புதிய வில்லிகள் வருகை.. கலக்கத்தில் நாட்டாமை மகள்!

புதிய வில்லிகளின் வருகையால் நாட்டாமை மகள் கலக்கத்தில் இருக்கிறார்.

Recommended Video

புதிய வில்லிகள் வருகை...கலக்கத்தில் நாட்டாமை மகள்!- வீடியோ

சென்னை: மூத்த நடிகைகள் சிலர் வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதால், நாட்டாமை மகள் கலக்கம் அடைந்துள்ளார்.

திரைக்கு வெளியே கோழி நடிகருடன் காதல் என்ற பரபரப்பு ஒருபுறம் இருக்க, சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் நாட்டாமை மகள். ஆஜானுபாகுவான உடற்கட்டு, கரகரப்பான குரல் என தமிழ் ரசிகர்களுக்கு அவரது நடிப்பு பிடிக்காமல் போகவே, அப்பா பாணியில் வில்லியாக முடிவு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது காதலர் படம் உட்பட முன்னணி படங்கள் சிலவற்றில் வில்லியாக நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக காதலர் படத்தில் அவரது கதாபாத்திரம் நீலாம்பரி ரேஞ்சுக்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வில்லிகள் பற்றாக்குறை:

வில்லிகள் பற்றாக்குறை:

கொடூர வில்லன்களை அதிகமாகப் பார்த்த தமிழ் சினிமாவில், வில்லிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தளவிற்கு காமெடியிலும், வில்லத்தனத்திலும் தமிழ் சினிமாவில் பெண்களுக்கு அதிக வாய்ப்பில்லை. ஆனால், நாட்டாமை மகளுக்கு அடுத்தடுத்து வெளிவரப்போகும் படங்களில் எல்லாமே சூப்பர் எதிர்மறை கதாபாத்திரங்கள்.

மாஜி நாயகிகளின் முடிவு:

மாஜி நாயகிகளின் முடிவு:

இதனால் அவர் வில்லியாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சம்பந்தப்பட்ட படக்குழுக்கள் கூறுகின்றன. இந்த விசயம் வெளியே கசிந்ததால், மார்க்கெட் இழந்த பல மாஜி நாயகிகளும் இனி வில்லி வேடத்தில் நடிக்க முடிவு செய்துள்ளனராம். இது தொடர்பாக தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் அவர்கள் சந்தித்து வருகின்றனர்.

கலக்கத்தில் வில்லி:

கலக்கத்தில் வில்லி:

அவர்களில் இனிமையான நடிகை முக்கியமானவர். தேசிய விருது வாங்கிய படத்தில் அறிமுகமான அழகான அவருக்கு புதிய படங்கள் கைகூடி வரும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் நாட்டாமை மகள் கலக்கத்தில் இருக்கிறாராம்.

கவலை:

கவலை:

அதனால் வில்லியாக ஒரு ரவுண்டு வரலாம் என்ற தனது கனவு நனவாகாமல் போய்விடுமோ என்ற கவலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாம். எனவே, இனி ஒப்பந்தமாகும் புதிய படங்களில் வில்லி வேடங்களில் மேலும் வெரைட்டி காட்ட அவர் திட்டமிட்டுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X