ரொம்ப காலமாகவே கண்.. நடிகரின் மனைவிக்கு இரண்டாவது திருமணம்?.. அடுத்த மாப்பிள்ளையும் சினிமாக்காரராம்!

By Staff
சென்னை: சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத நடிகர்களில் ஒருவராக இருந்தார் அவர். தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருந்த அந்த நடிகருக்கு இடையில் சில பிரச்னைகள் வந்தன. அதனால் தனது மனைவியையும் பிரிந்தார். கடந்த வருடம்தான் அவர் தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் அந்த நடிகரின் மனைவிக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடக்கவிருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்திருக்கின்றன.
தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்கும் நடிகர்கள்தான் அதிகம். அப்படி சிக்காதவர்கள் அபூர்வத்திலும் அபூர்வம். அந்த அபூர்வ ரகத்தை சேர்ந்தவர்தான் இந்த நடிகர். தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருக்கும் அவர் ஹிட், தோல்வி என இரண்டு வகையான படங்களையுமே கொடுத்திருக்கிறார். சாக்லேட் பாய், ரக்கட் பாய் என்று மாறி மாறி படங்களில் தோன்றும் அவர்; நடிகையின் துணையுடன் ஒரு பெண்ணை காதலித்தார். அந்தக் காதலுக்கு முதலில் நடிகரின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை.
gossip tamil cinema
நடிகையின் தலையீடு: ஆனால் அந்தப் பெண்ணுக்கு தெரிந்த ஃப்ளவர் நடிகை; இந்த நடிகரின் தந்தையிடமும், தாயிடமும் பேசி திருமணத்துக்கு சம்மதம் வாங்கினார். அதன்படி அவர்களது திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பிறகு இரண்டு பேருமே தங்களது வாழ்க்கையை சுமூகமாகவும், காதலோடும் நகர்த்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மகன்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக அவர்கள் வலம் வந்துகொண்டிருந்தார்கள்.
மாமியாரின் கட்டுப்பாடு: ஒருகட்டத்தில் அவர்களுக்குள் மனஸ்தாபம் வர ஆரம்பித்தது. அதாவது இந்த நடிகரை மனைவியும், அவரது தாயும் முழுக்க முழுக்க கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டார்கள். நடிகரை வைத்து மாமியார் படங்களும் தயாரித்தார். ஆனால் அந்தப் படங்களில் பெரும்பாலானவை பெரிய வெற்றி பெறவில்லை. அதுமட்டுமின்றி இவர் சம்பாதிக்கும் பணத்தையும் மனைவியும், மாமியாரும் தங்களிடமே வைத்துக்கொண்டு சிறு செலவுக்குக்கூட கையேந்த விடுவார்களாம்.
விவாகரத்து: சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப சாதுவாக இருந்த நடிகர் பொங்கி எழுந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து மனைவியை பிரிவதாக அறிவித்தார். ஆனால் மனைவியாரோ முதலில் இந்த விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் நடிகர் தான் எடுத்த முடிவில் ரொம்பவே உறுதியாக இருந்தார். இதனால் வேறு வழியின்றி டைவர்ஸுக்கு அரை மனதோடு ஒத்துக்கொண்டார் அம்மணி. விரைவில் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைக்கவிருக்கிறது.
இரண்டாவது திருமணம்?: விவாகரத்துக்கு பிறகு திருமணம் செய்துகொள்ளும் ஐடியாவில் நடிகர் இப்போதைக்கு இல்லையாம். ஆனால் அந்தப் பெண்ணின் தாயோ தனது மகளுக்கு கண்டிப்பாக இரண்டாம் திருமணம் நடத்தி வைக்கும் முடிவில்தான் இருக்கிறாராம். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்ய ஆரம்பித்துவிட்டாராம். அதன்படி பக்கத்து மாநில திரையுலக பிரபலம் கடந்த பல வருடங்களாக இந்தக் குடும்பத்துக்கு பழக்கமாம். அந்த பிரபலத்துக்கும் இந்தப் பெண்ணின் மீது கொஞ்ச காலமாக கண் இருந்ததாம். அதனை புரிந்துகொண்ட பெண்ணின் தாயார் அவருக்கே தனது மகளை மணமுடித்து வைக்க முடிவெடுத்து மகளிடம் ஓகேயும் வாங்கிவிட்டாராம். அநேகமாக விவாகரத்து வந்த பிறகு இந்த திருமண அறிவிப்பு வரலாம் என்று கிசுகிசுக்கிறார்கள் திரைத்துறையினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X