நடிகருக்கும் உனக்கும் அது நடந்திருக்கு.. பழைய காதல் கதையை கிளறிய கணவர்.. நடிகை வீட்டில் பிரச்னை?

By Staff

சென்னை: லட்சுமிகரமான நடிகைக்கு அண்மையில்தான் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பிறகு படு ஜாலியாக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தவருக்கு சமீபத்தில் வெளியான திரைப்படம் இடியாக வந்து இறங்கியிருக்கிறதாம். அதாவது அந்தப் படத்தில் அம்மணியின் ரோலை பார்த்த கணவர் பிபியின் உச்சத்துக்கே சென்றுவிட்டாராம். மேலும் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டதெல்லாம் உண்மைதானோ என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறாராம்.

சினிமா குடும்பத்திலிருந்து இந்த நடிகை நடிக்க வந்தாலும் முதலில் அவரது தந்தையின் சம்மதத்தை பெற முடியவில்லை. மகள் நடிப்பதற்கு தந்தை முதலில் சம்மதம் தெரிவிக்காமல் கறார் காட்டியதால் சில நல்ல படங்களில் அறிமுகமாகும் வாய்ப்பை எல்லாம் நடிகை இழந்தார். ஒருகட்டத்தில் தன்னுடைய தீராத பிடிவாதத்தால் அப்பாவிடம் நடிப்பதற்கு ஓகே வாங்கிவிட்டார். அதனையடுத்து ஒரு இயக்குநரின் முதல் படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் நடிகைக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

gossip tamil cinema

வந்த வாய்ப்புகள்: முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை காண்பித்து நிரூபித்துவிட்டதால் அடுத்தடுத்து நடிகைக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டாலும் எதிர்பார்த்த பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் விருது பெற்ற இயக்குநரின் இயக்கத்தில் நடித்தார். அந்தப் படத்திலிருந்து தன்னுடைய சினிமா வாழ்க்கையே மாறும் என்று நினைத்திருந்தவருக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. இருந்தாலும் அவ்வப்போது வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருந்தன.

நடிகருடன் காதல்: நிலவரம் இப்படி இருக்க கோலிவுட்டின் ஆக்‌ஷன் ஹீரோ ஒருவருடன் அம்மணிக்கு காதல் மலர்ந்தது. அந்தக் காதல் கண்டிப்பாக திருமணத்தில் சென்றுதான் முடியும் என்று கோலிவுட் பட்சிகள் கூறிக்கொண்டே இருந்தன. அதற்கேற்றபடிதான் அவர்களது செயல்பாடுகளும் இருந்தன. ஆனால் நடிகருக்கும், நடிகையின் தந்தைக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டதன் காரணமாக நடிகர் - நடிகை காதல் கதை பாதியில் முடிந்தது. இதனால் நடிகை கொஞ்சம் அப்செட் என்றே அப்போது கூறப்பட்டது.

திருமணம்: ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு தனது கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்த நடிகைக்கு; தொழிலதிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இந்தக் காதலை வீட்டில் சொல்ல; நடிகையின் தந்தை உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டார். அதனையடுத்து கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பிறகு நடிகையின் வாழ்க்கை மிகச்சிறப்பாக சென்றுகொண்டிருந்தது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு படத்தினால் அந்த நிம்மதியான திருமண வாழ்க்கையில் முதல் பிரச்னை ஆரம்பமாகியிருக்கிறதாம்.

ஓவர் கிளாமர்: அதாவது அந்தப் படத்தில் நடிகை எக்கச்சக்கமாக தாராளம் காட்டியிருந்தார். அப்படத்தில் நடித்தபோதெல்லாம் நடிகருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாராம் அம்மணி. அதன் காரணமாகத்தான் அந்த கிளாமர் எல்லாம் எல்லை மீறி சென்றிருந்ததாம். பல வருடங்கள் கழித்து அந்தப் படம் ரிலீஸானது அல்லவா; அதனை நடிகையை இப்போது திருமணம் செய்திருப்பவர் பார்த்து என்னது இது இவ்வளவு கிளாமரா நடிச்சிருக்க. அப்போ நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது என்னவெல்லாம் உங்களுக்குள் நடந்தது என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறாராம்.

நடிகையோ அப்படியெல்லாம் எங்களுக்குள் எதுவும் நடக்கவில்லை. படத்தின் கதைக்காகத்தான் அவ்வாறு நடித்தேன் என்று கூறியும் நடிகையின் கணவர் பிபியின் உச்சத்துக்கே சென்று இல்லை ஏதோ நடந்திருக்கிறது; அதனால்தான் இவ்வளவு நெருக்கமாக அவருடன் நடித்திருக்கிறாய் என்று விடாப்பிடியாக நிற்கிறாராம். இதனால் நடிகையோ இந்த சமயத்திலா இந்தப் படம் ரிலீஸாகனும் என்று புலம்ப ஆரம்பித்திருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X