நடிகையுடன் நெருக்கம் காட்டிய நடிகர்.. உச்சக்கட்ட கோபத்தில் மனைவி?.. அரசியல்வாதி வேற என்ட்ரியாம்

By Staff

சென்னை: சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்துதான் அந்த நடிகர் நடிக்க வந்தார். அதிலும் அவரது குடும்பம் திரையுலகில் பவர் செண்ட்டர்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களில் நடித்து வளர்ந்துவந்த அவருக்கு மலர் படம் பான் இந்தியா ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது. மேலும் விருதையும் வாங்கிக்கொடுத்தது. இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்கலிலும் சிக்காமல் இருந்த அந்த நடிகர் இப்போது ஒரு விஷயத்தால் மனைவியிடம் படாத பாடு படுகிறாராம்.

சினிமாவில் நுழைந்து ஃபேமஸ் ஆக வேண்டும் என்பது பலரது கனவு. சினிமாதான் புகழையும், பணத்தையும் அதிகமாக கொடுக்கும் என்பதால் அந்த கனவு தொழிற்சாலையில் இருக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். அந்த ஆசை பலருக்கு நிராசையாகிப்போனது உண்டு. அதேசமயம் சினிமா பின்னணியுள்ள குடும்பம் என்றால் எளிதாக சினிமாவுக்குள் நுழைந்துவிடலாம்தான். ஆனால் நிலைத்து நிற்பதற்கு திறமையும், மிகப்பெரிய உழைப்பும் வேண்டும். அப்படித்தான் இந்த நடிகரும் திறமையை கொண்டு நிலைத்திருக்கிறார்.

gossip tamil cinema


ஃபேமஸ் நடிகர்: அவர் நடிக்க ஆரம்பித்த புதிதில் சில படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இத்தனைக்கும் சினிமாவுக்கு தேவையான இலக்கணங்களை அவர் கற்றுக்கொண்டுதான் உள்ளே நுழைந்தார். அதுமட்டுமின்றி அழகு என்றால் அப்படி ஒரு அழகு. இந்த நடிகருக்கு பெண் ரசிகைகளும் ஏராளம். அவர்தான் தங்களது க்ரஷ் என்று பல பெண்கள் சொல்லியதுண்டு; சமூக வலைதளங்களில் பதிவிட்டதும் உண்டு.

பான் இந்தியா ஹீரோ: இருந்தாலும் அந்த நடிகர் எதிர்பார்த்த பெரிய வெற்றி கிடைக்காமல் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் அந்த நடிகரின் நடிப்பில் மலர் படம் ரிலீஸானது. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூலையும் ஈட்டியது. இதன் காரணமாக நடிகரும் பான் இந்தியா ஹீரோவாகிவிட்டார். மேலும் மார்க்கெட்டும் உச்சக்கட்டத்தில் உயர்ந்து நிற்கிறது. சமீபத்தில் வெளியான அவரது படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சக்கைப்போடு போட்டுவருகிறது. பல படங்களின் வசூல் சாதனைகளை முறியடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் திரைத்துறையில் பலமாகவே எழுந்திருக்கிறது.

நோ சர்ச்சை: ஒரு நடிகர் அதிகமாக ஃபேமஸ் ஆனால் அவரை சுற்றி சர்ச்சைகளும் வளர்வது சினிமாவில் இயல்பான ஒன்று. ஆனால் இந்த நடிகர் இத்தனை வருடங்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருக்கிறார். அன்பான மனைவி, குழந்தைகள் என தனது குடும்பத்துடன் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்துவருகிறார். நடிகரின் மனைவி சினிமா துறையில் இல்லாவிட்டாலும்; தன்னுடைய கணவரின் கரியருக்கு பக்கபலமாக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையுடன் நெருக்கம்: நிலைமை இப்படி சுமூகமாக சென்றுகொண்டிருக்கும் சூழலில் இப்போது நடிகரின் வீட்டில் பூகம்பம் வெடித்திருக்கிறதாம். அதாவது சமீபத்தில் வெளியான படத்தில் இந்திய அளவில் இப்போதைக்கு பலருக்கும் க்ரஷ்ஷாக இருக்கும் நடிகையுடன் ஜோடி சேர்ந்திருந்தார். பாடல்கள் மற்றும் காட்சிகளில் நடிகருக்கும், நடிகைக்கும் ரொம்பவே நெருக்கம் இருந்தது. முக்கியமாக ஒரு பாடலில் தூக்கி வைத்தெல்லாம் ஆடினார். அதேபோல் ஒரு சீனில் நடிகரின் மேல் நடிகை படுத்திருந்த ஃபோட்டோவும் ட்ரெண்டானது. இதனைப் பார்த்த நடிகரின் மனைவி எந்த நடிகையுடனும் நெருக்கமாக நடிக்காத நீங்கள் இந்த நடிகையுடன் மட்டும் ஏன் இவ்வளவு நெருக்கமாக நடிக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறாராம்.

அதுமட்டுமின்றி ஒருவேளை தனது கணவருக்கும், அந்த நடிகைக்கும் ஏதேனும் லிங்க் ஆரம்பித்துவிட்டதோ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டாராம். இதனைப் பார்த்த நடிகரின் மாமனார் (அவர் ஒரு ஃபேமஸ் அரசியல்வாதி என்பது கவனிக்கத்தக்கது) நடிகரிடம் நேரடியாக வந்து; உங்களுக்கும் அந்த நடிகைக்கும் ஏதும் தொடர்பிருந்தால் ஓபனாக என்னிடம் சொல்லிவிடுங்கள்; அந்தப் பழக்கத்தை கட் செய்துவிடுங்கள் என்று மிரட்டல் தொனியில் அட்வைஸ் செய்துவிட்டு போனாராம். இதன் காரணமாக நடிகர் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X