகள்: இவர் பீக்கில் இருக்கும்போது இளம் நடிகர் ஒருவரை காதலித்தார். இருவரும் உருகி உருகி காதலித்தார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இரண்டு பேரின் காதலும் பாதியில் முடிந்தது. மேலும் நடிகையை நடிகர் அனுபவித்த புகைப்படங்களும் வெளியாகி புயலை கிளப்பின. அந்தக் காதலுக்கு பிறகு சில காலம் சிங்கிளாக இருந்த நடிகை; புயல் நடிகரை காதலித்தார். அந்தப் புயலுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது. இதனால் பெரும் சர்ச்சையும் ஏற்பட்டது. ஆனால் அம்மணி ரொம்பவே ஸ்ட்ராங்காக இருந்தார்.
இதுவும் பாதிதான்: இந்தக் காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தார். ஆனால் புயலின் முதல் மனைவியோ நடிகையை வெளுப்பதற்கு தயாராக இருந்தார். ஒருகட்டத்தில் அம்மணியின் டார்ச்சர் தாங்க முடியாமல் நடிகையிடமிருந்து புயல் விலகிவிட்டது. இதனால் உச்சக்கட்ட அப்செட்டானார் நடிகை. வாழ்க்கையே இருண்டுவிட்டது போல வீட்டுக்குள் முடங்கினார். சில காலம் கழித்து மீண்டும் நடிக்க வந்தார் அவர். அப்போதுதான் இவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அடுத்த காதல்: தனக்கு இளையவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதை அடுத்து திருமணமும் செய்துகொண்டார். தனது கணவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் மனநிலையில்தான் இருக்கிறார். இருவரும் தங்களது வாழ்க்கையை சுமூகமாகத்தான் நகர்த்தி கொண்டிருந்தார்கள். ஆனால் சமீபமாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்கள். இதற்கு முழுக்க முழுக்க நடிகையின் செயல்பாடுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் நடிகையின் கணவர் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம்.
முற்றிய பிரச்னை: பல முறை நடிகையிடம் கணவர் கொஞ்சம் அடக்கி வாசிப்போம் என்று கூறிவந்தாராம். அதனை நடிகை கண்டும் காணாமல் சென்றாராம். சில நாட்களுக்கு முன்பு பாண்டிய தேசத்தில் நடந்த ஒரு விழாவில் மீண்டும் சர்ச்சை வெடித்தது. இதனால் நடிகையின் கணவர் இனியும் விட்டால் சரிப்பட்டு வராது என்று நினைத்து சென்னை வந்ததும் நடிகையிடம்,
'இனியும் இப்படியே சர்ச்சைகள் நம்மை சுற்றிக்கொண்டிருந்தால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். அவர்கள் வளர வளர அவர்களை மற்றவர்கள் ஒருமாதிரி ட்ரீட் செய்தால் என்ன செய்வது. பிள்ளைகளின் மனநிலையை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். எனவே அடக்கியே வாசிப்போம்' என கூறினாராம். உடனே கொந்தளிப்பின் உச்சத்துக்கு சென்ற நடிகை, எனக்கு அட்வைஸ் செய்ற வேலையெல்லாம் உனக்கு வேண்டாம். இருந்தால் அடிமை மாதிரி இரு இல்லையென்றால் கிளம்பு என்கிற தொனியில் டோஸ் விட்டுவிட்டாராம். மனைவி இப்படி பேசிவிட்டாரே என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிவருகிறாராம் கணவர்.


Click it and Unblock the Notifications











