நிறைய பாய் ஃப்ரெண்டுகளுடன் குடி, கூத்து.. விரக்தியை போக்க தினமும் அதை செய்யும் நடிகை.. அப்போ கரியர்?
சென்னை: தமிழ் சினிமாவில் நடிக்க தெரிந்த நடிகைகள் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது. ஆனால் இந்த நடிகையோ திறமையை நிறையவே கொண்டிருப்பவர். அதன் காரணமாக குறுகிய காலத்திலேயே உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்த அவருக்கு; வாழ்க்கையில் ஒரு சோகமான நிகழ்வு ஏற்பட்டது. இப்போது அது உச்சக்கட்ட விரக்தியாக மாற தனது பாய் ஃப்ரெண்டுகளுடன் குடியும், கூத்துமாக இருக்கிறாராம் அம்மணி.
தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் சினிமாவில் உயர்ந்த இடத்தை ஒரு நடிகை பிடிப்பதெல்லாம் எப்போதாவதுதான் நடக்கும். அப்படி சமத்தாக நடித்து தனக்கான தனி இடத்தை பிடித்தார் அந்த நடிகை. சின்ன ரோலில் முதல் படத்தில் நடித்தாலும் அதற்கு அடுத்து அவர் ஹீரோயினாக நடித்த படத்தில் அவரது திறமையால் நடிகையின் கொடி உயர பறக்க ஆரம்பித்தது. இரண்டாவது படத்தின் வெற்றிக்கு பிறகு அம்மணிக்கு தொடர்ந்து கோலிவுட்டில் வாய்ப்புகளை இயக்குநர்கள் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் முன்னணி ஹீரோயினாக மாற ஆரம்பித்தார்.

தெலுங்கிலும்: தமிழில் மட்டும் கலக்கிய அவருக்கு தெலுங்கு திரையுலகும் சிகப்பு கம்பளம் விரித்தது. அங்கும் சென்று தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கினார். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துகொண்டிருந்த அம்மணிக்கு நடிகர் மீது காதல் வந்தது. அந்த நடிகர் பெரிய குடும்பத்துக்காரர் என்பதால் முதலில் அந்தக் காதலுக்கு நடிகரின் வீட்டிலிருந்து எதிர்ப்புகள் வலுத்தன. ஆனால் நடிகர் பிடிவாதமாக இருந்து நடிகையை விடவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கண் பட்ட விஷயம்: இருவரும் உருகி உருகி காதலித்தனர். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அவர்களது காதலுக்கு காலம் முடிவுரை எழுதியது. அதற்கு காரணமாக நடிகையின் நடத்தைதான் என்று பலர் சொன்னார்கள். இன்னும் சிலரோ நடிகைக்கு வந்த நோய்தான் என்றும் சொன்னார்கள். ஆனால் நடிகரோ, நடிகையோ தங்களது காதல் முறிவுக்கு யார் கதை கட்டினாலும் கண்டுகொள்ளாமல் அமைதியாகவே கடந்து செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். நடிகை இன்னும் சிங்கிளாகத்தான் இருக்கிறார்.
விரக்தியில் நடிகை: நடிகை சிங்கிளாக இருந்தாலும் நடிகர் அப்படி இல்லை. அவர் இன்னொரு நடிகையை பார்த்து சென்றுவிட்டார். ஆனால் இந்தக் காதலும் கண்டிப்பாக நிலைக்காது என்று நடிகருக்கு எதிர்தரப்பினர் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். சூழல் இப்படி இருக்க இன்னொரு நடிகையிடம் நடிகர் விழுந்துவிட்டதை கவனித்த இந்த நடிகைக்கு மனம் பொறுக்கவில்லையாம். என்னதான் நடிகரை பிரிந்தாலும் இன்னும் கொஞ்சம் காதலும் ஒட்டிக்கொண்டிருக்கிறதாம்.
பாய் ஃப்ரெண்டுகளுடன்: முக்கியமாக கொஞ்சம் விரக்தியும் அடைய ஆரம்பித்திருக்கிறாராம் அம்மணி. எனவே அந்த விரக்தியை போக்குவதற்காக நிறைய பாய் ஃப்ரெண்டுகளை சேர்க்க ஆரம்பித்திருக்கிறாராம். வாரத்துக்கு ஒருவருடன் என குடியும், கூத்துமாக அடித்துக்கொண்டிருக்கிறாராம் நடிகை. இந்த விஷயத்தை கவனித்த நடிகையின் நலம் விரும்பிகள்; இப்படி செய்ய வேண்டாம். பழகுபவர்கள் உன்னுடைய புகழுக்காகவும், அழகுக்காகவும், பணத்துக்காகவும் பழகுகிறார்கள். அவர்களிடம் ஜாக்கிரதையாக இரு என்று சொல்லியும் கேட்காத அம்மணி; உச்சக்கட்ட ஆட்டத்தை போட்டுக்கொண்டிருக்கிறாராம். இதனால் விரைவில் இதனால் ஒரு பிரச்னை வர வாய்ப்பிருப்பதாக கோலிவுட்டில் பரவலாக கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











