துபாய் ஹோட்டல் ரூம்.. நடிகையுடன் லிப் கிஸ்.. ஃபோட்டோ லீக்காக அதுதான் காரணம்.. புது கேமராவால் வந்த வினை

By Staff

சென்னை: சிறு வயதிலிருந்தே நடித்துவரும் மூன்றெழுத்து நடிகர்; இடையில் சில காரணங்களால் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்த முடியாமல் தவித்தார். ஒருவழியாக இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ஃபுல் ஃபார்மோடு தொடங்கியிருக்கும் அவர்; கடந்த காலத்தில் நடந்ததை எல்லாம் மறந்து நிம்மதியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் பற்றிய கிசுகிசு ஒன்று பரவிவருகிறது.

சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து வந்த அந்த நடிகர்; சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்துவிட்டார். குழந்தை நட்சத்திரமாக கலக்கிய அவர்; தந்தையின் இயக்கத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார். அறிமுகமாகும்போது பெரிய இடத்தை பிடிப்பேன் என்று மனதுக்குள் மட்டும் உறுதி எடுக்காமல்; தனது பெயருக்கு முன்னால் பட்டத்தையும் சேர்த்துக்கொண்டே நடித்தார். இதனால் அனைவரது கவனமும் அவர் மீது திரும்பியது.

டாப் நடிகர்: இயல்பிலேயே அவருக்கு திறமை இருந்ததால் திரைத்துறையில் ஜொலிப்பது அவருக்கு எளிமையாக இருந்தது. கண்டிப்பாக அடுத்த தலைமுறையில் இவர்தான் டாப் நடிகராக வருவார் என்று ஆரூடமும் சொல்லப்பட்டது. அதன்படிதான் அவருடைய பயணமும் இருந்தது. ஆனால் பெண்கள் விஷயம் அவரை ரொம்பவே பாடாய் படுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

Gossip in Kollywood is Leaked Dubai Hotel Photos Stir Buzz Around Child-Star-Turned-Actor

என்ன ஆனது?: முதலில் நம்பர் நடிகையுடன் காதலில் விழுந்தார். இரண்டு பேரும் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வார்கள் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் சில காரணங்களால் பிரிந்தார்கள். அவருக்கு அடுத்து அமுல் பேபி நடிகையுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் நடிகர். நிச்சயம் இந்தக் காதலையாவது மண மேடைக்கு கொண்டு செல்வார் என்றுதான் எதிர்பார்த்தார்கள். இந்தக் காதலும் பாதியில் முடிந்தது.

மீண்டும் வந்த நடிகர்: வரிசையாக விழுந்த அடி அவரது மனநிலையை அசைத்து பார்த்தது. எக்குத்தப்பாக உடல் எடை ஏற; சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் ஒதுங்கும்படி ஆகிவிட்டது. ஒருவழியாக தனது எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி இப்போது மீண்டும் ஃபுல் ஃபார்மில் நடித்துவருகிறார். ஏகப்பட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன. சூழல் இப்படி இருக்க முதலில் காதலித்த நடிகையுடன் அந்தரங்கமாக இருந்த புகைப்படம் குறித்து பேச்சுக்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன.

துபாய் ஹோட்டல் ரூம்: அதாவது நடிகரும், நடிகையும் காதலித்துக்கொண்டிருந்தபோது இரண்டு பேரும் துபாய்க்கு சுற்றுலா சென்றார்களாம். அப்போது புது கேமரா ஒன்றை வாங்கியிருக்கிறார்கள். வாங்கிக்கொண்டு அறைக்கு வந்து அதை சோதித்து பார்த்தார்களாம். அந்த நேரம் பார்த்து இரண்டு பேரும் நெருக்கமாக இருந்தபடி லிப் டூ லிப் கிஸ் அடித்தார்களாம். கிஸ் அடித்துக்கொண்டிருந்தபோது கேமரா குவாலிட்டி எப்படி இருக்கிறது என்பதை டெஸ்ட் செய்வதற்காக ஃபோட்டோ எடுத்து பார்த்தார்களாம்.

இந்தியா திரும்பிய பிறகு எப்படியோ அந்த புகைப்படங்கள் எல்லாம் லீக்காகியிருக்கின்றன. லீக்கான புகைப்படம் குறித்து அவருக்கு முதலில் தெரியவில்லை. அவரது நண்பர்கள் சொன்னபோதுகூட; படத்தில் வரும் லிப் லாக்கை சொல்கிறார்கள் என்றுதான் நினைத்தாராம். பிறகுதான் அந்தரங்க புகைப்படங்கள் என்று தெரியவந்திருக்கிறது. அது அவரை ரொம்பவே டிஸ்டர்ப் செய்துவிட்டதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X