தம்பி கொஞ்சம் அடக்கி வாசி பெயரை கெடுத்துடாத.. இல்லை அடக்கிடுவாங்க.. மகனை கண்டித்த நடிகர்?
சென்னை: சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்து எப்படியோ ஒரு நிலையான இடத்தை பிடித்தவர்தான் அந்த நடிகர். நடிப்பில் மட்டுமின்றி தன்னுடைய நடத்தை, பேச்சு என அத்தனையிலும் எதார்த்ததோடு இருக்கும் நடிகருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரும் இப்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில் மகனை நடிகர் கண்டித்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தை சேர்ந்த அந்த மன்னர் நடிகருக்கு சினிமாவில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற ஆசை வர; திரைத்துறையில் ட்ரை செய்ய ஆரம்பித்தார். பல வருடங்கள் உழைப்பு, தேடல், முயற்சி செய்து ஆரம்பத்தில் துணை நடிகராக தோன்ற ஆரம்பித்து பிறகு ஹீரோவாக மாறினார். தனக்கு ஏற்ற தீனி கிடைத்ததால் ஒவ்வொர் படத்தையும், நடிப்பில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காண்பித்தார்.
டாப் ஹீரோ: இதன் காரணமாக ஹீரோவாக அறிமுகமான குறுகிய காலத்திலேயே வரிசையாக ஹிட்டுகளை அள்ளினார். எனவே சரசரவென்று டாப் 10 இடத்துக்குள் வந்துவிட்டார். தமிழில் மட்டும் கலக்கிவந்த அவர்; பிற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்து பான் இந்தியா நடிகராக இப்போது வலம் வந்துகொண்டிருக்கிறார். அவருக்கென்று இந்தியா முழுவதும் ரசிகர்கள் உருவாக தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் உண்மை.
நடிகரின் மகன்: யாரின் பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்த நடிகருக்கு ஒரு மகனும் இருக்கிறார். திடீரென வந்த அறிவிப்பில் நடிகரின் மகன் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சரி நடிகரின் மகன்தானே என்று அவருக்கு ஆதரவுதான் முதலில் எழுந்தது. ஆனால் மகனார் பேசியதை வைத்து கடுமையாக ட்ரோல் செய்தார்கள் நெட்டிசன்கள். பிறகு கொஞ்சம் அடங்கியிருந்த அந்த ட்ரோல்க்ளும், விமர்சனங்களும் சமீபமாக எழுந்திருக்கின்றன.

என்ன காரணம்?: அதாவது நடிகர் அளவுக்கு அவரது மகன் எதார்த்தமாக இல்லை. ஓவர் ஆட்டிட்யூட் காண்பிக்கிறார். இப்படியே போனா தந்தை அளவுக்கெல்லாம் வளர முடியாது; நத்தை அளவுக்குதான் உயர முடியும் என்று ஓபனாகவே அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது நடிகருக்கும், நடிகரின் மகனுக்கும் பெரிய அப்செட்டை கொடுத்துவிட்டதாம்.இந்தச் சூழலில் புதிய கிசுகிசு ஒன்று எழுந்திருக்கிறது.
என்ன கிசுகிசு?: அதாவது கடந்த சில நாட்களாகவே தனது மகனை பற்றி வரும் விமர்சனங்கள், ட்ரோல்களை சமூக வலைதளங்களில் உன்னிப்பாக கவனித்துவந்தாராம் நடிகர். சரி போகப்போக மாறிவிடும் என்று நினைத்திருந்தவருக்கு; அந்த ட்ரோல்கள் அதிகரித்ததால் இப்படியே விட்டால் தனது மகனின் எதிர்காலம் சினிமாவில் இல்லாமல் போய்விடும் என்று அச்சப்பட்டாராம். உடனே தனது மகனை கூப்பிட்ட நடிகர், இதெல்லாம் உன்னால் வந்ததுதான். சினிமாவில் வெல்வதற்கு திறமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு மற்றவர்களிடம் பழகும் முறை, பொது இடங்களில் உடல் மொழி, வாய் மொழி என அத்தனையும் முக்கியம்.
உன்னிடம் அது கொஞ்சம்கூட இல்லை. இனிமேலும் பொது இடங்களில் இப்படியே செய்துகொண்டிருந்தால் கண்டிப்பாக உன்னை அடக்கி வைத்துவிடுவார்கள். எனவே அவர்கள் அடக்கும் முன்பே நீயே அடங்கிவிடு எனது பெயரை கெடுத்துவிடாதே என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











