இதுக்கு கல்யாணமே செய்யாம இருந்திருக்கலாமே?.. நடிகைக்கு நெருக்கடி கொடுக்கும் கணவர் வீடு?
சென்னை: நடிகைகள் தங்களது கரியர் பீக்கில் இருக்கும்பொதே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆவது அபூர்வத்திலும் அபூர்வம். அந்த அபூர்வ லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார் வெளிச்ச நடிகை. அவரை சுற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்த சூழலில்; திடீரென திருமணத்தை அறிவித்து அறிவித்தபடி செய்தும்கொண்டார். ஆனால் அந்தத் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நடிகைக்கு அவரது கணவர் வீட்டிலிருந்து கடுமையான நெருக்கடியை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.
திரையுலகை சேர்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர்தான் அந்த நடிகை. தமிழில் மாயமான படத்தில் நடிகையாக அறிமுகமான அவருக்கு இப்போது டாப்பில் இருக்கும் நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்த படம் நல்ல வெளிச்சத்தை கொடுத்தது. அதனையடுத்து முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுக்கொண்டார். பெரும்பாலும் ஹோம்லியான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்தார் அந்த நடிகை.

பிஸியான நடிகை: ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்தாலும் தனது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியதன் காரணமாக தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் அவருக்கான மார்க்கெட் உருவானது. அதனையும் சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தேசிய அளவில் புகழடைந்தார். இருந்தாலும் இடையில் அவருக்கு சின்ன சறுக்கல் ஏற்பட்டது. அதனை சரிக்கட்டும் விதமாக மன்னன் படம் அமைந்தது. அதில் அவருக்கு பெரிய ஸ்பேஸ் கிடைக்காவிட்டாலும் கிடைத்த ஸ்பேஸில் தன்னை நிரூபித்தார்.
கிசுகிசு: இதற்கிடையே அவரை சுற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. மாஸ் நடிகருடன் தொடர்பில் இருக்கிறார்; அவரது கட்டுப்பாட்டில்தான் நடிகை இருக்கிறார்; தனது வீட்டுக்கு அருகிலேயே அந்த நடிகையை நடிகர் குடி வைத்திருக்கிறார் என்றெல்லாம் கிசுகிசுக்கள் பரவின. ஆனால் அதுகுறித்து அம்மணி எதுவும் வாய் திறக்கவில்லை. அதேசமயம் நடிகரை புகழ்ந்து அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் போஸ்ட்டுகள் போடுவதிலும் குறை வைக்கவில்லை அவர்.
திருமணம்: சூழல் இப்படி இருக்க அவர் ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். எனவே பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக அவரே அறிவித்து; பார்ட்டி நகரத்தில் வைத்து தனது காதலரை கரம் பிடித்தார். இதன் காரணமாக அவர் மீண்டும் நடிப்பாரா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே உச்சக்கட்டமாக எழுந்தது. இது ஒருபக்கம் இருக்க திருமணத்தை முடித்த கையோடு அம்மணி ஹனிமூன் போவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.
வீட்டில் நெருக்கடி: ஆனால் இவரோ படம் சம்பந்தமான வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதற்கு அவரது கணவர் முழு சப்போர்ட் செய்தாலும் கணவரின் வீட்டிலிருந்து எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்திருக்கினவாம். அதாவது கழுத்தில் தாலியுடன் கிளாமர் உடைகளில்தான் நடிகை படம் சம்பந்தமான வேலைகளில் கலந்துகொள்கிறார். அதுமட்டுமின்றி திருமணம் முடித்த கையோடு ஹனிமூனுக்குத்தானே சென்றிருக்க வேண்டும்; நீ ஏன் இப்படி ஊர் ஊராக சுற்றுகிறாய் என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். அதுமட்டுமின்றி இந்தப் படத்தோடு நீ நடித்தது போதும்; நடிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு குடும்பத்தையும், கணவர் செய்யும் தொழில்களையும் கவனிக்கும் வேலையை பார்க்க வேண்டுமென மாமியார் வீட்டிலிருந்து ஆர்டர்கள் பறக்க ஆரம்பித்திருக்கின்றனவாம்.


Click it and Unblock the Notifications











