வீட்டில் வந்த புகைச்சல்.. நடிகையையும் நடிகையின் தாயையும் ஈசிஆரில் விடிய விடிய கவனித்த நடிகர்?
சென்னை: வீட்டில் புகைச்சல் ஏற்பட்டதன் காரணமாக நடிகையையும், நடிகையின் தாயையும் ஒரே நேரத்தில் ஈசிஆரில் நடிகர் கவனித்துக்கொண்டாராம்.
தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது இந்த நடிகரை பலரும் கடுமையான கிண்டலும், கேலியும் செய்தார்கள். இவர் எல்லாம் ஏன் நடிக்க வருகிறார் யார் பார்ப்பார்கள் என்று ஓபனாகவே உருவ கேலி செய்தனர். ஆனால் நடிகரோ அதையெல்லாம் கண்டு கலங்காமல் தனது திறமையை வளர்த்து படிப்படியாக முன்னேறி இன்று தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறார்.

செம மாஸ்: நடிகரின் பெயரை கேள்விப்பட்டாலே அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதிப்பார்கள். அந்த அளவுக்கு அவருக்கு மாஸ் இருக்கிறது. மாஸ் மட்டுமின்றி க்ளாஸாக நடிக்கவும் செய்வார். இதன் காரணமாக அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவராகவும் நடிகர் இன்னமும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை மன்னன்: நடிகர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் அவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுவதுண்டு. அதிலும் பெண்கள் விஷயத்தில் கடந்த பல வருடங்களாகவே ஒரு சர்ச்சையும் ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில்கூட அவர் நடித்த படம் வெளியாவதற்கு முன்னர் வாரிசு நடிகையுடன் இந்த நடிகர் ஓவர் நெருக்கம் காட்டுகிறார். இதன் காரணமாக குடும்பத்துக்குள் புகைச்சல் வந்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது அனைவரும் அறிந்ததே.
அடுத்த புகைச்சல்: நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் வெளியான படத்தில் பல வருடங்களுக்கு பிறகு நடிகருடன் எவர்க்ரீன் பியூட்டி நடிகை ஜோடி போட்டார். ரசிகர்களும் அவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை பார்த்து ரசித்தனர். ஆனால் அந்த கெமிஸ்ட்ரி பழைய தீயை இருவருக்குள்ளும் மூட்டிவிட்டதாகவும் இதன் காரணமாக வீட்டுக்குள் பல வருடங்களாக இருந்த புகைச்சல் பற்றி எரிந்து நடிகரின் வீட்டை இரண்டாக்கிவிட்டதாகவும் பேசப்படுகிறது.
புது கதை: கடந்த சில மாதங்களாகவே எவர்க்ரீன் பியூட்டியை வைத்தும் மாஸ் நடிகரை வைத்தும் கிசுகிசுக்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக பல வருடங்களுக்கு முன்பே நடந்திருக்கிறதாம். அதாவது, நடிகரும், நடிகையும் சேர்ந்து நடித்த சூரிய படத்தின் சக்சஸ் மீட் ஒன்று அப்போது நடந்ததாம். அந்த சமயத்தில் நடிகையுடன் நடிகரை வைத்து பலமாக கிசுகிசுக்கப்பட்ட நேரம். அதனால் அந்த சக்சஸ் மீட்டுக்கு நடிகையை நடிகர் அழைக்கவே இல்லையாம்.
தனியான கவனிப்பு: இதனால் கோபமடைந்த நடிகை எதற்காக தன்னை அழைக்கவில்லை என்று ஃபோன் போட்டு லெஃப்ட் ரைட் வாங்கினாராம். அதற்கு நடிகரோ, வீட்டில் ஏற்கனவே பஞ்சாயத்து ஓடுகிறது. மனைவியும் சக்சஸ் மீட்டுக்கு வருவார். அதனால் நீங்களும் வந்தால் தேவையில்லாத பஞ்சாயத்து வந்துவிடுமோ என்று நினைத்துதான் அழைக்கவில்லை என்று விளக்கமளித்தாராம்.
அதோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த நாளே நடிகையையும், அவரது தாயையும் ஈசிஆரில் இருக்கும் ஒரு ரெசார்ட்டுக்கு அழைத்து சென்று விடிய விடிய விருந்து வைத்து கவனித்து அனுப்பினாராம் நடிகர். இதுவும் நடிகரின் மனைவிக்கு தெரிந்து சில பஞ்சாயத்துக்கள் ஓடினாலும் படத்தின் சக்சஸ் பார்ட்டிதானே என்று கூறி சமாளித்துவிட்டாராம் நடிகர். இந்தத் தகவலை பலரும் இப்போது கோலிவுட்டில் பல வருடங்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications