மூத்தவருடன் மெத்தை உறவில் நடிகை.. உறுதி செய்த விஷயம்.. செம கடுப்பில் இளையவர்.. என்ன நடக்குமோ?

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த நடிகை கடந்த பல வருடங்களாகவே டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அதனைப் பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆச்சரியத்தில் மூழ்கித்தான் இருக்கிறது. இப்போதும் டாப் ஹீரோக்களுடன் நடித்துவரும் அவர் பற்றி அவ்வப்போது கிசுகிசுகள் எழும்பும். இந்நிலையில் நடிகை பற்றி புதிதாக ஒரு கிசுகிசு எழுந்திருப்பது பற்றித்தான் கோடம்பாக்கத்தில் பேச்சு அதிகரித்திருக்கிறது.

கோலிவுட்டில் எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் இந்த நடிகை எப்போதுமே ஸ்பெஷல்தான். ஏனெனில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக அம்மணிதான் இங்கு டாப் 3 ஹீரோயின்கள் லிஸ்ட்டில் தவறாமல் இடம்பிடித்துவருகிறார். இப்போது வரும் இளம் நடிகைகளுக்கும் போட்டியாக தனது அழகாலும், நடிக்கும் திறமையாலும் அதகளம் செய்துகொண்டிருக்கிறார். அவரது இந்த நிலைமையை பார்த்த மற்ற சீனியர் நடிகைகள் பொறாமையில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

சர்ச்சைகள்: ஒரு பக்கம் அம்மணி இத்தனை வருடங்களாக வளர்ந்துகொண்டே இருந்தாலும்; மறுபக்கம் அவரை சுற்றி சர்ச்சைகளும் எழும். அவர் சினிமாவில் அறிமுகமான புதிதில் ஏடாகூடமான வீடியோ ஒன்று வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது. ஆனால் நடிகை எந்தவிதமான பதற்றமும் படாமல் தனது கரியரில் மட்டும்தான் கவனத்தை செலுத்தினார். அதன் காரணமாக கடகடவென்று உயரத்துக்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gossip in Kollywood that the younger actor is angry after seeing the actress in a relationship with the senior actor

நடிகருடன் கிசுகிசு: அந்த சர்ச்சைக்கு பிறகு அவரை சுற்றி கிசுகிசு ஒன்றும் எழுந்தது. அதாவது ஒரு இளைய நடிகருடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடித்தார். அந்த சமயத்தில் நடிகருக்கும், நடிகைக்கும் இடையே ஆஃப் கேமராவிலும் பழக்கம் தொற்றிக்கொண்டது. அம்மணிக்கு நடிகரிடமிருந்து ஏராளமான பரிசு பொருட்கள் பறந்தன. ஒருமுறை சோதனையிலும் அது சிக்கிவிட்டது. அப்போதிருந்துதான் இந்தப் பழக்கம் வெட்ட வெளிச்சமாகியது. இதனால் நடிகரின் குடும்பத்தில் சண்டை சக்கை வாங்கியது.

மீண்டும் தொடரும் அது: அதனையடுத்து நடிகையும், நடிகரும் சேர்ந்து நடிக்காமல் இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இனி நடிகையுடன் சங்காத்தமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். அப்படிப்பட்ட நிலைமையில் சீனியர் நடிகர் ஒருவருடன் நடிகைக்கு ஏற்பட்ட பழக்கம்; எல்லை மீறி சென்றதாம். வயது வித்தியாசம் இல்லாமல் அவர்கள் இரண்டு பேரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து கூத்து அடித்தார்கள் என்றெல்லாம் தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவின.

இளையவரின் ரீ என்ட்ரி: இப்படிப்பட்ட சூழலில்தான் அந்த இளையவரின் என்ட்ரி நடிகையின் வாழ்க்கையில் மீண்டும் நடந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் நடிக்க; பழைய தீ பற்றிக்கொண்டது இருவருக்கும். அதேசமயம் சீனியர் நடிகருடனான பழக்கத்தையும் நடிகை விடவில்லையாம். அதனை தெரிந்துகொண்ட இளையவரோ, நடிகையிடம் அன்பாகவும், கண்டிப்பாகவும் சொல்லி பார்த்தாராம். அதெல்லாம் நிறுத்திவிட்டேன் என்று எப்படியோ அந்த சூழலை சமாளித்துவிடுவாராம் அம்மணி.

இளையவர் செம கோபத்தில்: இளையவர் இப்போது வேறு ஒரு பயணத்தை ஆரம்பித்திருப்பதால் நடிகையுடனான அடிக்கடி சந்திப்புகளை குறைத்துவருகிறாராம்.இருந்தாலும் மோகம் இன்னமும் குறையவில்லைதான்போலும். இந்நிலையில் புதிய கிசுகிசு ஒன்று எழுந்திருக்கிறது. அதாவது, சமீபத்தில் சீனியர் நடிகருடன் இந்த நடிகை நடித்த விவகாரமான படம் ஒன்று வெளியானது. அதில் நடிகைக்கு ஒதுக்கப்பட்ட கேரக்டர் கிட்டத்தட்ட அந்த மாதிரியான கேரக்டர்தான். சீனியர் நடிகருடன் நெருக்கமான காட்சிகள், படத்தில் இலைமறை காயாக கிளாமர் என புகுந்து விளையாடிவிட்டார். இதனைப் பார்த்த இளையவரோ, 'நடிகைக்கும், சீனியருக்கும் மெத்தை உறவு இன்னமும் தொடர்கிறது. அந்த உறவு இந்த படத்தின் மூலம் உறுதியாகிவிட்டது என்று காண்டான அவர்; நடிகைக்கும் ஃபோன் செய்து செம ரெய்டு விட்டாராம். ஆனால் நடிகையோ அதெல்லாம் ஒரு கதைக்காகத்தான் என சமாளித்தாலும்; இனி உனது வாழ்க்கையில் நானா இல்லை அந்த நடிகரா என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும் என கட்டளையிட்டு ஃபோனை வைத்துவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X