அனுபவித்துவிட்டு நடிகையின் வாழ்க்கையில் விளையாண்ட நடிகர்?.. உச்சக்கட்ட கோபத்தில் அம்மணி..அய்யோ பாவம்

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தார் அந்த நடிகை. முன்னணி நடிகர்கள் எல்லாம் அவருடன் ஜோடி போட்டு நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி அதை நிறைவேற்றியும்கொண்டனர். வரிசையாக ஹிட் படங்களில் நடித்த அம்மணி ஒரு படத்தில் நடிக்க சென்று அதனால் வீழ்ந்துவிட்டார். அதற்கு பிறகு ஆளே அட்ரெஸ் இல்லாமல் போன அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் பற்றிய கிசுகிசுதான் டாப்பில் இருந்துவருகிறது.

சுந்தர தேசத்து சினிமாவில்தான் நடிகை முதலில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் இருக்கும் நடிகரோடு ஜோடி போட்டார். அந்தப் படம் சூப்பர் வரவேற்பை பெறாவிட்டாலும் நடிகையின் அழகும், கிளாமரும் அங்கிருக்கும் ரசிகர்களையும், திரைத்துறையினரையும் தூங்கவிடவில்லை. அதற்கு பிறகு அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன. அதனை பயன்படுத்தி கிளாமர் ரோல்கள், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த ரோல்கள் என கலந்துகட்டி நடித்தார்.

gossip tamil cinema

தமிழில்: பிறகு தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி நம்பர் படத்தில் அறிமுகமான அவருக்கு; தான் அறிமுகமான மொழியைவிட இங்கு வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி இங்கிருக்கும் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் செம பிஸியாக நடிப்பதை விடவில்லை. இதனால் நம்பர் நடிகைகளை வீழ்த்திவிட்டு மிகவிரைவாக நம்பர் ஒன் இடத்தை நோக்கி சரசரவென்று வளர்ந்துகொண்டிருந்தார். அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நடிகருடன் லிவிங்: இதற்கிடையே பெரிய ஹீரோ ஒருவருடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் இரண்டு பேருமே அமைதியாக இருந்தார்கள். அதேசமயம் இருவரும் ஒரே வீட்டில் குடுத்தனம் நடத்துவதாகவும்; விரைவில் திருமணம் என்றும் சொல்லப்பட்டது. அதற்கேற்றபடிதான் சினிமா நிகழ்ச்சிகளுக்கு இருவரும் தனித்தனியாக வந்தாலும்; நிகழ்ச்சி ஆரம்பித்ததும் அருகருகேதான் அமர்ந்தார்கள். மேலும் சில பொது இடங்களிலும் ஜோடியாக ரசிகர்களின் கண்களுக்கு மாட்டினார்கள்.

பிரிவு: ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரும் திடீரென பிரிந்துவிட்டார்கள். அதற்கு காரணம் நடிகரின் குடும்பம்தான் என்று சொல்லப்பட்டது. மேலும் நடிகை வேறு மாநிலத்தை சேர்ந்தவர்; அவர் நமது குடும்பத்துக்கு செட் ஆகமாட்டார் என்று கண்டிஷன் போட்டதால் நடிகையை தனது வாழ்க்கையிலிருந்து கழற்றிவிட்டாராம் நடிகர். நடிகரின் இந்த செயல் ஒருபக்கம் நடிகைக்கு காயம் ஏற்படுத்த; மறுபக்கம் பட வாய்ப்பும் குறைந்துபோய் ஆள் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது.

மீண்டும் விளையாடிய நடிகர்: ஒருவழியாக அனைத்தையும் சமாளித்து மனதை தேற்றிக்கொண்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் அம்மணி. அவர் தனது ரீ என்ட்ரியில் நடித்த ஒரு படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சில படங்களில் நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க தனது பழைய காதலரோடு மீண்டும் நடிக்கலாம் என்று ஆசையில் இருந்தாரம் நடிகை. அதற்கான பேச்சுவார்த்தையை அந்தப் படத்தின் இயக்குநர் நடிகையிடம் பேச நடிகையும் ஒத்துக்கொண்டாராம்.

ஆனால் இந்த விஷயம் நடிகரின் காதுக்கு சென்றதாம். உடனே இயக்குநரை அழைத்து யாரை கேட்டு அந்த நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தினீர்கள் என்று டோஸ் விட; நடிகையை எப்படி கழற்றிவிடுவது என்று தெரியாமல் இயக்குநர் முழித்தாராம். உடனே நடிகரோ, 'உங்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கிறது. இந்த கேரக்டருக்கு செட் ஆகமாட்டீர்கள்' என சொல்லி கழற்றிவிட ஐடியா கொடுத்தாராம். இந்த விஷயம் நடிகையின் காதுக்கு சென்றதையடுத்து தனது வாழ்க்கையில் நடிகர் இப்படி விளையாடுகிறாரே என்று கோபமாகவும் அப்செட்டாகவும் இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X