நெருக்கமான காட்சியில் வந்த கெமிஸ்ட்ரி.. ஹீரோவும், ஹீரோயினும் அப்படி இறங்கிட்டாங்களாம்
சின்னத்திரையில்தான் அந்த நடிகை முதன்முதலில் தலை காண்பித்தார். அவர் நடித்த ஒரு சீரியல் அவருக்கு லைம் லைட்டை கொடுத்தது. ஆள் அழகாக வேறு இருப்பதால் அவர் கண்டிப்பாக சினிமாவுக்குள் வந்துவிடுவார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். அம்மணியும் அதற்கான வேலைகளில் இறங்கினார். அதற்கு பலனாக ஒரு சில வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால் அம்மணிக்கு அந்த வாய்ப்புகள் பெரிய திருப்புமுனை எதையுமே கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

பெரிய நிகழ்ச்சி: இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரால் வெல்ல முடியாவிட்டாலும் மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த செயல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும்; அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொடுத்தது. முக்கியமாக இவர் மேக்கப் போடாமலேயே இவ்வளவு அழகாக இருக்கிறாரே என்று வாயை பிளந்தார்கள் கோலிவுட்டினரும், ரசிகர்களும்.


Click it and Unblock the Notifications











