ஓவர் ஆட்டிட்யூட் உடம்புக்கு ஆகாது... தூக்கி அடித்த தயாரிப்பு நிறுவனம்... கண்டுகொள்ளாத ஹீரோ..?
சென்னை: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரத்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் நம்பர் நடிகையின் காதல் கணவர் தான் டாப் ஹீரோவின் படத்தை இயக்குவார் என அறிவிப்பு வெளியானது.
ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக வளர்ந்து வரும் மற்றொரு இயக்குநர் அந்த வாய்ப்பை தட்டித் தூக்கியுள்ளாராம்.
நம்பர் நடிகையின் காதல் கணவர் நீக்கப்பட்டதற்கு ஓவர் ஆட்டிட்யூட் தான் காரணம் என சொல்லப்படுகிறது.

நம்பர் நடிகையின் கணவர்
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரம் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தரமான ஹிட் கொடுத்தது. இதனால் அவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. பிரம்மாண்டமான படங்களை தயாரித்து நிறுவனத்துடன் டாப் ஹீரோ கூட்டணி வைக்க, அந்தப் படத்தின் இயக்குநரும் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. கோலிவுட்டின் சூப்பர் நடிகை என ரசிகர்களால் கொண்டாடப்படும் நம்பர் ஹீரோயினின் காதல் கணவர் தான் அவர். 8 மாதங்களுக்கு முன்பே இந்த அப்டேட் வெளியானாலும், இயக்குநரோ மனைவியுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் அடித்து வந்தார்.

அதிரடியாக நீக்கம்
ஆனால், எட்டு மாதங்களாகவும் திரைக்கதையை சரியாக ரெடி செய்யாமல் ஷூட்டிங் போக ரெடியாகிவிட்டாரம் அவர். ஹீரோவும் தயாரிப்பு நிறுவனமும் திரைக்கதையே கேட்க இயக்குநரோ மெல்ல மெல்ல தனது ஆட்டிட்யூட்டை காட்டத் தொடங்கியுள்ளார். டாப் ஹீரோவுக்கு ஏற்றபடி திரைக்கதையை மாற்றாமல் போனதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் திரைக்கதையெல்லாம் ஷூட்டிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என உச்ச நட்சத்திரத்தையே செம்ம கூலாக ஹேண்டில் செய்ய நினைத்துள்ளாராம். முதலில் நம்பர் நடிகைக்காக ஓக்கே சொன்ன டாப் ஹீரோ, அதன்பிறகு இது சரிபட்டு வராது என தயாரிப்பு நிறுவனத்திடம் கூறிவிட்டாராம். இதனையடுத்தே இயக்குநரை அதிரடியாக நீக்கியதாம் தயாரிப்பு தரப்பு.

எப்போதும் இப்படித்தான்?
முன்னதாக சின்ன திரையில் இருந்து தற்போது வெள்ளி திரையில் கலக்கி வரும் சிவமயமான நடிகரின் இரண்டெழுத்து திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. அறிமுக இயக்குநரின் காம்போவில் இதே தயாரிப்பு நிறுவனம் தயாரித்த அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. ஆனால், முதலில் இந்தக் கூட்டணியில் சிவமயமான ஹீரோவுடன் நம்பர் நடிகையின் கணவரின் பெயரை தான் தயாரிப்பு நிறுவனம் டிக் செய்திருந்ததாம். ஆனால், கதை எழுத மட்டுமே பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் பகுதியில் பைவ் ஸ்டார் ஹோட்டலை புக் செய்து தருமாறு அவர் கேட்டாராம்.

இனி சரிபட்டு வராது
அப்போதே இந்த இயக்குநரின் ஆட்டியூட்டை பார்த்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம், கதை எழுதவே இப்படி செலவை இழுத்துவிட பார்க்கிறார் என்றால், ஷூட்டிங் முடிவதற்குள் என்னவாகுமோ என அந்த ப்ராஜக்ட்டை கேன்சல் செய்துவிட்டதாம். தயாரிப்பு நிறுவனம் ஒன்று சொல்ல, இயக்குநர் ஒன்று செய்ய இப்போதும் உச்ச நட்சத்திரம் படத்திலும் அதேதான் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் டாப் ஹீரோவின் படத்தில் இருந்து இயக்குநரை நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











