அவன் ஒரு பெண் பித்து.. என் மகளை கேட்டு வரீங்களா?.. தூது சென்ற நபரை விரட்டிய நடிகையின் தாய்?

By Staff

சென்னை: கோலிவுட்டின் சினிமா குடும்பத்திலிருந்து வந்தவர்தான் அந்த நடிகர். முதலில் உதவி இயக்குநராக இருந்த அவர் பிறகு கால சூழ்நிலைகளால் நடிகராக மாறிவிட்டார். ஆரம்பத்தில் சரியாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராஃப் இடையில் சறுக்கியது. இப்போது மீண்டும் அவரது கரியர் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அவர் குறித்து புதிய கிசுகிசு ஒன்று கோலிவுட்டில் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்தான் அந்த நடிகர். அவரது தந்தை தயாரிப்பாளராக இருந்தவர். தந்தை போலவே மகனுக்கும் சினிமா ஆசை வந்துவிட்டதால் உதவி இயக்குநராக ஒரு இயக்குநரிடம் சேர்ந்தார். சில படங்களில் அப்படி பணியாற்றிய அவர் திடீரென நடிகராக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட். இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களிடம் அவர் எளிதாக சென்று சேர்ந்தார். முக்கியமாக திரைத்துறையில் இருக்கும் சில சீனியர்கள் இந்த நடிகர் கண்டிப்பாக பெரிய ஹீரோவாவார் என்று ஆரூடம் கூறினார்கள்.

Tamil Cinema Gossip Kollywood

வரிசையாக ஹிட்டுகள்: அந்த ஆரூடத்தின்படிதான் அவரது கரியரின் ஆரம்ப ஸ்டேஜ் இருந்தது. வரிசையாக அவர் ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார். மேலும் ஆக்‌ஷன் ஹீரோ என்ற அவதாரத்தை எடுத்துவிட்டதால் அவருக்கான இமேஜ் ரசிகர்களிடம் உயர்ந்தது; ரசிகர்களும் அதிகரித்தார்கள். இன்னும் பல வருடங்களுக்கு இவர் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பார் என்றே பலராலும் கணிக்கப்பட்டிருந்தது.

உடைந்த இமேஜ்: ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்கான கிராஃப் சட்டென குறைய ஆரம்பித்தது. அதற்கு அவரது செயல்பாடுகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஓவர் குடி, பெண் சவகாசம் என சென்றுகொண்டிருந்த அவர் மற்ற விஷயங்களிலும் தலையிட ஆரம்பித்து சில சீனியர்களையே முறைக்க ஆரம்பித்துவிட்டாராம். இதன் காரணமாக அந்த சீனியர்கள் இவருக்கு எதிராக அணி திரண்டதாகவும் ஒரு பேச்சு ஓடியதுண்டு.

நோ திருமணம்: அதுமட்டுமின்றி சீனியர் நடிகர் ஒருவரின் மகளை தீவிரமாக காதலித்தாராம். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காதலும் பாதியில் முடிந்ததாம். இதன் காரணமாக அந்த நடிகரின் மகளும் இவருக்கு எதிராக சில மூவ்களை செய்ததாக பேசப்பட்டது. சூழல் இப்படி இருக்க நடிகர் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே ஓவர் போதை, அளவுக்கதிகமான பெண் சவகாசம் என அவர் இருந்துவிட்டதால் திருமணத்தின் மீது நாட்டம் இல்லையாம்.

துரத்திய நடிகையின் தாய்: இப்படிப்பட்ட சூழலில்தான் வெளிச்ச நடிகை மீது நடிகரின் கண் பட்டதாம். ஒரு படத்தில் நடித்தபோது அவர் மீது ஒருதலை காதல் கொண்டிருந்ததால்; அந்த நடிகையை பெண் கேட்டு ஒருவரை தூது அனுப்பினார்களாம் நடிகரும், நடிகரின் குடும்பமும். அந்தத் தூது சென்றவரும் உரிமையோடு நடிகையின் அம்மாவிடம் முதலில் பேசினாராம். அந்த தூதுவர் சொன்னதை கேட்டு ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற நடிகையின் அம்மா, 'அந்த ஆளே ஒரு குடிகாரன். பெண் பித்து பிடிச்சவர். அவருக்கு என் மகளை கேட்டு வரீங்களா?.. இனி இந்த எண்ணத்தோடு வராதீங்க' என்று கோபத்தில் கத்தி அந்த தூதுவரை விரட்டிவிட்டாராம். இதனைக் கேட்ட நடிகரும், நடிகரின் குடும்பத்தினரும் கொஞ்ச காலம் அப்செட்டில் இருந்தார்கள் என கிசுகிசுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X