மகனுக்காக வாடகை தாய் தேடும் மூத்த நடிகர்..நடிகையின் நிலைமை அவ்வளவுதான்?.. இப்படி இறங்கிட்டாரே
சென்னை: அந்த நடிகர் தமிழ் சினிமாவில் ஆக்டராக மட்டுமின்றி டைரக்டராகவும் மின்னியவர். இருந்தாலும் அவரால் இயக்குநராக ஜொலிக்க முடியவில்லை. ஆனால் நடிகராக கோலோச்சிவிட்டார். முக்கியமாக தேசிய விருதினையும் அவர் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். சமீபத்தில்தான் தனது மகனுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்தார். மணமகளும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்தான்.
தமிழ் சினிமாவில் எப்படியாவது கோலோச்சிவிட வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். அவர்களில் பாதி பேர் நினைத்தபடி தங்களது கொடியை பறக்கவிடுவார்கள். பாதி பேர் காணாமல் போய்விடுவார்கள். சிலரோ இந்தத் துறையில்தான் தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்று வருவார்கள் அவர்களுக்கு நினைத்து துறையில் பெயர் கிடைக்காது. அதற்காக அவர்கள் மனம் ஒடிந்து போகாமல் கிடைக்கும் துறையில் தங்களை அசால்ட்டாக நிலைநிறுத்தி கொள்வார்கள்.

இவரும் அப்படித்தான்: அந்த வகையை சேர்ந்தவர்தான் இவரும். இயக்குநராகும் கனவோடு சினிமாவுக்கு வந்தவருக்கு உதவி இயக்குநராக சேர்வதற்கே பெரும் பாடானது. அதனையடுத்து முட்டி மோதி ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். அவரிடம் வேலைகளை கற்றுக்கொண்டு சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டினார். ஒருகட்டத்தில் ஃபேமஸ் நடிகரோடு சேர்ந்து நடித்ததால் இவரது முகம் தமிழ்நாட்டு மக்களுக்கு வெகுவாக சென்று சேர்ந்துவிட்டது.
இயக்குநரான நடிகர்: இருந்தாலும் இயக்குநராகும் ஆசை மட்டும் அவரை விட்டு போகவில்லை. எப்படியோ ஃபேமஸான நடிகரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் அட்டர் ஃப்ளாப் ஆனது. இதனையடுத்து இயக்குநர் அவதாரத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு மீண்டும் நடிக்க வந்தார். முழுக்க முழுக்க நடிப்பில் கவனம் செலுத்திய அவர் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றார். முக்கியமாக தேசிய விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகனுக்கு திருமணம்: பிஸியான நடிகராக வலம் அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். ஒரு படத்தில் அவரும் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனால் பெரிதாக எடுபடவில்லை. சூழல் இப்படி இருக்க அவர் நடிகை ஒருவரை காதலித்தார். இருவருக்கும் கடந்த வருடம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியோடு அவர்கள் தங்கள் வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் புதிய கிசுகிசு ஒன்று கோலிவுட்டில் பரவ ஆரம்பித்திருக்கிறது.
என்னாச்சு: அதாவது திருமணமாகி சில காலம் ஆகியும் இன்னும் அவர்கள் வீட்டில் நல்ல செய்தி வரவில்லையாம். இதற்காக போகாத மருத்துவர்கள் இல்லையாம். வேண்டாத தெய்வங்கள் இல்லையாம். ஆனாலும் ஒன்றும் நடந்தபாடில்லையாம். இதனால் அப்செட்டான மூத்த நடிகர் மகனுக்காக வாடகை தாயை தேட ஆரம்பித்திருக்கிறாராம். இதில் அந்தத் தம்பதிக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழியில்லாமல் அமைதியாக நடிகரின் மூவ்களுக்கு சப்போர்ட் செய்துவருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











