குழந்தை பெத்துக்கமாட்டேன்.. அடம் பிடிக்கும் ஹீரோயின்.. கணவரை கிட்டயே விடலயாம்.. என்ன நடக்குது?

By Staff

சென்னை: வெளிச்ச நடிகைக்கு அண்மையில்தான் திருமணம் நடந்து முடிந்தது. அவரது திருமணம் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் பரவிவந்த சூழலில் சத்தமே இல்லாமல் அவர் நீண்ட வருடங்களாக ஒருவரை காதலித்த விஷயம் பலரையும் ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதனையடுத்து பார்ட்டி நகரத்தில் வைத்து அவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. ஆனால் இப்போது அவர்களது திருமண வாழ்க்கையில் சில சஞ்சலங்கள் தோன்ற ஆரம்பித்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

சினிமா பின்னணியுள்ள குடும்பத்தில் பிறந்தவர்தான் இந்த நடிகை. ஆரம்பத்தில் சினிமாவில் ஆர்வம் இல்லாமல் இருந்த அவருக்கு போகப்போக ஆக்டிங் மீது ஆசை வந்தது. அதனை தனது குடும்பத்தினரிடம் சொல்லி பர்மிஷனும் வாங்கிவிட்டார். அதனையடுத்து வரிசையாக அம்மணி நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவரது நடிப்பு, எக்ஸ்பிரஷன் உள்ளிட்டவைகளை ரசிகர்களும், நெட்டிசன்களும் கடுமையாக ட்ரோல் செய்தார்கள். ஆனால் அதையெல்லாம் நடிகை கண்டுகொள்ளவில்லை.

gossip tamil cinema

முன்னணி நடிகை: தனது திறமையை வளர்த்து படிப்படியாக உச்சம் நோக்கி சென்றார் அவர். அதனால் அவருக்கு நல்ல பெயரும், சம்பளமும் கிடைத்தன. அதேபோல் விருதினையும் வென்று அசத்தினார். அதன் பிறகு வரிசையாக நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகை என்ற பெயரையும் பெற்றார். தமிழில் இருக்கும் பெரும்பாலான டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துவிட்டார் அவர். இதனால் இன்னும் சில வருடங்கள் மிகப்பெரிய ரவுண்ட் வருவார் என்று ஆரூடம் கூறப்பட்டது.

காதல் கிசுகிசு: சூழல் இப்படி இருக்க அவருக்கும் ஒல்லியான பிரபலம் ஒருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதனையடுத்து காமெடி நடிகர் ஒருவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். இவை எல்லாத்துக்கும் மேலாக மாஸ் நடிகரோடு தொடர்ந்து அவரை இணைத்து வைத்து பேசினார்கள். அத்தனைக்கும் பொறுமையை மட்டுமே காத்தார் வெளிச்ச நடிகை. அவரது மௌனத்தை பார்த்த ஒருதரப்பினர் அவர் சும்மா இருப்பதை பார்த்தாலே தெரிகிறது மாஸ் நடிகருக்கும் அவருக்கும் தொடர்பு என்று கொளுத்தி போட்டார்கள்.

ரகசிய காதல்: ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்றை வைத்தார் அவர். தான் காதலிக்கிறேன் ஆனால் அவர் சினிமாக்காரர் இல்லை என்று சொல்லி காதலரை அறிமுகப்படுத்திவைத்தார். அவர் மிகப்பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலைமை இப்படி இருக்க இருவருக்கும் அண்மையில் பார்ட்டி நகரத்தில் வைத்து கோலாகலமாக இரண்டு முறை திருமணம் நடந்தது. அதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை சுமூகமாகத்தான் தொடங்கினார்கள்.

அடம் பிடிக்கும் நடிகை: இந்நிலையில் அவர்களது திருமண வாழ்க்கையில் புது பிரச்னை ஒன்று எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறதாம். அதாவது நடிகையின் கணவர் குடும்பம் ரொம்பவே ட்ரெடிஷனலான குடும்பமாம். கல்யாணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று முதலில் கண்டிஷன் போட்டார்களாம். அதற்கு நடிகையோ அதெல்லாம் முடியாது என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். சரி நடித்துக்கொள் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்று கணவர் கேட்டாராம்.

அதற்கு அம்மணியோ குழந்தையெல்லாம் பெற்றுக்கொள்ள முடியாது; அப்படி பெற்றுக்கொண்டால் எனது அழகு போய்விடும். வாய்ப்புகள் வராது என்று கறார் காட்டுகிறாராம். அதுமட்டுமின்றி அருகருகே இருந்தால்தானே குழந்தைக்கு வாய்ப்பு என்று கணவரை அவ்வப்போது தன்னிடம் நெருங்கவே விடுவதில்லையாம். ஒருபக்கம் மனைவி இப்படி சொல்ல மறுபக்கம் தனது குடும்பத்தினர் குழந்தை பெற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதால் புது கணவர் பொலிவிழந்து இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X