நடிகை வைத்த நைட் பார்ட்டி.. ரகசியமாய் வந்த நடிகர்..ஏகப்பட்ட கசமுசா.. எல்லை மீறி போய்ட்டாங்களாம்

By Staff

சென்னை: நடிகை வைத்த நைட் பார்ட்டியில் ஏகப்பட்ட கசமுசா நடந்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

அண்டை மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகை குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். இவரது தாயும், தந்தையும்கூட சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர்கள் தான்.

Gossip in Kollywood that there was a lot of mischief at the night party hosted by the actress

அவர்கள் வழியிலேயே வளர்ந்த பிறகு சினிமாவில் ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்தார். பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த இயக்குநர் இயக்கிய படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நல்ல பெயர்: முதல் படம் சரியாக போகாவிட்டாலும் நடிகையின் நடிப்பும், அழகும் பலரையும் கவர்ந்தது. அதன் பிறகு காமெடி நடிகருடன் நடித்த படம் மெகா ஹிட்டாக நடிகையின் கிராஃப் உச்சத்துக்கு சென்றது. அந்தப் படத்தின் ஹிட் நடிகைக்கு வரிசையாக பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட நடிகையும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நல்ல பெயரை பெற்றார்.

சர்ச்சை: நிலைமை சுமூகமாக சென்றுகொண்டிருக்க பெரிய நடிகருடன் நடித்தபோது அவரது வலையில் விழுந்துவிட்டாராம் நடிகை. நடிகரோ தனது நண்பரின் வீட்டிலே நடிகையை வாடகைக்கு வைத்து இஷ்டத்துக்கு விளையாடியிருந்தார். விஷயம் அரசல் புரசலாக வெளியே தெரிய சுதாரித்துக்கொண்ட நடிகர் நடிகையை அவரது சொந்த மாநிலத்துக்கே அனுப்பிவிட்டாராம்.

நைட் பார்ட்டி: குடும்பத்திலும் புகைச்சல் ஏற்பட்டதால் நடிகையை கண்டுகொள்ளாத மாதிரியே நடிகர் இருந்தார். சூழல் இப்படி இருக்க நடிகை சமீபத்தில் ஒரு நைட் பார்ட்டியை திரையுலகை சேர்ந்த சிலருக்கும், தனது தோழர்கள், தோழிகளுக்கும் வைத்தார். அதில் விதவிதமான மதுபானங்கள், உணவுகள் இருக்க ஆட்டம் பாட்டம் என செமயாக சென்றுகொண்டிருந்ததாம்.

ரகசியமாய் வந்த நடிகர்: அந்த நடிகரையும் இன்வைட் செய்திருந்தாராம் நடிகை. ஆனால் இந்த பார்ட்டிக்கு நடிகையின் தாயும் வந்திருந்ததால் பார்ட்டிக்கு செல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே நடிகர் இருந்தாராம். ஆனால் தாயோ கொஞ்ச நேரம் இருந்துவிட்டு சென்றுவிட்டார். இந்த விஷயம் நடிகரின் காதுக்கு செல்ல உடனடியாக தனது சொகுசு காரை எடுத்துக்கொண்டு பார்ட்டிக்கு வந்துவிட்டாராம்.

வந்தவர் மதுபானங்களை அருந்திவிட்டு அனைவரிடமும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தாராம். நேரம் நள்ளிரவை நெருங்கியவுடன் பலரும் போதையில் கிறங்கி கிடக்க நடிகரோ நடிகையை அழைத்துக்கொண்டு தனி ரூமுக்கு சென்று சில மணி நேரம் இருந்துவிட்டு யாருக்கும் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாராம். குடும்பத்தில் நடந்த பஞ்சாயத்தால் எங்கே நடிகர் நம்மை கழட்டிவிட்டுவிடுவாரோ என்று பயந்துகொண்டிருந்த நடிகைக்கு நடிகர் வந்ததும் தன்னுடன் நேரம் செலவிட்டதும் நடிகைக்கு ஏகப்பட்ட சந்தோஷமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X