மலேசியாவில் போதையில் மட்டை.. இயக்குநர், நடிகரை காண்டாக்கிய நடிகை.. ஊருக்கே அனுப்பிட்டாங்களாம்

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் அந்த நடிகை பெரிய ரவுண்டு வருவார் என்றுதான் கணிக்கப்பட்டிருந்தது. அவருக்கும் வரிசையாக படங்கள் ஹிட்டாகிக்கொண்டிருந்தன. ஆனால் இடையில் அவரது கவனங்கள் வேறு விஷயங்களில் செல்ல; சினிமா கரியர் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இப்போது மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் வந்ததுமே அவர் சேட்டையை காண்பிக்க; படக்குழு காண்டாகிவிட்டதாம்.

பக்கத்து மாநிலத்தை சேர்ந்தவர் அந்த நடிகை. அழகு, திறமை என அத்தனையும் கொட்டி கிடக்கிறது அவரிடம். விலங்கு தொடர்பான ஒரு படத்தில் அறிமுகமான அவருக்கு; முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. லட்சுமிகரமான முகம், அசாத்திய திறமையை பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாட ஆரம்பித்தார்கள். திரைத்துறையினரும் அந்த நடிகையை பல படங்களுக்கு புக் செய்தார்கள். அவரும் அதனை பயன்படுத்தி நடிக்க தொடங்கினார்.

நடிகைக்கு ஏறிய தலைக்கனம்?: தொடர்ந்து அவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. எனவே நிச்சயம் இன்னும் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்காவது அம்மணியின் ஆட்சிதான் கோலிவுட்டில் நடக்கப்போகிறது என ஆரூடமும் பலர் கூறினார்கள். ஆனால் தொடர் வெற்றிகள் அவருக்கு மமதையை கொடுத்துவிட்டதாக தெரிகிறது. யாரையும் மதிக்காமல் ஓவர் ஆட்டிட்யூடையும் அவர் காண்பித்துக்கொண்டிருந்தார். சரி வெற்றி பெற்றவர் இப்படி இருக்கிறார் என மற்றவர்களும் விட்டுவிட்டார்கள்.

Gossip in Tamil Cinema is Actress Removed From Film After Alleged Drunken Behavior in Malaysia Shoot

சிதறிய கவனம்: ஆனால் அம்மணியின் கவனம் காலப்போக்கில் வேறு விஷயங்களுக்கும் சென்றது. முக்கியமாக மது. மதுவை கண்டால் போதும் அனைத்தையும் விட்டுவிட்டு அங்கே குடிகொண்டுவிடுவார். குடித்துவிட்டு அமைதியாக வீட்டுக்கு செல்லும் பழக்கமும் இல்லை. சாலைகளில் வம்பிழுப்பது; அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் ஃபோன் செய்து வம்பிழுப்பது என அலப்பறையை கூட்டுவதை வாடிக்கையாக்கினார். இதன் காரணமாக சினிமா வாய்ப்புகளும் பறிபோக ஆரம்பித்தன.

மீண்டும் வந்த நடிகை: கடந்த சில காலமாகவே அப்படித்தான் அவர் இருந்தாராம். அவரது நலம் விரும்பிகள் எல்லாம் அவருக்கு புத்திமதி சொல்லி மாற்றியதால்; மதுவை கொஞ்சம் குறைத்துவிட்டு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவரது இந்த மாற்றத்தை அறிந்த பெரிய இயக்குநர் ஒருவர்; தனது தயாரிப்பிலேயே நடிப்பதற்கு புக் செய்தும்விட்டார். படத்தின் பூஜை, ஷூட்டிங் எல்லாம் மலேசியாவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சேட்டையை காண்பித்த நடிகை: நடிகை திருந்திவிட்டார் என்றுதான் அனைவருமே நினைத்திருந்தார்கள். ஆனால் மலேசியாவுக்கு சென்று தான் தங்கியிருந்த ஹோட்டலில் விதவிதமான மது வகைகளை பார்த்துவிட்ட அவர்; கபாலம் கலங்கும்வரை குடித்துவிட்டு பூஜைக்கு தள்ளாடியபடி வந்தாராம். சிறிது நேரம் நின்றுவிட்டு எனக்கு அசதியாக இருக்கிறது என சொல்லி ரூமுக்கு சென்ற அவர்; மீதம் இருக்கும் மதுவையும் குடித்துவிட்டு மட்டையாகிவிட்டாராம். இதன் காரணமாக முதல் நாளே ஷூட்டிங் எதுவும் நடக்காமல் படக்குழு தவித்திருக்கிறது. இதை பார்த்து காண்டான படக்குழு அடுத்த நாளே நடிகைக்கு டிக்கெட் போட்டு இந்தியாவுக்கு அனுப்பிவிட்டதாம். இப்போது வேறு ஹீரோயினை தேடும் படலம் தொடங்கியிருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X