Pubல் அனைவரின் முன் 30 நிமிடங்கள் லிப் லாக்.. சீனியர் நடிகையை வளைத்துப்போட்ட இளம் இசையமைப்பாளர்?
சென்னை: கோலிவுட்டில் இப்போதைக்கு பிஸியான, ட்ரெண்டான இசையமைப்பாளர் அவர். உறவினர் உதவியோடு சினிமாவுக்குள் வந்தாலும் தனது திறமையின் காரணமாக மட்டும்தான் இப்போது டாப்பில் இருக்கிறார். அதேசமயம் அவரை சுற்றி ஏராளமான சர்ச்சைகளும், கிசுகிசுக்களும் எழத்தான் செய்கின்றன. இந்நிலையில் சீனியர் நம்பர் நடிகையை வளைத்துப்போட்டுவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.
சினிமா பின்புலம் உள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உறவினரின் உதவியோடு சினிமாவுக்குள் வந்தவர்தான் அந்த இசையமைப்பாளர். முதல் படத்திலேயே அவர் வெகு பிரபலமாகிவிட்டார். எங்கு திரும்பினாலும் அவரது பாடல்களும், அவரை பற்றிய பேச்சுக்களாகவும்தான் இருந்தன. முதல் படத்திலேயே இவ்வளவு ஃபேமஸ் ஆவோம் என்று அவரே நினைத்திருக்கமாட்டார் என்றுதான் பலரும் பேசிக்கொண்டார்கள்.
பிஸியான இசையமைப்பாளர்: முதல் படத்தின் பாடல்கள், ரீ ரெக்கார்டிங் என அத்தனையும் பக்காவாக இருக்க; இவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இவரும் தான் இசையமைத்த படங்கள் அனைத்தையும் தனது இசையால் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தினார். எனவே சீனியர் நடிகர்கள் முதல் ஜூனியர் நடிகர்கள்வரை அனைவரும் இவரது இசையையே தங்கள் படத்தில் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

விமர்சனம்: அவர் குறுகிய காலத்திலேயே உச்சத்துக்கு சென்றுவிட்டார்தான். அதேசமயம் அவர்; ஒரே இசையைத்தான் பட்டி டிங்கரிங் செய்து அனைத்து படங்களுக்கும் பயன்படுத்துகிறார். இசையின் தரத்தையே கெடுத்துவிட்டார்; மொழி புரியவில்லை என பல விமர்சனங்கள் அடுக்கடுக்காக விழுகின்றன. இருப்பினும் இப்போதும் அவர்தான் டாப் இசையமைப்பாளர். சம்பளம்கூட பல கோடி ரூபாயை வாங்குகிறாராம்.
பெண்கள் விஷயத்தில்: இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் பெண்கள் மற்றும் போதை பொருள் விஷயத்தில் அவர் கொஞ்சம் வீக் என்றே கிசுகிசுக்கப்படுகிறது. ஒரு நடிகையைகூட அவர் தீவிரமாக காதலித்து பின்னர் பிரேக் அப் செய்தார். இந்நிலையில் இசையமைப்பாளர் பற்றி திரைத்துறையில் புதிய கிசுகிசு ஒன்று எழுந்திருக்கிறது. அதாவது தனது உறவினரான நடிகரின் மூலம் சீனியர் நம்பர் நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டதாம்.அந்தப் பழக்கம் சில நாட்கள் பெட்ரூம்வரை நீடித்ததாம்.
30 நிமிடங்கள்: ஒருமுறை நடிகையுடன் பப் ஒன்றுக்கு சென்றிருக்கிறார் இவர். அப்போது இரண்டு பேரும் அளவுக்கு அதிகமாக மதுவையும், இதர போதை பொருட்களையும் எடுத்துக்கொண்டார்களாம். அதனையடுத்து கட்டுப்படாத அவர்கள் தனி அறைக்குகூட செல்லாமல் அமர்ந்த இடத்திலேயே 30 நிமிடங்கள்வரை லிப் லாக் செய்துகொண்டே இருந்தார்களாம். ஒருகட்டத்தில் நிலைமை கைமீறி போவதை உணர்ந்த அங்கிருந்தவர்கள் இரண்டு பேரையும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்களாம்.


Click it and Unblock the Notifications











