அந்த ஹீரோவுடன் ரூம்வரை சென்ற பழக்கம்?..ஸ்லிம் நடிகையை நடு ராத்திரி ரோட்டில் இறக்கிவிட்ட காதலர்?..

By Staff

சென்னை: ஸ்லிம் நடிகையை நடு ராத்திரி அவரது காதலர் சாலையில் இறக்கிவிட்டுவிட்டு வந்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

வட மாநிலத்தை சேர்ந்த அந்த நடிகை தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவரின் படத்தில்தான் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே இரண்டு தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தன்னுடைய நடிப்பின் மூலம் அப்ளாஸையும் அள்ளினார்.

Gossip In Tamil Cinema at actress was dropped off by her lover on the road in the midnight

டாப் நடிகை: அந்தப் படத்துக்கு பிறகு நடிகையை தேடி வாய்ப்புகள் குவிந்தன. குறிப்பாக நடிகையின் அழகுக்கு தமிழ்நாடு ரசிகர்கள் சிறைப்பட்டு போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். குவிந்த வாய்ப்புகளை அள்ளி தனது ஹேண்ட் பேக்கில் போட்டுக்கொண்டு பறந்து பறந்து நடித்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கொடிக்கட்டி பறந்து டாப் நடிகையாக திகழ்ந்தார்.

இவர் இருந்தால் அது தேவையில்லை: இந்த நடிகையிடம் பெரிய ப்ளஸ் பாயிண்ட் என்னவென்றால் இவரது ஸ்லிம்மான உடல்தான். தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொஞ்சம் பூசினாற் போல் ஹீரோயின் இருந்தால்தான் பிடிக்கும் என்ற பிம்பத்தை தனது தேகத்தால் தகர்த்து எறிந்தார். மேலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்திற்கும் இவர் செட் ஆனார். கிளாமர் ரோலுக்கும் செட் ஆனார். அதனால் இவரை நடிக்க வைத்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் தயாரிப்பாளர்களும், இயக்குநரும் இவரையே புக் செய்தனர்.

காதல்: இப்படி அம்மணியின் கிராஃப் உச்சத்தில் சென்று கொண்டிருக்கும்போது வாரிசு நடிகருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் பின் நாட்களில் காதலாக மாறியதாம். அதாவது வாரிசு நடிகருடன் இணைந்து ஒரு பாடலுக்கு போட்ட கிளாமர் ஆட்டம் இன்றுவரை பலரது ஃபேவரைட். அதன் பிறகு அவருடன் சேர்ந்து ஒரு படமும் நடித்தார். இந்த காலத்தில்தான் இருவருக்கும் காதல் பூத்திருக்கிறது.

டார்ச்சர்: ஆனால் அந்த நடிகரோ நடிகை மீது ரொம்பவே பொசசிவாக இருந்தாராம். நாட்கள் செல்ல செல்ல அந்த பொசசிவ் டார்ச்சர் என்ற நிலைக்கு சென்றுவிட்டதாம். இருந்தாலும் நடிகர் மீது இருந்த காதலால் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டாராம் நடிகை. நிலைமை இப்படி இருக்க தமிழ் சினிமாவின் மூத்த நடிகருடன் இணைந்து சில படங்களில் நடித்தார் நடிகர்.

பத்திக்கிச்சு: அந்த நடிகரை சுற்றி பெண்கள் விஷயத்தில் சர்ச்சைகள் எழுவது உண்டு. சூழல் இப்படி இருக்க இந்த நடிகையும் அந்த நடிகரின் வலையில் விழுந்துவிட்டாராம். படத்தின் பாடல் காட்சியில் நெருக்கமாக இருவரும் நடிக்க இவர்களது பழக்கம் ஷூட்டிங் ஸ்பாட் தாண்டி தனி அப்பார்ட்மெண்ட் ரூம்வரை சென்றிருக்கிறது.

இதையெல்லாம் கவனித்த வாரிசு நடிகர் ஒரு நாள் இரவு நடிகையை அழைத்துக்கொண்டு லாங் டிரைவ் சென்றாராம். அப்போது எதற்காக அந்த ஹீரோவுடன் இவ்வளவு நெருக்கமா நடிக்கிற என கேட்க அதற்கு நடிகை ஒன்று சொல்ல; சரி எதற்காக அடிக்கடி அப்பார்ட்மெண்ட்டுக்கெல்லாம் வராரு என நடிகர் கேட்டாராம். இப்படி அந்த விவகாரம் இருவருக்கும் விவாதமாக மாறியிருக்கிறது. இதனால் டென்ஷனான நடிகர் ஸ்லிம் நடிகையை நடு ரோட்டிலேயே இறக்கிவிட்டு வந்துவிட்டாராம்.

நடு இரவில் நடு சாலையில் நடிகை தன்னந்தனியாக நிற்க விஷயம் எப்படியோ மூத்த நடிகருக்கு சொல்லப்பட அவர் வந்து நடிகையை அழைத்து சென்றாராம். அந்த சம்பவத்துக்கு பிறகு வாரிசு நடிகரைவிட்டு பிரிந்த நடிகை கொஞ்ச காலம் மூத்த நடிகருடன் இருந்தாராம். ஆனால் ஒருகட்டத்தில் மூத்த நடிகரும் தன்னுடைய சில வேலைகளை காண்பிக்க; உஷாரான நடிகை ஆளை விடுங்க ப்பா என்று சொல்லி திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X