அங்காடி நாயகிக்கு நோ சிபாரிசு... வெற்றி நாயகன் திடீர் முடிவு
அங்காடி நாயகிக்கு சிபாரிசு செய்வதில்லை என முடிவு செய்துள்ளார் வெற்றி நாயகன்.
சென்னை: நீண்டகாலமாக காதலர்கள் என்ற போர்வையில் வாழ்ந்து வருகின்றனர் இந்த வெற்றிகரமான நாயகனும், அங்காடி நாயகியும். எப்போது திருமணம் எனக் கேட்பவர்களிடம் நழுவி விடும் இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் படங்களுடம் செய்தி வெளியானது.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் வெள்ளித்திரையில் ஜோடி சேர்ந்தனர். வானில் பறக்கும் குழந்தைகளுக்குப் பிடித்தமான பொருளின் பெயரில் உருவான அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

இதனால் நாயகன் ரொம்பவே அப்செட்டாம். இதனால், முன்பைப் போல நாயகிக்கு யாரிடமும் சிபாரிசு செய்வதில்லையாம். இதனால் நாயகியும் ரொம்ப ரொம்ப அப்செட்டாம்.
படதோல்வியால் இருவரின் காதலிலும் விரிசல் விழுந்திருப்பதாக காதைக் கடிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
Comments


Click it and Unblock the Notifications