பாடி ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்கு.. ‘லீக்ஸ்’ நடிகையின் உண்மை நிலை இது தான்!
பாலியல் புகார் அளித்து வரும் நடிகைக்கு உள்ளூர நிறைய பயம் இருக்கிறதாம்.
Recommended Video

சென்னை: பாலியல் புகார்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அறிமுகம் தேவையில்லாத நடிகைக்கு, உள்ளூர உதறல் இருக்கத்தான் செய்கிறதாம். வெளியில் போல்டாக, தைரியசாலியாக காட்டிக் கொள்ளும் அவர், தனக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கொஞ்சம் கலக்கத்தில் தான் இருக்கிறார்.
தமிழில் முன்னணி பிரபலங்கள் பலரை கை காட்டி வரும், இவருக்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள். இதனால் அவர்களது நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கலக்கமும், உரிய ஆதாரங்கள் இல்லாமல் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற கேள்வியும் நடிகையின் மனதில் உள்ளதாம்.

ஆனாலும் அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து ஊடகங்களை அவர் சந்தித்து வருகிறார். தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் போராடி வருவதாகக் கூறினாலும், பணம் பறிக்கவே இப்படியான குற்றச்சாட்டுகளை அவர் தெரிவித்து வருகிறார் என்ற எதிர்மறையான விமர்சனமும் அவருக்கு எதிராக அதிகரித்து வருகிறது.
இதனால், தனக்கு ஆதரவு கிடைக்காமல் போய்விடுமோ, தனி ஆளாக எவ்வளவு நாள் போராடுவது என்ற கவலைகள் அவரை வாட்டி வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











