ஹோட்டலில் ரூம் போட்ட சீனியர் நடிகை?.. ஃபாலோ செய்து கண்டுபிடித்து கண்டித்த தாய்?.. மிரட்டிய புள்ளி?
சென்னை: கோலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் அந்த நடிகை. முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி வைத்திருந்தார். இப்போது நடிகை சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். இந்தச் சூழலில் புதிய கிசுகிசு ஒன்று அந்த நடிகையை பற்றி கோடம்பாக்கத்தில் பலமாக கிளம்பியிருக்கிறது.
இள வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார் அந்த நடிகை. அவரது தாயும் திரைத்துறையை சேர்ந்தவர்தான் என்பதால் சினிமா எண்ட்ரி சுலபமாக நடிகைக்கு கிடைத்தது. எண்ட்ரி சுலபமாக கிடைத்துவிட்டாலும் தன்னுடைய திறமையை கொண்டே நடிகை படிப்படியாக வளர தொடங்கினார். அதன் காரணமாக குறுகிய காலத்திலேயே தமிழ்நாட்டில் அந்த நடிகையின் புயல் பலமாக அடிக்க ஆரம்பித்தது என்றுதான் சொல்ல வேண்டும். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடவும் ஆரம்பித்தார்.

கனவு கன்னி: பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்த நடிகையை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது உடல், பொருள், ஆவியை அர்ப்பணம் செய்ய தயாராக இருந்தன. ரசிகர்களின் இந்த பயங்கர கிரேஸ் காரணமாக கனவு கன்னியாக வலம் வர ஆரம்பித்தார் அம்மணி. அந்த சமயத்தில் நடிகை தொட்டதெல்லாம் ஹிட்தான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தினார்.
நடிகருடன் காதல்?: ஒரு நடிகை பீக்கில் இருந்தாலே அவரை சுற்றி கிசுகிசுக்கள் பறக்கும் என்பது கோலிவுட்டின் எழுதப்படாத விதி. அந்த விதியின் அடிப்படையில் நடிகையை சுற்றியும் கிசுகிசு ஓடியது. அதாவது சினிமா குடும்பத்தை சேர்ந்த ஒரு நடிகரை நடிகை காதலித்தார் என்றும்; அவர்களுக்கு என்று ஹோட்டலில் எப்போதுமே ஒரு அறை புக்கிங்கில் இருக்கும் என்றும் அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் நடிகையும், நடிகரும் அமைதி காக்கவே செய்தார்கள்.
திருமணம்: அந்த கிசுகிசு நாளடைவில் வளர்ந்துகொண்டே போனது. நிலைமை இப்படி இருக்க திடீரென வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது நடிகைக்கு. அதற்கு காரணம் அந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் வீக் என்பதால்; அவருக்கு கட்டிக்கொடுத்தால் சரியாக இருக்காது என்று நினைத்த தாய் வேறு ஒருவருக்கு நடிகையை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டார் என்று சொல்வார்கள். அவர்களது திருமண வாழ்க்கையும் சுமூகமே.
ரூம் போட்ட நடிகை: இந்த நடிகை முழுக்க முழுக்க தாயின் கட்டுப்பாட்டிலேயே இருந்தவர். ஆனால் சமீப காலமாக தாயின் பேச்சை சுத்தமாக கேட்பதில்லையாம் நடிகை. அதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் வேறு உறவு முறைக்கு அவர்களை அழைத்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது. நடிகையும் முழு மனதோடு தன்னை முழுதாக ஒப்படைத்துவிட்டாராம். இதனால் கர்ப்பிணி ஆனாராம் அம்மணி.
நடிகையின் கணவர் என்ன செய்வதென்று தெரியாமல் நடிகையின் தாயிடம் சென்றாராம். தாய்க்கு இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை கொடுக்க; நடிகையை அழைத்து கடுமையாக கண்டித்தாராம். ஒருமுறை நடிகையை அவருக்கே தெரியாமல் ஃபாலோ செய்த தாய்க்கு இடிதான் இறங்கியதாம். அந்த முக்கிய புள்ளியோடு நடிகை ரூம் போட்ட விஷயம் அப்போது தெரியவந்திருக்கிறது.
உடனடியாக அந்த ஹோட்டலுக்கு சென்ற தாய் நடிகையை சரமாரியாக திட்டிவிட்டாராம். அப்போது அருகிருந்த முக்கிய புள்ளி நீங்கள் எப்படி இவளை திட்டலாம். இனி ஒருமுறை இப்படி நடந்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன் என்று நடிகையின் முன்பே தாயை அரட்டிவிட; இப்போது நடிகையின் கணவரும், தாயும் என்ன செய்வதென்று புரியாமல் திணறுகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











