நடிகையுடன் நடிகர் தனிக்குடுத்தனம்.. பலவிதத்தில் டார்ச்சர்.. தெளிவாக தப்பித்த ஹீரோயின்.. யப்பா இது வேறயா?

By Staff

சென்னை: கோலிவுட்டை அதிரவிட்ட சர்ச்சைகளில் இந்த சர்ச்சையும் அடக்கம். ஹீரோ மீது ஹீரோயின் காட்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததை தொடர்ந்து ஹீரோயினுக்கு எதிராக நடிகரின் ரசிகர்கள் களத்தில் குதித்தார்கள். சூழல் இப்படி இருக்க இவ்வளவு பஞ்சாயத்துக்கும் காரணம் வெறும் பணம் மட்டுமில்லை அதையும் தாண்டி ஒன்று இருக்கிறது என்று கோலிவுட்டில் கிசுகிசு கிளம்பியிருக்கிறது. அந்த கிசுகிசு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

குடும்பத்தின் கஷ்டம் காரணமாக அந்த நடிகர் சினிமா துறைக்குள் நடிக்க வந்தார். அவர் அறிமுகமான ஆரம்பகாலத்தில் கடுமையான ட்ரோல்களையும், உருவ கேலிகளையும் சந்தித்தார். இருந்தாலும் அவர் கொஞ்சம்கூட மனம் தளரவில்லை. தன்னுடைய நோக்கம் நடித்து சம்பாதித்து குடும்பத்தின் கஷ்டத்தை போக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்து படிப்படியாக உயர்ந்தார். அதற்கேற்றபடியான கதைகளும் நடிகருக்கு அமைந்தது. தனக்கு அமைந்த கதைகளில் தன்னுடைய திறமையை முழு திறனுடன் வெளிப்படுத்தினார்.

gossip kollywood

முன்னணி நடிகர்: திறமை இருந்தால் சினிமாவில் எந்த உயரத்துக்கும் செல்லலாம் என்பதற்கு உதாரணமாக அவர் இன்று திகழ்ந்துகொண்டிருக்கிறார். வரிசையாக ஹிட் படங்களில் நடித்த அவர்; தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்ற பெயரை கொஞ்ச காலத்திலேயே பெற்றார். அதற்கு பிறகு நடிகருக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தன. அதனையடுத்து இங்கிருந்து வேற்று மொழிகளுக்கும் சென்று மிகப்பெரிய வெற்றியை பெற்றார். வெற்றி மட்டுமின்றி இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றார்.

பாராட்டு பத்திரம்: மேலும் சீனியர் இயக்குநர்களிடமிருந்தும் நடிகருக்கு பாராட்டு பத்திரம் வந்தது. முக்கியமாக தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிவைத்த இயக்குநர் என்று பெயர் பெற்ற ஒருவர்; மேடை ஒன்றில் இந்த நடிகரை உச்சி முகர்ந்து பாராட்டினார். இது ஒருபக்கம் இருக்க நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் தனது முத்திரையை ஆழமாக பதித்துவிட்டார். எனவே எல்லா ஃப்ளாட்ஃபார்ம்களிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த வெகு சில நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தையும் பெற்றார் அவர்.

சர்ச்சை: எப்போதும் ஒருவர் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தால் அவரை சுற்றி சர்ச்சைகளும் வளரும் என்பதற்கும் உதாரணம் இவர்தான். அப்படி இவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் இவர் ரொம்பவே மோசம் என்று பலரும் பேசினார்கள். அதற்கேற்றபடிதான் இவரின் செயல்பாடுகளும் இருந்தன. குடும்பத்திலும் பூகம்பங்கள் வெடித்து மண வாழ்க்கையை அசைத்து பார்த்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் இவரை சுற்றி பெரும் சர்ச்சை எழுந்தது.

நடிகையின் தாக்குதல்: அதாவது இந்த நடிகரை எவ்வளவு டேமேஜ் செய்ய முடியுமோ அவ்வளவு டேமேஜ் செய்து குற்றச்சாட்டை முன்வைத்தார் ஒரு நடிகை. இது பெரும் பூதாகரமாக வெடித்தது. அதற்கு காரணம் பணம் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அதுமட்டும் காரணமில்லையாம். நடிகையும், நடிகரும் சேர்ந்து பல வருடங்களுக்கு முன்பு இணைந்து ஒரு படத்தில் நடித்தார்கள். அந்தப் படத்தின்போது நடிகையின் மேல் நடிகருக்கு தீராத கண் விழுந்துவிட்டதாம். எனவே அவரை எப்படியாவது அடைய நினைத்தாராம்.

தப்பித்த நடிகை: நடிகையும் ஆரம்பத்தில் நடிகரின் வலையில் விழுந்துவிட்டாராம். ஒருகட்டத்தில் இருவரும் ஒன்றாக சுத்துவது, தங்குவது என்று நாட்களை நகர்த்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் நடிகைக்கு பலவிதமாக டார்ச்சர் கொடுத்தாராம் நடிகர். சொல்லும் படத்தில்தான் நடிக்க வேண்டும்; சம்பள கணக்கை தானே பார்த்துக்கொள்வேன் என்றெல்லாம் கண்டிஷன் போட்டாராம். ஏற்கனவே காதல் தோல்விகளை சந்தித்த அந்த நடிகை நாசூக்காக நடிகரிடமிருந்து தப்பித்து வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

ஆனால் நடிகருக்கு இந்த விவகாரத்தால் பெரும் கோபம் ஏற்பட்டுவிட்டதாம். அதுமட்டுமின்றி நடிகையையும் அவரை திருமணம் செய்துகொண்டவரையும் பழிவாங்கும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த நடிகர்; அந்த சந்தர்ப்பம் கிடைத்ததும் வைத்து செய்துவிட்டாராம். பழைய சம்பவங்களை மனதில் வைத்துக்கொண்டுதான் நடிகர் இப்படி பாடாக படுத்தி எடுத்திவிட்டார் என்று நடிகையும், கணவனும் முடிவு செய்து ஒரு கை பார்த்துவிடலாம் என்றுதான் கோதாவில் குதித்திருக்கிறார்களாம். இதற்கிடையே நடிகரின் குடும்பத்தில் பூகம்பம் வந்ததற்கான முதல் காரணமே நடிகையுடன் நடிகர் தனிக்குடுத்தனம் நடத்தியதுதான் என்பதையும் ஒரு கொசுறு தகவலாக கிசுகிசுக்கிறார்கள் கோலிவுட்டினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X