நடிகையுடன் நடிகருக்கு மீண்டும் நெருக்கம்.. கேரவனை விட்டு 2 பேரும் வரதே இல்லையாம்
சென்னை: அந்த நடிகைக்கும் நடிகருக்கும் ஏற்கனவே பயங்கரமான நெருக்கம் இருந்தது. நடிகருடன் அம்மணி ஒரு படத்தில் நடித்தபோதே அந்த நடிகர் நடிகையை தனது வலையில் வீழ்த்திவிட்டார். ஆனால் நடிகரோ நடிகையின் கால்ஷீட், சம்பளம் என அத்தனையையும் தனது கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தார். இதனால் ஒருகட்டத்துக்கு மேல் அந்த ரிலேஷன்ஷிப்பில் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியே வந்துவிட்டார். இப்போது மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
கோலிவுட்டின் முக்கியமான ஹீரோக்களில் ஒருவர் இந்த நடிகர். இவர் நடித்தாலே அந்தப் படம் ஹிட் என்ற நிலைதான் ஒருகாலத்தில் இருந்தது. இப்போது கொஞ்சம் சறுக்கலில் இருந்தாலும் அவர் மீதான மரியாதையும், பக்தியும் இண்டஸ்ட்ரியில் இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது. தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஏதோவொரு வித்தியாசத்தை தொடர்ந்து காண்பித்துக்கொண்டே இருப்பார். இதன் காரணமாக அவர் எப்போது வேண்டுமானாலும் மீண்டெழலாம் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களிடையே இருக்கிறது.

சர்ச்சைகள்: நடிகரின் திறமை அவரை எவ்வளவுக்கு எவ்வளவு உயரத்துக்கு கொண்டு சென்றதோ அதே அளவு அவரை சுற்றி சர்ச்சைகளும் எழும். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் மனிதர் அப்படி இப்படி என்றுதான் பெயர் வாங்கியிருக்கிறார். தன்னுடன் நடிக்கும் நடிகைகளை எப்படியாவது தனது வலையில் வீழ்த்திவிட வேண்டும் என்பதிலும் கூடுதல் கவனம் செலுத்துவாராம் நடிகர். இதனை அவருடன் பணியாற்றியவர்களே பெயரை சொல்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தொடர் பிரச்னைகள்: நடிகரின் இந்த செயல் காரணமாக அவரது குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். ஒருகட்டத்தில் மனைவியும் அவரை விட்டுவிட்டு பிரிந்துவிட்டார். இருந்தாலும் இருப்பவனுக்குத்தானே ஒரு குடும்பம் இல்லாதவனுக்கு பல குடும்பங்கள் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஏகப்பட்ட பெண்களையும் சில நடிகைகளையும் அவர் அனுபவித்ததாக சொல்வதுண்டு. அப்படித்தான் இந்த நடிகையையும் தனது படத்தில் நடிக்க வைத்தார் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாட்டில் நடிகை: நினைத்தபடியே தன்னுடன் படத்தில் நடித்தபோது அந்த நடிகையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் நடிகர். சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் சேர்ந்து நடித்தபோதே நடிகையுடன் அதிக நேரம் செலவிட்டு ஷூட்டிங் தாமதத்துக்கும் காரணமானார்கள் இரண்டு பேரும். அந்தப் படம் மெகா ஹிட்டானதை அடுத்து நடிகைக்கு வாய்ப்புகள் வரும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்து அது தாக்கு பிடிக்க முடியாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கினார் அவர்.
கேரவனுக்குள் 2 பேர்: இப்போது மீண்டும் அவர்கள் இணைந்து நடிக்கிறார்கள். இரண்டு பேரும் இணைகிறார்கள் என்று செய்தி வெளியானபோதே கண்டிப்பாக ஏதோவொரு சர்ச்சை வரும் என்றுதான் சினிமா துறையினர் கணித்தார்கள். அவர்களின் கணிப்புப்படிதான் இப்போது கிசுகிசுவும், சர்ச்சையும் வர தொடங்கியிருக்கிறது. அதாவது வாழ்க்கை படத்தில் இப்போது இரண்டு பேரும் நடித்திருக்கிறார்கள். அந்த ஷூட்டிங்கின்போது ஷாட்டுக்கான நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் இரண்டு பேருமே கேரவனுக்குள்தான் இருக்கிறார்களாம்.
கேரவனுக்குள் சென்றால் இரண்டு பேரும் வருவதற்கு ரொம்ப நேரம் எடுத்துக்கொள்கிறார்களாம். இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த இயக்குநர் இனியும் விட்டால் சரிபட்டு வராது என்று நினைத்து ஹீரோவிடம் சொல்ல பயந்துகொண்டு; ஹீரோயினை கூப்பிட்டு லெஃப்ட், ரைட் வாங்கிவிட்டாராம். இதனால் அம்மணி கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம். அதுமட்டுமின்றி கேரவனுக்கு இனி நீங்கள் கூப்பிட்டால் வரமாட்டேன் என்று நடிகரிடம் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











