இளம் நடிகையுடன் ஒரே வீட்டில் குடித்தனம்.. கர்ப்பம் வேறாம்.. எல்லை மீறிய கணவரை வெளுத்த நடிகை
சென்னை: கோலிவுட்டில் 90களில் அறிமுகமானவர் இசையான நடிகை. ஹோம்லி, கிளாமர் என எதுவாக இருந்தாலும் அசால்ட்டாக செய்யக்கூடிய அவர்; தெலுங்கு திரையுலகில் டாப் நடிகையாக வலம் வந்தவர். அவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரை பிரபலத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே சுமூகமான திருமண வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. இப்போது கிசுகிசு எழுந்திருக்கிறது.
இசை பெயர் கொண்ட நடிகை மல்லுவுட்டில்தான் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார். இன்ட்ரோ ஆன முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்தன. அப்படியே தமிழிலும் அறிமுகமானார். அவர் நடித்த நான்கு மொழிகளிலுமே அம்மணிக்கு நல்ல டிமாண்ட் இருந்ததால் சரசரவென்று முன்னேறினாஅர்.
தெலுங்கில்தான் டாப்: நான்கு மொழிகளிலும் அவர் பிஸியாக இருந்தாலும் தெலுங்குதான் அவரை டாப்புக்கு கொண்டு சென்றது. அங்கு பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் 3 இடங்களுக்குள் இருந்தார். என்னதான் வேறு மொழியில் அவர் டாப்பில் இருந்தாலும் தாய் மொழியான தமிழ் சினிமாவிலும் முன்னணிக்கு வர வேண்டும் என்று நினைத்தவருக்கு; இரண்டு ஹீரோக்கள் நடித்த படம் கம்பேக்கை கொடுத்தது.

திருமணம்: சூழல் இப்படி இருக்க தமிழ்நாட்டில் செட்டில் ஆன பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொள்ள ஆரம்பித்தார். அப்போது பிரபலம் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி; திருமணத்தில் முடிந்தது. முதலில் இந்த நடிகையை திருமணம் செய்து வைக்க பையன் வீட்டில் ஒத்துக்கொள்ளவே இல்லை. ஏனெனில் நடிகை எடுத்திருந்த பெயர் அப்படி. ஆனால் காதலர் விடாப்பிடியாக இருந்து சம்மதம் வாங்கி திருமணம் செய்துகொண்டார்.
தடம் மாறிய கணவர்?: திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் சுமூகமாகத்தான் வாழ்ந்துவந்தார்கள். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்றெல்லாம் புகழப்பட்டார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாகவே நடிகையின் கணவர் தடம் மாறிவிட்டாராம். அதாவது சோஷியல் மீடியா பிரபலமாக இருந்து பின்னர் நடிகையாக மாறிய இளம்பெண்ணுடன் நடிகையின் கணவருக்கு பழக்கம் ஏற்பட்டதாம். சரி சாதாரணமான பழக்கம்தான் என நடிகையும் விட்டிருக்கிறார்.
ஒரே வீட்டில் குடித்தனம்?: ஆனால் நாட்கள் செல்ல கணவரின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தனவாம். என்ன ஏதென்று நடிகை விசாரித்தபோதுதான் தெரிந்திருக்கிறது அந்த இளம் நடிகையுடன் தனது கணவர் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்திவருவது. வாரத்துக்கு 2 நாட்கள் இங்கே 5 நாட்கள் அங்கே என்று காயை லாவகமாக நகர்த்தி வந்திருக்கிறார் கணவர். மேலும் அந்த இளம் நடிகை கரு கலைப்பும் செய்திருக்கிறார். இதை கண்டுபிடித்த கணவரை கண்டிதத்து வெளுத்ததோடு மட்டுமின்றி விவாகரத்து செய்வதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











