நடிகையின் மீது தீராத மோகம்?.. 20 கோடி ரூபாயை அள்ளி கொடுத்த நடிகர்?.. எங்கே போய் முடியுமோ?

By Staff

சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகர் அவர். நடிகர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் அசால்ட்டாக வசூலிக்கக்கூடியவை. இதன் காரணமாக மூத்தவரின் இடத்தை இந்த நடிகர் பிடித்துவிட்டார் என்று பல்வேறு பேச்சுக்கள் கடந்த சில காலமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம் நடிகை ஒருவருடனும் சேர்த்து சமீபமாக கிசுகிசுக்கள் எழுந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா குடும்பத்திலிருந்து வந்ததால் என்னவோ அந்த நடிகருக்கு கோலிவுட் கதவு எளிமையாக திறந்துவிட்டது. ஆனால் கோலிவுட் கோட்டைக்குள் தனக்கென தனி இடத்தை அவர் பிடித்ததற்கு முழு காரணமும் அந்நடிகர் மட்டும்தான். ஏகப்பட்ட விமர்சனங்கள், கிண்டல்கள் என அனைத்தையும் கடந்து முறைப்படி நடனம், சண்டை பயிற்சி, நடிப்பு என ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு படிப்படியாக உயர்ந்து இன்று தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையும், ரசிகர் படையையும் அவர் வைத்திருக்கிறார்.

kollywood gossip tamil cinema

தொடர் ஹிட்டுகள்: ஆரம்பத்தில் அவருக்கு படங்கள் சரியாக போகவில்லை. காலம் செல்ல செல்ல தனது ரூட் கமர்ஷியல்தான் என்பதை உணர்ந்து அந்தப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தார். அந்த ரூட் அவர் ரசிகர்கள் மனதில் வேரூன்ற காரணமாக அமைந்தது. அவர் நடித்த பல படங்கள் வரிசையாக ஹிட்டடிக்க ஆரம்பித்தன. அதனையடுத்து கோலிவுட்டின் கமர்ஷியல் கிங் என்றால் அந்த நடிகர்தான் என்று ஒட்டுமொத்த திரைத்துறையும் ஓபனாகவே பேசியது. அதுதான் ஒருவகையில் உண்மையும்கூட.

வசூல் ராஜா: வெறும் ஹிட் மட்டுமின்றி வசூலிலும் ஜொலிக்க ஆரம்பித்தார். அவர் கடைசியாக நடித்த நான்கு படங்களும் அசால்ட்டாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும், பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்களும் பேசின. மேலும் அவரது ரசிகர்களோ இனி பெரிய இடம் எங்கள் நடிகருக்குத்தான் என்று மார் தட்டினார்கள். இதனால் இன்னொரு ஹீரோ ரசிகர்களுக்கும், இவரது ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் போஸ்ட் போரே நடந்தது.

சர்ச்சை: இது ஒருபக்கம் இருக்க இப்போது நடிகர் புது முடிவெடுத்து அடுத்த அவதாரம் எடுத்திருக்கிறார். இவ்வளவு பெரிய வியாபாரத்தை வைத்துக்கொண்டு அசால்ட்டாக இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாரே என்று பலரும் புகழ்ந்தார்கள். ஒருதரப்பினரோ அந்த நடிகர் தான் எடுத்த முடிவிலிருந்து கொஞ்சமேனும் பின்வாங்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இவரோ தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியும், சோகமும் கலந்த ஒரு கலவை உணர்வோடு இருக்கிறார்கள்.

20 கோடி ரூபாய்: இந்நிலையில் நடிகர் பற்றி புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது. அதாவது தன்னுடன் நடித்தபோது ஒரு நடிகையுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார் நடிகர். அவரை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்பதற்காக தனது வீட்டுக்கு அருகிலேயே அம்மணியை நடிகர் குடி வைத்ததாக சில மாதங்களுக்கு முன்பு பேசப்பட்டது. இப்போதோ நடிகை நடித்திருக்கும் துப்பாக்கி படத்துக்கு இந்த நடிகர்தான் 20 கோடி ரூபாய் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருக்கு ரொம்பவே நெருக்கமானவர். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது திடீரென பொருளாதார சிக்கல் வந்ததாம். நடிகரிடம் பணம் கேட்க தயாரிப்பாளர் கூச்சப்பட்டாராம். விஷயத்தை தெரிந்துகொண்ட நடிகை; இந்த நடிகருக்கு ஒரே ஒரு ஃபோன் மட்டும்தான் செய்தாராம். உடனடியாக 20 கோடி ரூபாயை ஒரே பேமெண்ட்டாக கொடுத்துவிட்டாராம் நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X