இரவு பார்ட்டியில் மனைவியின் தங்கையை வேட்டையாடிய நடிகர்?.. பிரச்னைக்கு ஆரம்பப்புள்ளியே அதுதானாம்
சென்னை: நடிகரை பற்றி வராத கிசுகிசுவே இல்லை எனலாம். எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல நடிகர் என்று பெயர் வாங்கியிருக்கிறாரோ அதே அளவுக்கு பெண்கள் விஷயத்தில் வீக் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார். சமீபத்தில்தான் அவர் தனது மனைவியை பிரிந்தார். அந்த பிரிவை சுற்றி ஏகப்பட்ட பேச்சுக்கள் பரவின. ஆனால் இவரோ எந்தவித ரியாக்ஷனும் கொடுக்காமல் தனது வேலைகளில் அதீத கவனம் செலுத்திவருகிறார்.
சினிமா பின்னணியுள்ள குடும்பத்தில் பிறந்தாலும் சிறு வயதில் பொருளாதார கஷ்டங்களை சந்தித்தவர்தான் இந்த நடிகர். அவரது வீட்டில் உள்ளவர்கள் கட்டாயப்படுத்தி இவரை சினிமாவுக்கு நடிக்க அழைக்க வந்தார்கள். இவர் நடித்த முதல் படம் பெரிதாக போகவில்லை. அதோடு மட்டுமில்லாமல் ஏகப்பட்ட கிண்டல்களை சந்தித்தார். ஆனால் அதையெல்லாம் இவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. தொடர்ந்து நடித்த இரண்டாவது படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி இவருக்கும் நடிக்க தெரியும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

முன்னணி நடிகர்: இரண்டாவது படத்தின் வெற்றிக்கு பிறகு கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்தார் நடிகர். அதன்படி இவர் நடித்த சில படங்கள் மெகா ஹிட்டாகவில்லையென்றாலும் போட்ட முதலுக்கு மோசமில்லை; நஷ்டம் தராத நடிகர் என்ற பெயரை பெற்றுக்கொடுத்தது. இடை இடையே நடிப்புக்கு ஸ்கோப் தரக்கூடிய படங்களிலும் நடித்தார். இதனால் கமர்ஷியல் நடிகர் என்று மட்டுமில்லாமல் படிப்படியாக சிறந்த நடிகர் என்ற அடையாளத்தையும் பெற்றார். விருதுகளும் பெற ஆரம்பித்தார்.
திருமணம்: இதற்கிடையே தமிழ் சினிமாவில் ஒரு நடிகரின் வீட்டு பெண் ஒருவரை காதலித்தார். இருவரின் காதலுக்கும் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து திருமணமும் கோலாகலமாக நடந்தது. திருமணத்துக்கு பிறகு நடிகரின் வளர்ச்சி எங்கேயோ சென்றது. அதற்கு முழு காரணமும் நடிகரின் திறமைதான் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.மாமனாரின் நிழலில் வளர்ந்துவிட்டார் என்று மற்றவர்கள் பேசிவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து உழைத்து முன்னணி நடிகர் என்ற இடத்துக்கு நகர்ந்தார்.
பிரச்னைகள்: சுமூகமாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. அதற்கு காரணம் நடிகர்தான் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது பெண்கள் விஷயத்தில் படு வீக்காக ஆரம்பித்தாராம் நடிகர். தன்னுடன் நடித்த மில்க் நடிகையை அவர் வேட்டையாடியதாக ஒரு கிசுகிசு பரவியது. அதையெல்லாம் நடிகரின் மனைவி நம்புவதற்கு தயாராக இல்லை. அந்த அளவுக்கு தனது கணவர் மீது கண்மூடித்தனமான நம்பிக்கையும், காதலும் கொண்டிருந்தார்.
தங்கையிடமே சில்மிஷம்?: சூழல் இப்படி இருக்க பெரும் இடி ஒன்று இறங்கியதாம் நடிகரின் மனைவிக்கு. அதாவது தனது மனைவியின் தங்கையுடன் நடிகருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பழக்கம் நாளடைவில் வேறு மாதிரியான பழக்கமாகிவிட்டதாம். ஒருமுறை இரண்டு பேரும் சேர்ந்து இரவு பார்ட்டிக்கு சென்றார்களாம். அப்போது அளவுக்கு அதிகமான போதையில் இருவரும் நடனம் ஆடியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அந்த ஹோட்டலிலேயே சில மணி நேரங்கள் ரூம் எடுத்து தங்கிவிட்டார்களாம்.
இதனை அவர்களுடன் சென்றவர்கள் பார்த்துவிட்டார்களாம். மேலும் ரூமை காலி செய்துவிட்டு நள்ளிரவில் காரில் செல்லும்போது இரண்டு பேரும் அந்தரங்க சேட்டைகளில் ஈடுபட்டார்களாம். அந்த நினைப்பில் இருவரும் திளைத்திருந்ததால் விபத்தும் ஏற்பட்டதாம். இவை அனைத்தையும் தனது செல்வாக்கால் மூடி மறைக்க பார்த்திருக்கிறார் நடிகர். ஆனால் அவருடன் சென்றவர்கள் நடிகரின் மனைவியிடம் அத்தனையையும் போட்டுக்கொடுத்தார்களாம். இந்த விஷயம்தான் நடிகரின் திருமண வாழ்க்கையில் முதல் விரிசலை ஏற்படுத்தியதற்கான காரணம் என்று கிசுகிசுக்கிறார்கள் திரைத்துறையினர்.


Click it and Unblock the Notifications











