நடிகையின் தோழியுடன் அந்தரங்க உறவு.. மொபைல் ஃபோனால் சிக்கிய கணவர்.. அமுல் பேபி நடிகை எடுத்த முடிவு

By Staff

சென்னை: வட மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த நடிகை தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டார். கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே நடித்த அவருக்கு திடீரென வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதனையடுத்து திருமணமாகி செட்டிலாகிவிட்டார். தன்னுடைய தோழியின் முன்னாள் கணவரைத்தான் நடிகை மணமுடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை குறித்து கிசுகிசு ஒன்று பரவிவருகிறது.

வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்த நடிகைகள் லிஸ்ட் கொஞ்சம் நீண்டதுதான். அப்படி நடிக்க வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஹிட் நாயகிகளாக வலம் வந்து செட்டிலும் ஆகியிருக்கிறார்கள். அப்படித்தான் இந்த நடிகையும். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய அவருக்கு; தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்தவர் நடித்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

முன்னணி ஹீரோக்களுடன்: அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் நடிகையை ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. ஒரு நடிகையின் இன்னொரு வெர்ஷன் என்றும் ரசிகர்கள் புகழ்ந்தார்கள். அதுமட்டுமின்றி அமுல் பேபி என்றும் கொண்டாடி தீர்த்தார்கள். முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்து தனக்கான ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். தேவைக்கேற்ப உச்சபட்ச கிளாமர் காண்பிக்கவும் அவர் தயங்கவில்லை.

Gossip in Kollywood the actress decided to divorce because her husband was in a relationship with his ex-wife

காதல் பிரேக் அப்: அப்படிப்பட்ட நிலைமையில்தான் டாப் ஹீரோ ஒருவருடன் காதலவயப்பட்டார். இரண்டு பேரும் ரொம்பவே சின்சியராக காதலித்தார்கள். எனவே கண்டிப்பாக அவர்களது காதல் திருமணத்தில் முடியும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அக்காதல் பாதியில் முடிந்தது. காதல் முறிவுக்கு பிறகு சினிமாவில் அம்மணி நடித்தாலும் முன்னர் போல் வாய்ப்புகள் எதுவும் குவியவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறையில் அவர் மறக்கப்பட்டார்.

திருமணம் செய்துகொண்ட நடிகை: இனி தனக்கு வாய்ப்புகள் வராது என்பதை உறுதி செய்துகொண்ட அம்மணி, திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார். இந்த நிலைமையில் அவருக்கு காதலும் மலர்ந்தது. அதாவது தனது தோழியின் முன்னாள் கணவர் மீது அவருக்கு காதல் பிறக்க; இரண்டு பேரும் கடந்த வருடத்தில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சுமூகமாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

டைவர்ஸ் முடிவு?: இந்நிலையில் நடிகைக்கும், கணவருக்கும் இடையே உரசல் வந்துவிட்டதாம். அதாவது நடிகையின் கணவர் அவரது முன்னாள் மனைவியுடன் தொடர்ந்து டச்சில் இருந்தாராம். ஆரம்பத்தில் இது சாதாரணமானதுதான் என்று நினைத்து சைலெண்ட்டாக இருந்திருக்கிறார் நடிகை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல நடிகைக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதன் காரணமாக கணவருக்கே தெரியாமல் அவரை நோட்டம் விட்டிருக்கிறார். ஒருமுறை கணவரின் ஃபோனை எடுத்து நோண்டியபோது தனது கணவரும், அவரது முன்னாள் மனைவியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் கண்களில் பட்டுவிட்டதாம். இதுகுறித்து கேட்டதற்கு அதெல்லாம் பழைய புகைப்படங்கள் என்று சமாளித்தாராம்.

அதனைத் தொடர்ந்து நடிகை வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தன்னுடைய முன்னாள் மனைவியை கணவர் வரவழைத்து உல்லாசமாக இருந்த சமயத்தில் திடீரென் நடிகையும் வீட்டுக்கு வந்துவிட; கையும் களவுமாக சிக்கினாராம் கணவர். இதனால் உச்சபட்ச விரக்திக்கும், கோபத்துக்கும் சென்ற நடிகை; டைவர்ஸ் முடிவுக்கு வந்துவிட்டாராம். இந்த கிசுகிசு கோலிவுட்டில் அதிகம் பரவிவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X