அந்த பிரபலத்தின் மனைவியுடன் மீண்டும் நடிகருக்கு தொடர்பு?.. விரைவில் வீடியோ லீக்காக போகுதாம்
சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது டாப்பில் இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். சீனியர் நடிகரால் சினிமாவுக்குள் வந்த இவர் அவரையே பீட் செய்துவிட்டார். சம்பள விஷயத்திலும் நடிகரின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. மிஸ்டர் க்ளீனாக இருந்த இவர் மீது அண்மையில் ஒரு குற்றச்சாட்டை பிரபலம் ஒருவர் முன்வைத்தார். அப்போது அது பூதாகரமாக வெடித்தது. பிறகு சைலெண்ட்டான அந்த விஷயம் இப்போது மீண்டும் கோடம்பாக்கத்தில் புகைய ஆரம்பித்திருக்கிறது.
சினிமாவில் வென்றுவிட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைப்பதும்; கிடைத்தாலும் அது அவர்களுக்கு கை கொடுப்பது பாதிக்கு பாதிதான் நடக்கும். அப்படித்தான் இந்த நடிகருக்கு சீனியர் நடிகர் ஒருவரால் சினிமாவுக்கான வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை செம்மையாக வளர்த்துக்கொண்டே சென்றார் என்பதுதான் உண்மை.

ஆச்சரியத்தில் திரையுலகம்: நடிகர் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய வெரைட்டியான நடிப்பை கொடுத்தார். இதன் காரணமாக வாய்ப்புகள் மளமளவென குவிந்தன. பத்து படங்களுக்குள்ளேயே காணாமல் போய்விடுவார் என்று நடிகரை பற்றி ஆரூடம் கூறியவர்கள் எல்லாம் இப்போது அட்ரெஸ்ஸை மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். அந்த அளவுக்கு நடிகரின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவரையே ரேஸில் முந்திவிட்டார் இந்த நடிகர்.
மிஸ்டர் க்ளீன்: இவரைப் பொறுத்தவரை திரையுலகில் மிஸ்டர் க்ளீன் என்று பெயர் எடுத்தவர். குடி, புகை, பார்ட்டி என எதிலும் கலந்துகொள்ளாதவர் என்ற நிலையும் இருந்தது. இந்த மிஸ்டர் க்ளீன் இமேஜால்கூட நடிகருக்கென்று பலரும் ரசிகர்களாக மாறினார்கள். அதனை அவரும் மிகச்சரியாகவே பராமரித்துவந்தார். முக்கியமாக எந்த கிசுகிசுவிலும் சிக்காமலும் இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர் என்ற இமேஜையும் இந்த நடிகர் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடைந்த இமேஜ்: ஆனால் அந்த இமேஜ் கடந்த வருடம் சுக்குநூறாக உடைந்தது. அதாவது நடிகருக்கு மிக நெருக்கமான, வளர்ச்சியில் உதவிய ஒரு பிரபலம் இவர் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அந்தக் குற்றச்சாட்டு என்னவென்பதை அவர் ஓபனாக சொல்லாவிட்டாலும் மற்றவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். அதாவது அந்த பிரபலத்தின் மனைவியுடன் நடிகருக்கு தவறான தொடர்பு இருந்தது. அது அந்த பிரபலத்துக்கு தெரிந்துவிட்டது என்றார்கள். இதற்கு நடிகர் அமைதியே காத்தார்.
மீண்டும் தொடர்பு: அந்த அமைதியோடு இருந்த அவர் இப்போது மீண்டும் லீலைகளை செய்ய ஆரம்பித்திருக்கிறாராம். அதாவது மாதமிருமுறை அந்த பிரபலத்தின் மனைவியை தனிமையில் சந்தித்துவந்தாராம் அவர். அப்படி சந்திப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டதை உணர்ந்து கொண்ட அந்த பெண் ஒருமுறை தன்னுடன் அந்த நடிகர் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்துவிட்டாராம். தன்னிடமிருந்து விலகுவதை தெரிந்துகொண்ட பின், மிகப்பெரிய தொகையை செட்டில்மென்ட்டாக கொடுக்க வேண்டும் இல்லையென்றால் வீடியோவை நானே லீக் செய்துவிடுவேன் என்று ஓபனாகவே மிரட்ட ஆரம்பித்திருக்கிறாராம். இதனால் அந்த தொகையை செட்டில் செய்யும் முடிவுக்கு நடிகர் வந்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











