படவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி!
படவாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் மும்பைக்கே பறந்து விட்டார் சின்னப்பூ நடிகை.
Recommended Video

சென்னை: தமிழில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சென்னையைக் காலி செய்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கே சென்று விட்டாராம் சின்னப்பூ நடிகை.
ஒரு சாயலில் பூ நடிகையைப் போன்று இருந்ததால், அறிமுகப் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சின்னப்பூ நடிகை. ஆனால் நடிகையின் பப்ளி உடல்வாகு அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க தடையாக இருந்தது.

காதல் சர்ச்சை:
ஆனால் அதற்குள் சர்ச்சை நடிகருடன் காதல் வலையில் சிக்கினார். திருமணம் செய்து கொண்டு விரைவில் செட்டில் ஆகி விடுவார் என தயாரிப்பாளர்கள் கருதியதால் திரும்பவும் படவாய்ப்புகள் குறைந்தன.

வாய்ப்புகள் இல்லை:
இதற்கிடையே நடிகருடனான காதல் முறிந்ததால், மீண்டும் பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தினார். பேயாகக் கூட நடித்துப் பார்த்தார். ஆனபோதும் சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை.

கோபத்தில் நடிகை:
புதிய படங்களுக்காக அவரை அணுகியவர்களும், புதுமுக நடிகைக்கு கொடுப்பதைப் போல் குறைவான சம்பளமே பேசியுள்ளனர். இதனால் கடுப்பான நடிகைக்கு தமிழ் சினிமா மீதான நம்பிக்கை போய் விட்டது.

ஏமாற்றம்:
எனவே, மனம் வெறுத்துப் போன நடிகை இனி சென்னையில் தங்கினால் ஹோட்டல் பில் கூட கட்ட முடியாது என்ற முடிவுக்கு வந்து, மீண்டும் மும்பைக்கே பறந்து விட்டாராம். தமிழில் பூ நடிகையைப் போல் ஒரு ரவுண்டு வருவார், கோவில் எல்லாம் கட்ட வைப்பார் என எதிர்பார்த்த ரசிகர்கள் இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











