இன்னொரு நடிகருடன் படுக்கையில் நடிகை.. கையும் களவுமாக பிடித்த காதலர்..திருமணம் நிற்க காரணம் இதுதானாம்
சென்னை: மில்க் நடிகை என்று பெயர் எடுத்தவர் அவர். தமிழில் வில்லியாக அறிமுகமானாலும் காலப்போக்கில் செம ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்தவர். பல நடிகர்கள் அவருடன் நடிக்க வேண்டும் என்று தவம் இருந்தவர்கள். ஒரு நடிகரோ அந்த நடிகை இல்லையென்றால் இந்தப் படமே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நடிகையின் அலை கோலிவுட்டில் தீவிரமாக அடித்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அம்மணிக்கு திடீரென வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போக; வேறு மாநிலத்துக்கு குடிபெயர்ந்தார். இப்போது அவரை பற்றி ஒரு கிசுகிசு பரவிவருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு சிறிய படத்தில்தான் அந்த நடிகை அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் நடிகைக்கு நல்ல பெயர் கிடைத்தது. பிறகு வரிசையாக வாய்ப்புகள் வந்தன. அவருக்கு ரசிகர்கள் மில்க் நடிகை என்றும் பெயர் வைத்தார்கள். தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் நடித்து குறுகிய காலத்திலேயே கோலிவுட்டில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக மாறினார். நடனம், நடிப்பு, அழகு என அத்தனையும் இருந்ததன் காரணமாக ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ ஆரம்பித்தார் அம்மணி.
நடிகைக்காக விலகிய நடிகர்: நடிகையின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்தது. முக்கியமான ஹீரோ ஒருவர் நல்ல கதையம்சம் உள்ள படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தில் இந்த நடிகையை ஹீரோயினாக கமிட் செய்ய இயக்குநருக்கு உத்தரவு பறக்க; இயக்குநரோ ஹீரோவின் உத்தரவை மதிக்கவில்லை. இதன் காரணமாக அந்தப் படத்திலிருந்து ஹீரோ விலகிவிட்டார். அந்த அளவுக்கு நடிகையின் மீது கோலிவுட்டில் பல நடிகர்களுக்கு மோகம் தலைக்கேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகருடன் காதல்: சூழல் இப்படி இருக்க பெரிய குடும்பத்து நடிகர் ஒருவருடன் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தாதாகவும்; ஆனால் நடிகரின் தந்தை தனது வீட்டுக்கு இன்னொரு வேற்று மாநிலத்து பெண் மருமகளாக வரக்கூடாது என்பதில் கறாராக இருந்ததால் அந்தக் காதல் பாதியில் முடிந்ததாகவும் ஒரு பேச்சு அம்மணி டாப்பில் இருந்தபோது ஓடியது. அதுமட்டுமின்றி இனியும் இவரை கோலிவுட்டில் வளரவிட்டால் வீட்டில் பிரச்னை வந்துவிடும் என்று நினைத்து திட்டமிட்டே அந்த நடிகையின் மார்க்கெட்டை ஒரு குடும்பம் காலி செய்ததாகவும் கிசுகிசு பரவியதுண்டு.

வேறு மாநிலத்துக்கு: பல வருடங்கள் பறந்துகொண்டிருந்த தனது கொடி சில மாதங்களிலேயே இறங்கியதை எதிர்பார்க்காத நடிகை; உடனடியாக வேறு மொழிக்கு தஞ்சம் அடைந்தார். அங்கு சென்ற அவர் கிளாமரில் உச்சம் தொட்டார். பாடல்களில் கவர்ச்சி காட்டிய அவர்; படுக்கையறை காட்சி, முத்த காட்சி என தொடர்ந்து இறங்கி அடித்தார். இதனால் அங்கு அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கிடைத்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் அந்த மொழியின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவருடன் நடித்தார். இருவரும் சேர்ந்து நடித்த அந்தப் படத்தில் ஏகப்பட்ட நெருக்கமான காட்சிகள் இருந்தன.
மலர்ந்த காதல்: அந்த கெமிஸ்ட்ரி கேமராவுக்கு பின்னும் தொடர்ந்தது. இதன் காரணமாக இரண்டு பேருக்கும் காதல் மலர ஆரம்பித்தது. அவர்கள் ஜோடியாக ஊர் சுற்றி வந்தார்கள். மேலும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அறிவித்தார்கள். ஆனால் திடீரென தங்களது காதலை அவர்கள் முறித்துக்கொண்டார்கள். அது பல ரசிகர்களை உச்சக்கட்ட ஷாக்குக்கு கொண்டுபோனது. இப்படிப்பட்ட சூழலில் நடிகை பற்றி புதிய கிசுகிசு ஒன்று பரவ ஆரம்பித்திருக்கிறது.
என்ன ஆனது?: அதாவது உடனடியாக திருமணம் செய்துகொள்ளலாம் என்று நடிகர் வற்புறுத்த; நடிகையோ கழுவுற மீனில் நழுவுற மீனாக இருந்தாராம். இது ஒருபக்கம் இருக்க நாளுக்கு நாள் அம்மணியின் கிளாமர் தரிசனமும் கூடிக்கொண்டே போனது நடிகரின் குடும்பத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாம். சூழல் இப்படி இருக்க ஒரு வெப் சீரிஸில் இன்னொரு நடிகருடன் நடித்தபோது ஏற்பட்ட நெருக்கம் தனி ரூம்வரை சென்றுவிட்டதாம். நடிகையின் மீது நடிகருக்கு சந்தேகம் ஏற்பட்டதால்; நடிகைக்கே தெரியாமல் காதலர் ஃபாலோ செய்திருக்கிறார். அப்படி ஒருநாள் இன்னொரு நடிகரும், நடிகையும் தனி ரூம் படுக்கையறையில் இருந்தபோது கையும் களவுமாக காதலர் பிடித்துவிட்டாராம். உடனடியாக அவர் நடிகையிடம் இதனால்தான் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தாயா?.. இனி தள்ளிப்போட வேண்டாம் ஒட்டுமொத்தமாக நிறுத்திக்கொள்வோம் என்று கூறி நடிகையிடமிருந்து விடைபெற்றுவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











