இன்னொரு பெண்ணுடன் நடிகரின் உறவு.. கடற்கரையில் அடித்த கூத்து.. ஆதாரத்தை வெளியிடப்போகும் மனைவி?

By Staff

சென்னை: கோலிவுட்டில் சமீபகாலமாக ஒரு டாபிக்தான் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் மீதுதான் தவறு என்று ஒருபக்கம் குரல்கள் எழ; இல்லை இல்லை அவரது மனைவி மீதுதான் தவறு என்று மறுபக்கம் சொல்ல; எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக ஒரு பெண்ணுடன் நடிகருக்கு இருந்த ரகசிய உறவுதான் இவை எல்லாத்துக்கும் காரணம் என்று பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இந்தச் சூழலில் ஒரு கிசுகிசு கோடம்பாக்கத்தில் புதிதாக கிளம்பியிருக்கிறது.

சினிமா என்றாலே பெரும்பாலான நடிகர்கள் ஏதாவதொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்வார்கள். ஆனால் விதிவிலக்காக சிலர் மட்டும்தான் சர்ச்சையா அப்படி என்றால் என்ன என்பதுபோல் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் வெற்றி நடிகர். அவர் மட்டுமின்றி அவரது குடும்பமே எந்த சர்ச்சையிலும் சிக்காமல்தான் இதுநாள்வரையிலும் கோலிவுட்டில் கோலோச்சிவந்தனர். மேலும் பக்குவமான குடும்பம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்கள்.

gossip tamil cinema

பஞ்சாயத்து: ஆனால் சமீப காலமாகவே வெற்றி நடிகரை சுற்றி கிசுகிசுக்கள் கிளம்ப ஆரம்பித்தன. அதனை கேள்விப்பட்ட பலரும் ச்ச ச்ச அதெல்லாம் இருக்காது; வெற்றி நடிகரின் இமேஜை உடைப்பதற்காக வேண்டுமென்றே சிலர் கிளப்பிவிடுகிறார்கள் என்றுதான் பேசினார்கள். அது நாளடைவில் வளர்ந்து வளர்ந்து வெடித்தேவிட்டது. அதற்கு காரணம் நடிகரின் மனைவிதான் என்று ஒருதரப்பினர் திட்டவட்டமாக கூறிவந்தனர்.

மனைவியின் குடும்பம்: அதாவது நடிகரின் குடும்பம் கூட்டு குடும்பம்தான். ஆனால் வெற்றி நடிகரை திருமணம் செய்துகொண்ட அந்தப் பெண்; நடிகரை அவரது குடும்பத்திலிருந்து பிரித்து தனது அம்மா வீட்டிலேயே தங்க வைத்துவிட்டார்; மாமியார் வீட்டு கட்டுப்பாட்டில்தான் வெற்றி நடிகர் இருந்தார். அதனால்தான் கடந்த சில காலமாக வெற்றி நடிகருக்கு எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டாகவில்லை என்ற முணுமுணுப்புகள் கேட்க ஆரம்பித்தன.

சந்தேகம்?: இது ஒருபக்கம் இருக்க நடிகர் மீது மனைவிக்கு சந்தேகமும் வலுத்தது. அதன் காரணமாகத்தான் நடிகர் ஒரு அதிரடியான முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக மனைவியின் சந்தேகத்துக்கு காரணமே நடிகரின் செயல்பாடுதான் என்று இப்போது கூறுகிறார்கள். அதாவது ஃபேமஸான பெண் ஒருவருடன் விழா ஒன்றில் நடிகருக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் ரகசிய காதலாக மாறிவிட்டதாம். மனைவியின் சந்தேகம், மாமியார் வீட்டு கட்டுப்பாடு என நடிகர் டிப்ரெஸனில் அந்தப் பெண்ணுடன் அளவுக்கு அதிகமாகவே பழக ஆரம்பித்தாராம் நடிகர்.

அடித்த கூத்து: அதன் காரணமாக மனைவியிடம் அவுட்டோர் ஷூட்டிங் செல்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு; கடற்கரையோர ரெசார்ட்டாக பார்த்து நடிகரும், அந்தப் பெண்ணும் ரூம் புக் செய்வார்களாம். ஒருகட்டத்தில் வெளியே செல்ல சோம்பேறிப்பட்டு சென்னையிலேயே ரூம் புக் செய்ய அங்கிருப்பவர்கள் நடிகரின் மனைவிக்கு தந்தி அடித்துவிட்டார்களாம். அதிலிருந்து மனைவியார் நடிகர் மீது உச்சக்கட்ட சந்தேகம் அடைய ஆரம்பித்தாராம். ஒருமுறை நடிகருக்கே தெரியாமல் ஆள் வைத்து அவரை ஃபாலோ செய்ய சொன்ன மனைவிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்ததாம்.

அதாவது யாருமில்லாத ஒரு மாலை நேரத்தில் கடற்கரை மணலில் அந்தப் பெண்ணுடன் நடிகர் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பது தெரியவந்ததாம். இருந்தாலும் கணவரை பிரிய மனம் இல்லாததால் முடிந்தளவு கட்டுக்குள் வைத்து வாழ்க்கையை நகர்த்தலாம் என்ற நினைப்பில் இருந்தபோது; அந்தப் பெண் மீது மோக போதை முற்றியதால் நடிகர் ஒரு விபரீத முடிவு எடுத்துவிட்டாராம். இதனால் உச்சக்கட்ட கோபமடைந்த அந்த நடிகரின் மனைவி விரைவில் தனது கணவரின் முகத்திரையை கிழிக்கும் விதமாக பல ஆதாரங்களை வெளியிட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X