மகளின் இரண்டாவது கல்யாணம்?.. பிரச்சனை செய்யும் மனைவி?.. உச்சக்கட்ட மன உளைச்சலில் உச்ச நடிகர்?

By Staff

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக கடந்த பல வருடங்களாக திகழ்ந்துவருகிறார் அவர். ரொம்பவே கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கும் அவர் பத்து தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார். உலகம் முழுவதும் புகழை சேர்த்து வைத்திருக்கிறார். ஆனால் மன நிம்மதிதான் அவருக்கு கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு காரணம் அவர் பெற்ற மகள்கள்தான். இந்தச் சூழலில் அவர் குறித்து புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது.

கோலிவுட்டில் எத்தனையோ நடிகர்கள் வந்திருக்கிறார்கள், வருகிறார்கள், வரவிருக்கிறார்கள். ஆனால் இவர் ஏற்படுத்திய தாக்கம் போல் எப்போதும் நடக்கப்போவதில்லை. எந்தத் தலைமுறையினரிடம் சென்று கேட்டாலும் அவரை தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருக்கிறார் அவர். கடுமையாக உழைத்து, கஷ்டப்பட்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி வைத்திருக்கும் அவரிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் சொத்துக்கள் இருக்கின்றன.

gossip kollywood

நடிகரின் வாரிசுகள்: இப்போதும் படு பிஸியாக நடித்துவருகிறார் அவர். அவருக்கு மொத்தம் இரண்டு மகள்கள். இரண்டு பேருமே சினிமாவில்தான் இருக்கிறார்கள். ஆனால் தந்தை போல் அவ்வளவு ஒன்றும் ஃபேமஸ் ஆகவில்லை. இருந்தாலும் இரண்டு பேரும் தொடர்ந்து சினிமாவில் இயங்கிவருகிறார்கள். நடிகரும் தன்னால் முடிந்த உதவிகளை தன்னுடைய வாரிசுகளுக்கு செய்துகொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் அவர்களால் பெரிதாக சோபிக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

பிரச்னைகள்: முதலில் தன்னுடைய இரண்டாவது மகள் ஒரு பிரச்னையை சந்தித்தார். அதனை எப்படி கடப்பது என்ற குழப்பத்தில் இருந்தபோது; மகளே வந்து தான் ஒரு வரை காதலிப்பதாக கூறினார். உடனடியாக நடிகர் ஒத்துக்கொண்டு இரண்டாவது திருமணம் செய்துவைத்தார். அதனையடுத்து தனக்கு இருந்த பெரிய பிரச்னை முடிந்துவிட்டது. இனி மன நிம்மதியோடு இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தார். நிலைமை இப்படி இருக்க அடுத்ததாக தனது மூத்த மகளின் மூலம் இன்னொரு பிரச்னை வெடித்தது.

விவாகரத்து: அதாவது மூத்த மகள் தனது கணவரை பிரிவதாக கூறினார். எப்படியாவது அவர்களை சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று விடாப்பிடியாக பல முயற்சிகளை செய்தார் நடிகர். தன்னுடைய உடல்நிலையையும் காரணம் காட்டி பார்த்தார். ஆனால் அம்மணி மசியவில்லை. ஒருவழியாக தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். இந்த விஷயம் நடிகரின் மன நிம்மதியை ரொம்பவே அசைத்துப்பார்த்துவிட்டதாம். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் தீராத கவலையில் இருந்ததாம்.

மகளின் முடிவு: இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் நடிகரிடம் சென்ற மகள் தான் ஒருவரை காதலித்துவருவதாகவும் அவரை தனக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்கும்படி கேட்டாராம். அதற்கு நடிகர் ஒத்துக்கொண்டாராம். ஆனால் நடிகரின் மனைவியோ மகளை அழைத்து, 'நீ ஏற்கனவே ஒரு காதல் செய்தாய். அதற்கே நான் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. அடம்பிடித்து திருமணம் செய்தாய்.

இப்போது இந்த நிலைமையில் இருக்கிறாய். எனவே இன்னொரு காதல் திருமணமெல்லாம் உனக்கு செய்து வைக்க முடியாது. நாங்களே ஒரு மாப்பிள்ளை பார்க்கிறோம். அவரை திருமணம் செய்துகொள்' என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். ஆனால் நடிகரின் மகளோ தான் காதலிக்கும் நபரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இதனால் மனைவி பக்கமும் சாய முடியாமல், மகளின் பக்கமும் சாய முடியாமல் மேற்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம் உச்ச நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X