நம்பர் நடிகைகள் இப்படி மாற அதுதான் காரணமாம்.. உள்ளுக்குள் சரியான பயமாம்.. அம்மணிகள் செம தெளிவு
சென்னை: கோலிவுட்டில் டாப் நடிகைகள் லிஸ்ட்டில் இருப்பவர்கள் நம்பர் நடிகைகள். இரண்டு பேருக்கும் இடையே கடந்த பல வருடங்களாக போட்டி இருக்கிறது. சூழல் இப்படி இருக்க அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் மாற்றம் வந்திருக்கிறதாம். அந்த மாற்றம் திடீரென எதனால் வந்தது என்பது குறித்து கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கள் பரவ ஆரம்பித்திருக்கின்றன.
தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கொண்டிருப்பவர்கள் அந்த நம்பர் நடிகைகள். இரண்டு பேரும் ஒரே காலகட்டத்தில்தான் சினிமாவில் அறிமுகமானார்கள். அவர்கள் அறிமுகம் ஆனதிலிருந்தே இரண்டு பேருக்குமிடையே போட்டி பலமாக இருந்தது. மாறி மாறி ஹிட் படங்களில் நடித்து நம்பர் ஒன் இடத்துக்கு வருவதும், போவதுமாக இருந்தார்கள். அவர்கள் பல வருடங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் கனவு கன்னிகளாக ஜொலிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உச்சக்கட்ட மோதல்: டாப் ஹீரோக்களுடன் ஜோடி போடுவதில் தொடங்கி, படங்கள் கமிட்டாவது வரை இரண்டு பேருக்குமே உச்சக்கட்ட மோதல் நிலவியது. ஒருகட்டத்தில் விழாக்களில் நேருக்கு நேர் பார்த்தால் கூட ஒருவரையொருவர் முகத்தை திருப்பிக்கொண்டு செல்லும் நிலைமைதான் இருந்தது. முக்கியமாக ஒரு நடிகருக்கு ஜோடியாக நடிப்பதில் ஏற்பட்ட மோதல் அவர்களுக்கிடையே உச்சக்கட்டமாக நடைபெற்றதாகவும் ஒரு பேச்சு உண்டு.

ஒரு நடிகை மிங்கிள், ஒரு நடிகை சிங்கிள்: இது ஒருபக்கம் இருக்க இரண்டு பேரில் ஒருவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. இன்னொருவருக்கு திருமணம் நடக்கவில்லை. பெரிய நம்பர் நடிகை போல் சின்ன நம்பர் நடிகையும் காதலித்து திருமணம் செய்துகொள்வார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இன்னும் சின்ன நம்பர் நடிகை கமிட்டாகாமால் சிங்கிளாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார்.
பற்றிக்கொண்ட இணையதளம்: இரண்டு பேருக்குமிடையே நடந்த போட்டி இன்னும் ஓயவில்லை; அவர்கள் ஒருவரையொருவர் எதிரியாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பலரும் நினைத்துகொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களை எல்லாம் ஆச்சரியப்படுத்தும் விதமாக இரண்டு பேர் செய்த செயல் ஒன்று சோஷியல் மீடியாவில் பற்றிக்கொண்டது. இந்நிலையில் அவர்களுக்குள் ஏன் இந்த திடீர் மாற்றம் வந்தது என்பது குறித்து கிசுகிசு பரவ தொடங்கியிருக்கிறது.
மார்க்கெட் இழந்த நடிகைகள்?: அதாவது கடந்த பல வருடங்களாக டாப் இடத்தில் இருந்த அவர்களுக்கு கடந்த சில வருடங்களாக மார்க்கெட் சரிவை நோக்கி சென்றுவிட்டது. சின்ன நம்பர் நடிகையின் கைவசம் படங்கள் இருந்தாலும்; புதிதாக எந்த படத்திலும் கமிட்டாகவில்லையாம். அதே நிலைமைதான் பெரிய நம்பர் நடிகைக்கும். இப்படியே விட்டால் இன்னும் சில வருடங்களில் காணாமல் போய்விடுவோம் என அச்சம் வந்துவிட்டதாம் அவர்களுக்கு.
இதனையடுத்து தனித்தனியாக இருந்தால் இனி நம்மை தூக்கி போட்டுவிடுவார்கள். ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக்கொண்டதால்தான் இளம் ஹீரோயின்கள் படையை எதிர்க்க முடியும் என முடிவெடுத்து அதற்கான செயல்களில் இறங்கினார்களாம். அதுமட்டுமின்றி ஒன்றாக புகைப்படம் போட்டதன் மூலம், நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்க தயாராக இருக்கிறோம் என்பதையும் உணர்த்தியிருக்கிறார்கள் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications










