கர்ப்பமாக்கி கழற்றிவிட பார்த்த நடிகர்?.. கழுத்தை நெருக்கி தாலி கட்ட சொன்ன பெண்.. விஷயம் அதுதானா?

By Staff

சென்னை: ஊர் பெயரை தன்னுடன் சேர்த்து பிரபலமாக வலம் வரும் அந்த நபர் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். முதலில் ஒரு திருமணம் செய்துகொண்ட அவர்; இரண்டு குழந்தைகளை பெற்றார். ஆனாலும் ஆசை அடங்காத அவர் இன்னொரு பெண்ணுடன் பழகினார். இந்தச் சூழலில் அந்தப் பெண்ணை இவர் கர்ப்பமாக்கி கழற்றிவிட பார்த்ததாக ஒரு கிசுகிசு பலமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

திரைத்துறையினர் மத்தியில் ரொம்பவே பிரபலமானவர் அவர். முதலில் தனது கை பக்குவத்தால் அனைவரையும் கட்டிப்போட்ட அவர்; ஆர்டர்களை அள்ளிவிடுபவர். முக்கியஸ்தர்களின் வீட்டு விசேஷம் என்றால் இவரும் இவரது டீமும் முதல் ஆளாக அங்கு சென்று கடைசி ஆளாக வெளியே வருவார்கள். அந்தப் பழக்கத்தை அப்படியே பயன்படுத்திக்கொண்டு படிப்படியாக இவரும் ஒரு செலிபிரட்டி ரேஞ்சுக்கு உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோவான நபர்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் கடவுள் பெயர் கொண்ட ஒருவரின் இயக்கத்தி நடித்து ஹீரோவாக அறிமுகமானார் அவர். அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றியடையாவிட்டாலும்; விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இவருக்கும் தொடர்ந்து ஹீரோ வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாக வெள்ளித்திரையிலிருந்து ஒதுங்கினார்.

Gossip in Kollywood that a famous actor tried to cheat on a woman by getting her pregnant

சின்னத்திரையில்: வெள்ளித்திரையிலிருந்து ஒதுங்கினாலும் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். தனது தொழில் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் முக்கிய ரோலை ஏற்றிருக்கும் அவர்; அந்நிகழ்ச்சியின் மூலம் மேற்கொண்டு ஃபேமஸ் ஆனார். இதற்கிடையே அவருக்கு திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மனைவியுடன் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவரது உறவு திடீரென பாதியில் அறுந்தது.

இரண்டாவது திருமணம்: முதல் மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து வாங்காத அவர்; இன்னொரு பெண்ணுடன் நெருங்கி பழகிவந்தார். அவர்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. சட்டப்படி டைவர்ஸ் வாங்காமல் மிகவும் தைரியமாகவே இன்னொரு பெண்ணுக்கு தாலி கட்டியிருக்கிறார். அதேசமயம் இந்தத் திருமணத்துக்கு பின்னால் பெரிய பூகம்பம் ஒன்றே இருந்ததாக திரைத்துறையினர் கிசுகிசுக்கிறார்கள்.

என்ன நடந்தது?: அதாவது ஆரம்பத்தில் அந்தப் பெண்ணிடம் நட்புடன் பழக ஆரம்பித்த இவர்; ஒருகட்டத்தில் அந்த நட்பை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றாராம். இரண்டு பேரும் தினமும் நெருக்கமாக இருந்ததன் விளைவாக அந்தப் பெண் கர்ப்பமாகிவிட்டாராம். இதனை யாருமே எதிர்பார்க்கவில்லையாம். கர்ப்பத்தை கலைக்க சொல்லி ஊர் பெயரை கொண்டவர் அந்தப் பெண்ணிடம் கெஞ்சி பார்த்தாராம், மிரட்டி பார்த்தாராம். ஆனால் அப்பெண் பிடிகொடுக்கவில்லையாம். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டாய் என போலீஸில் புகார் கொடுப்பேன் என கிடுக்கிப்பிடி போட; வேறு வழியில்லாமல் அவசர அவசரமாக தாலி கட்டியிருக்கிறாராம் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X