நடிகரின் வீழ்ச்சிக்கு நடிகைதான் காரணமா?.. வெளியே போயிடு என்று கொந்தளித்த ஹீரோவின் அப்பா?

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகர் என்று பெயர் எடுத்தவர் வெளிச்ச நடிகர். ஆரம்பத்தில் அவருக்கு நடிப்பதில் இஷ்டம் இல்லாவிட்டாலும் எப்படியோ ஒத்துக்கொண்டு சினிமாவுக்குள் வந்தார். அவருக்கு ஸ்டார்ட்டிங்கில் சில பிரச்னைகள் இருந்தன. ஆனால் அவை அனைத்தையும் சரியாக பேலன்ஸ் செய்து இப்போது தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறார். ஆனால் கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார். அதற்கு காரணம் அவரது மனைவிதானாம்.

சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்தில் பிறந்தவர் வெளிச்சமானவர். ஆனால் அவருக்கு ஆரம்பத்தில் நடிக்க விருப்பமே இல்லை. இருந்தாலும் காலம் அவரை சினிமாவுக்குள் அழைத்து வந்தது. முதல் படத்திலேயே நல்ல இயக்குநர் இயக்கத்தில் நடித்தார். அந்தப் படமும் சரியாகத்தான் போனது. இருப்பினும் இவருடன் நடித்த இன்னொருவர் அந்தக் காலகட்டத்தில் இவரைவிடவும் கொஞ்சம் ஃபேமஸாக இருந்ததால் பெயர் எல்லாம் அவருக்கு சென்றுவிட்டது. அதனையடுத்து வெளிச்ச நடிகர் கொஞ்சம் அமைதியாக இருந்தார்.

gossip tamil cinema

வரிசையாக வாய்ப்புகள்: சில காலம் கழித்து அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அவரது நடிப்பு, நடனத்தை பார்த்து கூடவே விமர்சனங்களும் வந்தன. நடிகரோ அதனை கண்டு சளைக்கவில்லை. மாறாக சினிமாவுக்கு தேவையான இலக்கணங்களை படிப்படியாக கற்று தேர்ந்தார். அப்படிப்பட்ட நேரத்தில்தான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரின் இயக்கத்தில் நடித்தார். படம் மெகா ஹிட்டானது. நடிகருக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

தனி சாம்ராஜ்ஜியம்: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகருக்கு ஏறுமுகம்தான். அதன்படி வித்தியாசமான ரோல்களிலும் நடித்தார். நடிப்புக்கு தீனி போடும் ரோல்களிலும் நடித்தார். இதன் காரணமாக இவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரும் கிடைத்தது. தனி சாம்ராஜ்ஜியமும் அமைந்தது. இதற்கிடையே தன்னுடன் நடித்த நடிகையை தீவிரமாக காதலித்தார். ஆனால் முதலில் நடிகரின் தந்தை அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. நடிகரோ விடாப்பிடியாக இருந்து தந்தையின் சம்மதத்தை வாங்கி நடிகையை திருமணமும் செய்துகொண்டார்.

பிரித்த நடிகை: முதலில் நடிகரின் குடும்பத்துடன் ரொம்பவே அட்டாச்சாக இருந்தாராம் நடிகை. ஆனால் இடையில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனது கணவரையும், குழந்தைகளையும் அந்த குடும்பத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்க ஆரம்பித்தார். தொடக்கத்தில் இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்ட மூத்தவருக்கு போகப்போகத்தான் நிலைமையின் விபரீதம் புரிந்தது. இருந்தாலும் தனது மகனுக்காக எதனையும் வெளியில் சொல்லாமல் மௌனம் காத்து வந்தார்.

கொந்தளித்த மூத்தவர்: இந்நிலையில் மூத்தவர் இப்போது கொந்தளிப்பின் உச்சத்தில் இருக்கிறாராம். அதாவது ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக நடிகர் நடிக்கும் படங்களின் கதைகளை நடிகைதான் தேர்ந்தெடுக்கிறாராம். நடிகையின் கவனத்துக்கு வராமல் நடிகர் எந்தக் கதையையும் ஒத்துக்கொள்வதில்லையாம். அப்படித்தான் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குநரின் படத்தை இந்த நடிகர் மிஸ் செய்தாராம். அதாவது நடிகை வந்து அமர்ந்துகொண்டு கதையில் இதை மாற்றுங்கள் அதை மாற்றுங்கள் என்று ஏகப்பட்ட கண்டிஷன்களை போடுகிறாராம்.

இந்த தகவல் எல்லாம் மூத்தவரின் காதுகளுக்கு அவ்வப்போது சென்றுகொண்டுதான் இருந்தன. ஆனால் கடந்த சில வருடங்களாக நடிகருக்கு ஒரு வெற்றிகூட கிடைக்கவில்லை. சமீபத்தில் வெளியான நெருப்பு படம்கூட படுதோல்வியை சந்தித்தது. இப்படியே விட்டால் மகனுக்கு சினிமாவில் எதிர்காலமே இல்லாமல் போகலாம் என்ற அச்சத்தில், நடிகைக்கு ஃபோன் போட்ட மூத்தவர், இனி எனது மகன் கதை கேட்கும் விஷயத்தில் நீ தலையிடக்கூடாது. அப்படி தலையிட்டால் அவனது வாழ்க்கையிலிருந்து உன்னை நான் வெளியேற்றிவிடுவேன் என்று காச் மூச் என்று கத்திவிட்டாராம். இதனால் இனி சைலெண்ட்டாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் அம்மணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X